You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for March 6th, 2014

பதின்ம வயதுக் கர்ப்பம் என்பது அதிகரித்து வருகின்ற பிரச்சினையாகும். 13 வயதுக்கும் 19 வயதுக்கும் இடையில் கர்ப்பம் தரித்தலே பதின்ம வயதுக் கர்ப்பம் எனப்படுகின்றது. உலகத்திலே ஒவ்வொரு வருடமும் சராசரியாக 16 மில்லியன் குழந்தைகள் 15 – 19 வயதிற்கு இடைப்பட்ட தாய்மாருக்கு பிறக்கின்றன. இவற்றில் 95 வீதமானவை அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலேயே நிகழ்கின்றது. இலங்கையிலும் பதின்ம வயதுக் கர்ப்பம் பிரச்சினையாகவே உள்ளது. பதின்ம வயதுக் கர்ப்பம் என்பது மருத்துவரீதியாக மட்டுமல்லாது சமூகப்பிரச்சினையாகவும் உள்ளது. 100 பதின்ம வயதுக் கர்ப்பத்தினை […]

அதிகளவு கட்டுப்பாடற்ற விவசாய இரசாயன பாவனையில் இலங்கைக்கு முதலிடம் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. சிறுநீரக நோய் இலங்கையில் சிறுநீரக நோயாளர்கள் அதிகரிக்க காரணமாகியுள்ள விவசாய இரசாயன உரவகைகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் பாவனையை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் கடந்த 20 ஆண்டுகளாக சில பிரதேசங்களில் மர்மமாக இருந்து வரும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மண்ணில் கலக்கும் விவசாய இரசாயனப் பொருட்களே காரணம் என்று […]