You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for December, 2013

சுற்றாடல் குளிர்ச்சி பெறவும், ஆரோக்கியமான ஜம்பு பழ பாவனையை அறிமுகப்படுத்தவும் யாழ் போதனா வைத்திய சாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையம் யாழ் குடாநாடு முழுவதும் 1ம் கட்ட நடவடிக்கையாக 5000 ஜம்பு மரக்கன்றுகளை நாட்டும் திட்டத்தை நிறைவு செய்திருக்கின்றது. இத் திட்டத்தின் மூலம் 16 பாடசாலைகள், 55 வைத்தியசாலைகள், முதியோர், சிறுவர் இல்லங்கள், உட்பட 13 சமூக அமைப்புகளுக்கும் பொது நூலகங்கள், நீதிமன்றம் மற்றும் வங்கிகள் உட்பட்ட பல்வேறு இடங்களில் ஜம்பு மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. இதற்க்காக நிதி […]

வாழ்க்கையில் சறுக்கி விழுவோர் பலர். இவர்கள் இளைஞர்களாகவே உள்ளனர். ஆனால் முதியோர் மத்தியில் அதாவது அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்டோரில் பலர் விழுகின்றனர். ஆண்டு தோறும் முதியோர் விழும் நிகழ்வுகள் அதிகரித்துச் செல்கின்றது. இந்த அதிகரிப்பானது முதியோரின் தொகை அதிகரிப்பை கோடிட்டுக் காட்டுகின்றது. சுமார் 10-20 விதமான விழுதல்களில் காயங்கள் ஏற்படுகின்றன. பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் காயங்களாக எலும்பு முறிவுகள், மூட்டு விலகல்கள், பெரிய தலைக் காயங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். 65 வயதிற்கு மேற்பட்டோரிடம் காணப்படும் மூளைக் காயங்கள் […]

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, என 5 மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாணத்திலே யாழ் போதனாவைத்தியசாலை மட்டுமே உயர் மட்ட வைத்திய வசதிகளைக் கொண்ட (Tertiary) வைத்திய சாலையாக காணப்படுகின்றது. இங்கு வைத்தியத் தேவையை எதிர் நோக்கியுள்ள மொத்த சனத்தொகை 1.2 மில்லியன் எனினும் இத் தொகை மேலும் அதிகரித்துச் செல்வதையே காணக்கூடியதாக இருக்கின்றது. அதற்க்கான பிரதான காரணங்களாவன. அயல் நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தம் தாய் மண்ணிற்குத் திரும்பி வரும் நிலை தற்போது […]