You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

உன் உயிருக்கு உலை வைத்து வாழ்வுக்கு அஞ்சி நஞ்சுண்ணத் துணிந்துவிட்ட நாயகனே! உடலையும் உயிரையும் ஒட்டவைக்கத்தான் எத்தனை போராட்டங்கள் சுடலை வழி மறித்துச் செய்யும் இந்தச் சுதந்திரப் போரிலே நீயும் போராளியாகிப் பார் உயிரின் மகிமை உனக்குப் புரியும். உனக்காக நஞ்சுண்ட நீ கோலையாகிப் பேழையிலே போனபின் உன் பிஞ்சுகளின் இரைப்பை காற்றைக் குடிக்கும், சுவாசப்பை போல உன்னவரின் கனவுகள் கானலாகி கண்ணீர் தவலைகளில் கலங்கிப் போகும் எம் தேவர் குலம் காக்க கழுத்திலே நஞ்சேந்திய திரு […]

புவியின் சராசரி வெப்பநிலை உயர்ந்து பனிமலைகள் உருகிப் போவதனால் பூமி நீரில் அமிழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கப் போகின்றோமா?

தேவையான பொருட்கள் உழுத்தம் பருப்பு – ¼ KG பயற்றம் பருப்பு – தயிர் – சிறிதளவு பச்சை மிளகாய் – சிறிதளவு இஞ்சி- சிறிதளவு செத்தல் மிளகாய் – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு கடுகு – 1மே.கரண்டி சூரியகாந்தி எண்ணெய் – தாளிக்க பச்சை கலரிங் – சிறிது செய்முறை பயறை லேசாக சூடாக்கிய பின் தோல் நீக்கி எடுக்கவும். உழுத்தம் பருப்பை நன்கு ஊறவைத்து அரைக்கவும். ஊறவைத்த பயற்றம் பருப்பை வடித்தெடுத்து அரைத்த […]

ஆகாரம் தன்னை அளவாக அருந்தியதால் சாகாவரம் பெற்ற சால்புடையோம் – நோகாமல் நீட்டி நிமிர்ந்திருந்து நித்தம் விழுங்கியதால் ஆட்டிப் படைக்குதின்று நோய். நிலங்கொத்தி வயலுழுது நீரிறைத்து நிதமுழைத்து நலஞ்சிறக்க வாழ்ந்தகதை தான் மறந்தோம் – சுலபத்தில் எஞ்சின் பிடித்து அதில் ஏறிநின்று ஏப்பம் விடப் பஞ்சாய்ப் பறக்கும் உயிர். நெல்லுக்குத்தி மாவெடுத்து மருந்தாக்கி நோய்நொடியை மல்லுக்கட்டி நின்ற எங்கள் மாதரெல்லாம் – பொல்லாத சீரியலில் குந்தியவர் சிந்தை தொலைத்ததனால் காரியமே கெட்டதென்று காண். கள்ளத்தீன் தின்றுகள்ளோடு களியுண்டு […]

யாழ் போதனாவைத்திய சாலையின் நீரிழிவு சிகிச்சைப் பரிவின் சிந்தனையில் உதித்த புதிய ஆரோக்கிய உணவு தேவையான பொருட்கள் கொள்ளப் பயறு – 100 கிராம் மிளகுத் தூள் – 1தேக்கரண்டி சீரகத் தூள் – 1தேக்கரண்டி சுக்குப்பொடி – 1தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு பச்சை மிளகாய் – 3 வெங்காயம் – 1 தக்காளி – 1 உப்பு – தேவையான அளவு செய்முறை கொள்ளுப் பயறை முதல்நாள் நன்கு கழுவி ஊற வைக்கவும். அடுத்தநாள் […]

சமைக்கின்றபோது குறைந்தளவு உப்பையே சேர்ப்போம். உணவுகளில் சுவையை வாசனையை அதிகரிக்க வாசனை ஊட்டும் திரவியங்களையும், மூலிகைகளையும் பயன்படுத்திக் கொள்வோம். சாப்பாடுகளைத் திட்டமிடும்போது உடனடியாக உண்ணக்கூடிய பக்குவம் செய்யப்பட்ட உணவுகளைவிட சோடியம் குறைவாகக் கொண்டுள்ள உடன் புதிய உணவுகளை கருத்தில்கொள்ளுவோம். உப்பிட்ட, தகரத்தில் அடைக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உற்பத்திகளைவிட உடன் மீன், கோழி மற்றும் இறைச்சிகள் போன்றவற்றில் சோடியம் குறைவாகவுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்வோம். தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தெரிவுசெய்யும் போது குறைந்த அல்லது உப்பே இல்லாது தயாரிக்கப்பட்டவற்றையே […]

அனைத்து வகைத் தீக்காயங்களுக்கும்! உடனடியாக நெருப்பை அணையுங்கள், அல்லது தீக்காரணிகளை அந்த நபரிலிருந்து விலக்குங்கள்.(உதாரணமாக சூடானதிரவம், ஆவி, இரசாயனப் பொருள்கள் போன்றன) தீச்சுவாலை இருப்பின் அந்த நபரை நிறுத்தி ( ஒடுவதையோ அல்லது நடப்பதையோ தவிர்க்க வேண்டும்) நிலத்தில் உருட்டி தீயை அணையுங்கள், மேலும் தடிப்பான போர்வையால் சுற்றி அணையுங்கள். மண்ணால் அணைத்தலை தவிர்க்க வேண்டும்) நீர் இருப்பின் நீரினாலும் அணைக்கலாம். உருகக்கூடிய பொருள்கள் உடலில் காணப்படின் அவற்றை விலக்குங்கள் இருக்கமான ஆடைகளை உடனடியாக விலக்குங்கள், ஆடையின் […]

பாட்டியின் வடையைத் திருடிய காகம் இவற்றைத் தூக்க யோசிப்பது ஏன்?

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதனிலும் அரிது கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் என்பது ஔவையின் வாக்கு. இந்த அரிய மானிடப் பிறவியின் ஒரு சாபக் கேடு போதை வஸ்து. போதை வஸ்து என்னும் போது மது மட்டும் தான் போதை வஸ்து என்பதில்லை கஞ்சா, அபின், ஹோரோயின் போன்ற பல்வேறுபட்ட வகைகள் காணப்படுகின்றன. மாற்றம் என்பதை தவிர எல்லாமே மாறும் என்ற கோட்பாட்டிக்கிணங்க முன்னொரு காலத்தில் சொர்க்க பூமியாக விளங்கிய எமது யாழ் […]