You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for March, 2014

தற்போது உலகளாவிய ரீதியில் பெருகி வரும் புற்றுநோய் ஒரு பிரச்சினையாக உள்ளது. இதனை ஆரம்பநிலையில் கண்டறிவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் பல சிக்கலான விலை கூடிய சோதனைகள் செய்ய வேண்டிய தேவை இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்பொழுது வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வரும் சில ஆய்வுகள் புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு எளிய சிறுநீர்ப்பரிசோதனை பேருதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது. ஒருவரின் சிறுநீரைக் கொண்டு அவருக்கு புற்றுநோய் இருக்கின்றதா என்று கண்டறிந்து சொல்லக்கூடிய எளிய பரிசோதனையை வடிவமைக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தை தாங்கள் […]

இலங்கையில் Orienta Tsutsugamushi எனப்படும் ரிக்கெற்சியே வகை ஒட்டுண்ணிப் பக்ரீரியாவினால் ஏற்படுத்தப்படும் நோயே உண்ணிக்காய்ச்சல் ஆகும். இப் பக்ரீரியா கலங்களினுள் மட்டுமே ஒட்டுண்ணியாக வாழ்கின்ற தகவுடையது. இவ் வகைப் பக்ரீரியாக்கள் காவிகள் ஊடாகவே பரம்பலடைகின்றது. இவ் வகைக் காவிகளில் பெரும்பங்கு வகிப்பன உண்ணிகளாகும். அதாவது Larval Trombiculid mites எனப்படும் உண்ணிகளின் குடம்பிகளே பக்ரீரியாக்களைக் காவிச் செல்வது மட்டுமன்றி அவை மனிதனைக் கடிப்பதன் மூலம் ஒட்டுண்ணிப் பக்ரீரியாக்களையும் மனித உடலினுட் செலுத்துகின்றன. உண்ணியின் குடம்பி கடித்த இடத்தில் […]
கடந்த ஆண்டு 177 சிறார்கள் தொழுநோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த சிறார்களில் பெரும்பாலானோர் வடக்கு மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளார்கள். 1000 இற்கு மேற்பட்ட புதிய நோயாளர்கள் ஆண்டுதோறும் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் ஒன்றென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது. இலங்கையில் தொழுநோயாளர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை பல தரப்பிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 2000 புதிய நோயாளிகள் என்ற அளவில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் […]

பதின்ம வயதுக் கர்ப்பம் என்பது அதிகரித்து வருகின்ற பிரச்சினையாகும். 13 வயதுக்கும் 19 வயதுக்கும் இடையில் கர்ப்பம் தரித்தலே பதின்ம வயதுக் கர்ப்பம் எனப்படுகின்றது. உலகத்திலே ஒவ்வொரு வருடமும் சராசரியாக 16 மில்லியன் குழந்தைகள் 15 – 19 வயதிற்கு இடைப்பட்ட தாய்மாருக்கு பிறக்கின்றன. இவற்றில் 95 வீதமானவை அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலேயே நிகழ்கின்றது. இலங்கையிலும் பதின்ம வயதுக் கர்ப்பம் பிரச்சினையாகவே உள்ளது. பதின்ம வயதுக் கர்ப்பம் என்பது மருத்துவரீதியாக மட்டுமல்லாது சமூகப்பிரச்சினையாகவும் உள்ளது. 100 பதின்ம வயதுக் கர்ப்பத்தினை […]

அதிகளவு கட்டுப்பாடற்ற விவசாய இரசாயன பாவனையில் இலங்கைக்கு முதலிடம் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. சிறுநீரக நோய் இலங்கையில் சிறுநீரக நோயாளர்கள் அதிகரிக்க காரணமாகியுள்ள விவசாய இரசாயன உரவகைகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் பாவனையை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் கடந்த 20 ஆண்டுகளாக சில பிரதேசங்களில் மர்மமாக இருந்து வரும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மண்ணில் கலக்கும் விவசாய இரசாயனப் பொருட்களே காரணம் என்று […]

பெரும்பாலான தலைவலிகள் ஆபத்து அற்றவை ஆயினும், சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான ஆபத்தான தலைவலிகளுக்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். மண்டையோட்டுக் குழியினுள் அமுக்கம் அதிகரித்தல். சில வகைத் தொற்றுக்கள். உதாரணம் மூளைய அழற்சி இராட்சதக்கல நாடியழற்சி (Giant Cell Arterilis) மண்டையோட்டுக்குழியினுள் ஏற்படும் குருதிப் பெருக்கு மூளைய முண்ணாண் பாய்பொருளின் கனவளவில் ஏற்படும் குறைவு தலையில் அடி படுதலின் பின்னரான தலைவலி திடீரென ஏற்படும் கண்ணின் அமுக்க அதிகரிப்பு மூளையில் ஏற்படும் கட்டிகள், சீழ்க்கட்டிகள் […]