You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for December, 2013

“கண்டதும் கற்றவன் பண்டிதன் ஆவான் கண்டதும் உண்டவன் பண்டிபோல் குண்டாவான்” என்று பலரும் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நம் முன்னோர்கள் கூறிவைத்திருக்கிறார்கள். எனவே நாம் எம் முன்னவர்களின் கருத்துக்களையும் கருத்தில் எடுத்து. ஆரோக்கியமாக சுவையாக நிறைவாக உண்டு எமது நிறையை சரியான அளவில் பராமரிக்கும் கலையை கற்றுக்கொள்ள முயலுவோம். நிறையை குறைத்துக் கொள்வதற்கு பட்டிணி கிடக்கவேண்டிய அவசியமில்லை. பட்டிணி கிடந்து நிறையை குறைத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. நிறை குறைப்பதற்கு முயற்சி […]

யாழ்ப்பாணத்தில் தற்போது போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. இலங்கையில் போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தல் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு 2013ம் ஆண்டிலேயே கூடுதலாககாணப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ள நிலையில் யாழிலும் முன்னைய காலங்களிலும் பார்க்க இச்சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது அண்மையில் யாழிலும் சட்டவிரோத போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அண்மைய நாட்களில் கைப்பற்றப்பட்ட இரண்டு ஹெராயின் கொள்கலன்கள் உட்பட இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக சுமார் […]

எமது உடல் நிறையை சரியான அளவில் பேணிக் கொள்வதும் ஒரு கலையே! திருமூலர் திருமந்திரத்திலே “உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்” என்று சொல்லி உடலை ஆலயத்துடன் ஒப்பிட்டிருக்கின்றார். அந்த ஆலயத்தை அழகுற பராமரிப்பது கலை மட்டுமல்ல எமது கடமையுமாகும். “ உடல் நிறையை குறைப்பது இயலாதகாரியம், பட்டினிகிடக்க வேண்டி வரும், நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம்” என்ற ஒரு தப்பவிப்பிராயம் பொதுவாக நிலவிவருகிறது. மிகவும் சிறிதளவு உணவை உட்கொண்டும் கூட நிறை தானாகக் கூடிவருகிறது. எவ்வளவு வேலைகளைச் […]