You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for March 26th, 2014

சலரோகம் என்பது என்ன? ஒருவர் சுகதேகியாக இருப்பதற்கு உடலிலுள்ள பல தொழிற்பாடுகள் உதவுகின்றன. அவற்றில் ஒன்று உடலிலுள்ள வெல்லத்தின் (குளுக்கோசு) அளவை ஒரு சமநிலையில் வைத்திருப்பதாகும். எங்கள் உடலில் சதையி எனும் சுரப்பி வயிற்றுப் பகுதியில் உள்ளது. இது இன்சுலின் எனப்படும் பதார்த்தத்தைச் ( ஹோர்மோன்) சுரக்கிறது. இன்சுலின் குருதியிலுள்ள வெல்லத்தின் அளவைக் குறிப்பிட்ட வரையறையுள் பேண உதவுகின்றது. நாம் உணவுண்ணும் போது இரத்தத்தில் வெல்ல மட்டம் கூடுகின்றது. இதன்போது சதையி இன்சுலினைச் சுரந்து வெல்லமட்டத்தை இரத்தத்தில் […]
வலிப்பு வியாதி என்றால் என்ன?வலிப்பானது மூளையின் நரம்புக்கலங்களில் சடுதியாக ஒரே நேரத்தில் ஏற்படும் அதிகரித்த இயக்கத்தின் வெளிப்பாடு ஆகும். வலிப்பு வியாதியினால் அவதியுறுபவருக்கு இலகுவில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்ப்பட்ட வலிப்புகள் வருவது மட்டுமல்லாது இதன் தாக்கத்தினால் ஞாபகசக்தியின்மை நுண்ணறிவு குன்றுதல் உளவியல் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் பாதிப்புகள் ஏற்டலாம். வலிப்பு வருவதற்குரிய காரணிகள் எவை? நிறமூர்த்தத்தில் ஏற்படும் குறைபாடுகள் ( அரிதானது) மூளையில் ஏற்படும் காயம் அல்லது வடு காரணிகள் அறியப்படாமை (பொதுவானது) முதன்முறையாக […]

வாய்ப்புற்றுநோய்க்கு முக்கிய காரணம் பாக்கு ஆகும்.ஆசியாவின் பல பகுதிகளில் பாக்கு மெல்வது என்பது ஒரு சாதாரண விஷயம். ஆனால் இவ்வாறு செய்வதால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும், அதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையானது, கடந்த 40 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தாய்வான் மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தாய்வானின் சுங் ஷான் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வாய் புற்றுநோயால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரில் 13 பேர் மரணம் அடைவது தெரியவந்துள்ளது. தாய்வானின் […]