You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

செய்முறை மேலே கூறப்பட்ட எல்லா மாவகைகளையும் அரித்து கலந்து உப்புத்தூள் தேங்காய்பூ, ஏலக்காய்தூள், சேர்க்கவும். பின் பால் மாவுடன் சுவையூட்டியையும் சேர்த்து சுடுநீரில் கரைத்து கலவை மாவுடன் சேர்த்து குழைத்து உருண்டைகளாக்கிப் பரிமாறவும். முறைகட்டிய பயறு மா தயாரிப்பதற்கு பயறை 10 மணித்தியாலம் ஊறவிட்டு பின் 10 – 12 மணித்தியாலம் முளைக்க வைத்து ( தட்டில் பரவி மூடி வைக்கவும்) பின் தோலை நீக்கி கழுவிய பின் வெயிலில் 2 – 3 நாட்கள் காய […]

செய்முறை பயறு, பருப்பு என்பவற்றை வறுத்து தூளாக்கவும், பாலை நன்றாகக் காய்ச்ச வேண்டும். பின்னர் இனிப்பூட்டி இட்டுக் கொள்ள வேண்டும். மேற்கூறிய பழங்களை சிறுதுண்டுகளாக்கி பின்னர் பாலிற்கு இடவும். பால் இறுகி வந்த பின்னர் வறுத்து தூளாக்கிய பருப்பு, பயறு என்பவற்றை சேர்த்துக் குழைக்க வேண்டும். தட்டையாக தட்டி பின்னர் oven இல் அவித்துக் கொள்ளவேண்டும். தேவையான பொருட்கள் பால் ( பசுப்பால்) ½போத்தல் பருப்பு 500 கிராம் பயறு 500 கிராம் அன்னாசிப்பழம் பாதித்துண்டு பப்பாசிப்பழம் […]

செய்முறை உழுந்தை வறுத்து திரித்து மாவாக்கிக் கொள்ளவும். பின்பு சிறிதளவு நீர் விட்டு கரைக்கவும். பசுப்பாலை நன்கு கொதிக்க விட்டு கொதித்த பின் அதனுள் உழுத்தம்மா கலவை, ஏலக்காய் என்பவற்றை சேர்த்து கலக்கவும். தேவையெனின் சுவையூட்டி சேர்க்கலாம். தேவையான பொருட்கள் பசுப்பால் ½போத்தல் உழுத்தம்மா 250 கிராம் ஏலக்காய் சிறிதளவு சுவையூட்டி தேவைக்கேற்ப இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி லோகராணி இராசேந்திரம்

செய்முறை முருங்கையிலை, சிறுகுறிஞ்சா இலை என்பவற்றை வெயிலில் உலர்த்தி பின் கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். நெல்லிக்காய் வற்றலையும் கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். இந்தக்கலவையில் 3 தேக்கரண்டி எடுத்து ஒரு தம்ளர் சுடுநீரில் சில நிமிடம் ஊறவிட்டு வடிகட்டி எடுக்கவும். வடித்த தேநீரில் தேவைப்படின் இஞ்சி சேர்க்கலாம். இனிப்பு தேவையானால் சுவையூட்டி சேர்க்கலாம். அல்லது தேநீரில் சிறிதளவு எலும்மிச்சம்பழச்சாறும் உப்பும் சேர்த்து சூடாகவோ குளிராகவோ அருந்தலாம். தேவையானால் பால் சேர்க்கலாம். தேவையான பொருட்கள் முருங்கையிலைத்தூள் (உலர்ந்தது) 100 கிரம் […]

தேவையான பொருட்கள் வாழைத்தண்டு சாறு ( வடித்தது) 100ml பப்பாளிப்பழ சாறு 200ml பாகற்காய் சாறு 50ml மாதுளம்பழச் சாறு ½ கப் ஐஸ்கட்டி தேவையான அளவு இனிப்பூட்டி தேவையான அளவு செய்முறை வாழைத்தண்டை பிழிந்து சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும். பப்பாளிப்பழம், பாகற்காய், மாதுளம் பழம் என்பவற்றை தனித்தனியாக சாறாக்கிக் கொள்ளவும். பின்பு இவை எல்லாவற்றையும் Blender இல் அடித்து எடுக்கவும் எடுத்த சாற்றுக்குள் ஐஸ்கட்டி இட்டு பரிமாறவும். தேவையானால் இனிப்பூட்டி சேர்க்கலாம். இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் […]

நீரிழிவு நோய் உலகையே அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து நிற்பது உங்களுக்குத் தெரியும்.உலகளாவிய அளவில் ஏறத்தாழ 400 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் 15 ஆண்டுகளில் இந்தத் தொகை 600 மில் லியன்களைத்தாண்டும் என்று எதிர்வு கூறப்படுகிறது. உலகுடன் ஒப்பிடும்பொழுது இலங்கையில் குறிப்பாக வட பகுதியில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இலங்கையிலே நாடளாவிய ரீதியில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி 10.3 வீதமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வில் நாட்டின் […]

நாம் எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்களுக்குப் பரிசுப்பொருட்களைத் தெரிவுசெய்யும்போது அது அவருக்கு உடற்சுகத்தைக் கொடுக்கக்கூடியதாகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியதாகவும் நல்ல நினைவுகளைக் கொடுக்கக்கூடியதாகவும் பிரயோசனப்படக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது. அந்த வகையில் பின்வரும் பொருட்களைக் கருத்தில் எடுக்கலாம். “பழங்கள், முட்டை, ஓவியங்கள், நல்ல புத்தகங்கள், பதிவேடுகள், உடை, தலைக்கவசம், குடை, பாரம் குறைந்த பாதணிகள், வீட்டில் சமைத்த பலகாரங்கள், முட்டைமா, பயற்றம்மா, உழுத்தம்மா, வேலைசெய்யும்பொழுது அணியும் கையுறை, உடற்பயிற்சி செய்யும் இயந்திரம், தாவரங்கள், விதைகள் ” போன்றவை. இப்பொருட்கள் […]

நோயாளிகள் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்படி எடுப்பதன்மூலமே முழுமையான குணப்படுத்தலைப் பெறமுடியும். மருந்துகளின் எண்ணிக்கையோ மருந்துகள் எடுக்க வேண்டியதற்கு இடையிலான கால அளவையோ தமது விரும்பின்படி மாற்றக்கூடாது. ஏனெனில், இவை இரண்டும் மருந்து இரத்தத்தில் நின்று செயற்படும் திறனை வைத்தே கணிக்கப்பட்டு வைத்தியரால் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, இவற்றைக் குறைப்பதன்மூலம் செயற்றிறன் குறைக்கப்பட்டு, குணமடைதல் தாமதப்படுத்தப்படும். எனினும், இவற்றைக் கூட்டுவதன்மூலம் மருந்தின் செயற்றிறனை அதிகரிக்கமுடியாது. மாறாக, அது நச்சுத்தன்மைக்கும், சிறுநீரகப் பழுதடைதலுக்கும் வழிவகுக்கும். மருந்து ஒன்று காலையும் மாலையும் எனப் […]

யாழ். போதனா வைத்தியசாலையின் பார்வையாளர் நேரம். புயல்போலப் பார்வையாளர்கள் புகுந்துவிடுகிறார்கள். பொத்தி வைத்திருக்கின்ற அவர்களின் பொறுமையெல்லாம் வைத்தியசாலை வளைவுகளில் ஏனோ பீறிட்டுப் பாய்கின்றது. எதைப் பற்றிக் கூறுகிறோம் என்பது இன்னும் தெளிவாகவில்லையா? ஆம் நமது மக்கள் விதிமுறைகளையும், நடைமுறைகளையும் வாசிப்பதுடன் விட்டு விடுகிறார்கள். பலர் வாசிக்காமலேயே போய்விடுகிறார்கள். ஆஸ்பத்திரி வளாகத்தில் பாதையெங்கும் வலது பக்கமாகப் போகவும் எனத் தெளிவாக எழுதி ஒட்டப்பட்டுள்ளது. இருந்தும் மக்கள் தேர்த்திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்பவர்கள்போல முண்டியடித்து முன்னேறுகிறார்கள். சிலர் பல நாள் […]

செய்முறை மரக்கறிகளை கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி பாத்திரத்தில் இடவும். நனைத்த துவரம்பருப்பை சேர்த்து நன்றாக அவிய விடவும். அவிந்து நீர்வற்றி வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி கலவையை மசித்தல் வேண்டும். பின் உப்பு, மிளகு, மஞ்சள் தூள், சீரகத்தூள், சேர்த்து மீண்டும் சிறிது சூடாக்கி கூழ்பதம் வரும் போது இறக்கவும். ஆறியதும் தேசிப்புளி சேர்த்து பரிமாறலாம். தேவையான பொருட்கள் கரட் 1 கோவா சிறிய துண்டு துவரம் பருப்பு 100 கிராம் லீக்ஸ் 1 வெண்டிக்காய் […]