You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for February, 2014

01. யோகா இன்றைய நவீன உலகில் யோகக் கலை பற்றிய பிரக்ஞை பெரிதும் உணரப்பட்டுள்ளது. தமிழரின் பண்டையக் கலையான யோகக் கலை தற்போது கடல் கடந்த நாடுகளில் வாழும் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. எமது வாழ்க்கை முறை தற்போது பெரிதும் மாற்றமுற்றுள்ளது. பொருளீட்டு முனைப்பினால் மனிதன் வேகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறான். உடலுழைப்புக்குப் பதிலாக இயந்திர சாதனங்களின் வளர்ச்சியால் அவற்றின் துணையுடன் பல வேலைகளை நிறைவேற்றுகிறான். இதனால் மனிதனின் உடலுள ஆரோக்கியம் பாதகமாக மாறுவது தவிர்க்க முடியாததாகும். அந்த […]

09.02.2014 அன்று யாழ் போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிப் பாடசாலையில் சமையல் போட்டி நடைபெற்றது. இதில் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான ஆரோக்கிய உணவை மேம்படுத்தும் முகமாக தேர்ந்து எடுக்கப்பட்ட 26 போட்டியாளர்கள் தாங்கள் புதிதாகக் கண்டுபிடித்த உணவை அறிமுகப்படுத்தினார்கள். பல் துறைசார் வல்லுனர்கள் 10 பேரும், 15 பாடசாலை மாணவர்களும் மத்தியஸ்தர்களாகப் பங்குபற்றினார்கள். சுவை, தரம், போசணைப் பெறுமானம், செலவு குறைந்த உணவு வகை, சமைக்கக் கூடிய நேரம், மூலப் பொருட்களுக்கான கிடைக்கும் தன்மை போன்றன கருத்தில் […]

ஆஸ்துமாவை வெற்றி கொள்வோம்

உடல்நிறைக்குறைப்பு என்ற கலையை வெற்றிகரமாக அரகேற்றுவதற்கு நாம் கடந்து செல்லவேண்டிய முக்கியமான படிநிலைகள் எவை என்பதை அறிந்துவைத்திருப்பது அவசியமாகும் அவற்றில் சில முக்கியமான படிநிலைகள் வரிசைப்படுத்துவோமாயின் 1. “நான் உண்பது மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது எவ்வளவோ குறைவு ஆனால் நிறை தானாக அதிகரித்து வருகின்றது” என்ற தப்பவிப்பிராயத்தை நீக்குதல் வேண்டும். நாம் உண்ணும் உணவின் அளவை மற்றவர்கள் உண்ணும் அளவுடன் ஒப்பிட முடியாது காரணம் ஒவ்வொரு உடம்புக்குமான உணவுத்தேவை வேறுபடும். 2. ”இது பரம்பரை உடம்பு அல்லது […]

சிவபூமியாகக் கருதப்பட்ட இலங்கை இன்று பஞ்சமா பாதகங்களின் இருப்பிடமாக மாறிவருவது வருத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஆம்! அண்மைய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தரும் உண்மை வெளியாகியுள்ளது. உலகில் அதிக மதுபாவனை உள்ள 4 நாடுகளில் ஒன்றாக நமது இலங்கையும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. 2015ம் ஆண்டில் 93.1 மில்லியன் லீற்றர் மதுபானக் கொள்வனவு இருக்குமெனவும் 2.6 வீதம் வருடாந்த வளர்ச்சியாக இது இருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது மட்டுமன்றி 11.2 லீற்றர் இலங்கையின் தனிநபரொருவர் குடிப்பதாகவும் (நானும் […]

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் நோய் என்று கூறலே நிறைவான நவநாகரிகமாக மாறி வருகின்றது. அபிவிருத்தியடைந்த பணக்கார நாடுகளில் மட்டுமன்றி இலங்கையிலும் கூட தொற்றல்லா நோய்களின் (Non Communicable Diseases) தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றமை கண்கூடு. ஒருவருக்கு உடல்நிறை, உயரம் என்பன தனித்துவமானதாக, அவருக்கே உரியதாக இருப்பதைப் போன்று, குருதியமுக்கமும் தனிநபருக்குரியதாகும். சாதாரண ஒருவரிலே நியமக் குருதியமுக்கமானது <120/80 mmHg ஆக இருத்தல் சிறந்தது எனவும், 120-129/<80-84 mmHg சாதாரணம் […]