You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for March 28th, 2014

சலரோகத்துடன் வாழுதல் இன்சுலின் சிகிச்சை உங்கள் குழந்தை இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாததால் இன்சுலினை வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும். இணைத்தயாரிப்பு (மிக்ஸ்ராட்) வகை இன்சுலின் உங்கள் குழந்தைக்கு கொடுக்கப்படும். இதில் நீண்ட நேர, குறுகியநேரத் தொழிற்பாடுள்ள இன்சுலின் வகைகள் கலக்கப்பட்டுத் தாயாரிக்கப்பட்டுள்ளது. கொடுக்க வேண்டிய ஒருநாளுக்குரிய இன்சுலினின் 2/3 பங்கு காலையிலும் 1/3 பங்கு இரவிலும் வழங்கப்படும். இதை உங்கள் வைத்தியர் அறிவுரைப்பார். தற்போது இன்சுலினை ஊசி மூலம் மட்டுமே கொடுக்க முடியும். எதிர்காலத்தில் மாற்று […]

இலங்கையில் பெண்களில் அதிகளவாக (22 வீதம்) ஏற்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் காணப்படுகின்றது. இது பெண்களில் மட்டுமல்லாமல், மார்பக புற்றுநோயின் 1 வீதம் ஆனது ஆண்களிலும் ஏற்படுகின்றது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் பூரணமாகக் குணப்படுத்த முடியும். இதனை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கு சுய மார்புப் பரிசோதனை உதவுகின்றது. மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். – வலியற்ற மார்பக கட்டிகள் அல்லது திடீரென அளவில் அதிகரிக்கும் கட்டிகள் – ஒரு பக்க மார்பகத்தின் பருமன் […]

காற்று மாசடைவதே உலகின் சுகாதாரத்திற்கு ஒரே பெரிய அச்சுறுத்தல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2012 ஆண்டில் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் காற்று மாசுபாடால் இறந்துள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலான மரணங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள ஏழை, நடுத்தர வருமான நாடுகளில் ஏற்பட்டுள்ளன. வீடுகளின் உட்புறச் சமையல் அறைகளில் சமையல் நெருப்புடன் வேலை செய்யவேண்டியிருக்கும் பெண்களும் அவர்களின் குழந்தைகளும் அளவிற்கு மீறி பாதிக்கப்படுவதாக அந்த அமைப்பு […]