You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for January, 2014
நம்மில் பலர் “மாப் பொருள்களுக்கு அடிமையாதல்” என்ற நிலையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பது எமக்குத் தெரியாது. இந்த நிலை பல நோய்களுக்கு காரணமாக அமைவதுடன் நிறை அதிகரிப்பிற்கான முக்கிய காரணமாகவும் அமைகின்றது. புகைத்தலுக்கு அடிமையாகி, குடிவகைகளுக்கு அடிமையாகி, போதைப்பொருட்களுக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி நன்கு அறிந்துவைத்திருக்கின்றோம். ஆனால் பெருந்தொகையான மக்களைப் பாதித்து பல மரணங்களுக்கும் தாக்கங்களுக்கும் காரணமாக இருக்கின்ற “மாப்பொருள்களுக்கு அடிமையாதல்” என்ற நிலை பற்றி நாம் கவனம் செலுத்துவது மிகவும் குறைவாக இருக்கின்றது. மாப்பொருள் என்றால் என்ன? மாப்பொருளுக்கு […]
கடந்த பல வருடங்களாக, யாழ் போதனா வைத்தியசாலையில், குழந்தைகள் பராமரிப்புப் பிரிவானது, ஒரு சிறிய இடத்திலேயே, இடவசதிக் குறைவுடன் இயங்கி வந்தது. கடந்த வருடங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் பலனாக, பல்வேறு உபகரணங்கள் பெறப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவாக இயங்குவற்கு வாய்ப்பு உண்டாகியது. எனினும் இடவசதிப் பற்றாக்குறையினால் அதன் முழுப் பலனையும் அடைய முடியவில்லை. அண்மையில் யாழ்போதனாவைத்திய சாலையின் முன்னைய மகப்பேற்று அறுவைச் சிகிச்சை கூடப் பகுதியானது புனரமைக்கப்பட்டு 16.01.2014 அன்று Dr. முருகையா தம்பதிகளால் திறந்து வைக்கப்பட்டது. […]
பசிவந்திட பத்தும் பறந்து போகும் என்று சொல்லுவார்கள். இது முற்றிலும் உண்மையானதே. காரணம் மூளையில் இருக்கும் பசியுடன் சம்பந்தமான பகுதி மிகவும் வல்லமை பொருந்தியது. நிறை குறைக்க முற்படும் காலத்திலே ஒருவருக்கு பசி ஏற்படுமாயின் அது அவரின் நிறை குறைப்பு சம்பந்தமான அறிவையும் நிறைகுறைக்கு வேண்டும் என்ற ஆர்வத்தையும் அற்றுப்போகச் செய்துவிடும். எனவே இந்தக் காலப்பகுதியிலே பசி ஏற்ப்படாதவாறு நிறை அதிகரிப்பை அதிகம் ஏற்ப்படுத்தாத உணவுகளை அடிக்கடி உண்பது அவசியமாகும். சிலவகையான உணவுவகைகளை அதிகளவு உண்டாலும் சிறிதளவு […]
சுவை குன்றாமல் நிறை அதிகரிக்காமல் எவற்றை உண்ண முடியும் என்பதையும் சிறிய அளவு உட்கொண்டாலும் பெருமளவு நிறை அதிகரிப்பை ஏற்படுத்த வல்ல அதாவது கலோரி பெறுமானம் கூடிய உணவு வகைகள் எவை என்பதையும் நாம் அடையாளப்படுத்த வேண்டும். கலோரிப் பெறுமானம் கூடிய உணவுவகைகளை தவிர்த்து அவற்றிற்கு மாற்றீடாக எவற்றை உண்ணமுடியும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். சீனி, சர்க்கரை, பனங்கட்டி அல்லது இவை சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகள் அல்லது பானங்கள் போன்றவற்றை சிறிதளவு உட்கொண்டாலும் பெரும் நிறை […]