You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

“Frustration is the root of aggression” (விரக்தி வன்முறையின் ஆணிவேராகும்) இது ஒரு உளவியல் ஆய்வு முடிவாகும். வன்முறையென்பது தனக்கெதிராக (Attempted suicide or Self iteming) அல்லது பிறருக்கெதிராக அல்லது இரண்டுமாகக் காணப்படலாம். எமது தமிழ்ச்சமூகத்தில் அண்மைக்காலங்களில் வன்முறையானது மிகவும் அதிகரிப்படைந்து காணப்படுகின்றன. வன்முறைகள் ஒரு நச்சு வட்டமாக (vicious cycle) தொழிற்படுகின்றது. அதாவது வன்முறையால் விரக்தி நிலை கூடும். இதனால் மீண்டும் வன்முறை கூடும். எனவே அந் நச்சு வட்டமானது பல்வேறு படிகளில் […]

இயற்கையை இறைவனாகச் சித்தரித்து வழிபடும் மரபு அன்றுதொட்டு இருந்துவருகின்றது. அந்த இயற்கை என்ற இறைவன் வைத்தியத்திலே விற்பன்னனாக இருப்பதால் அந்த இறைவனுக்கு வைத்தீஸ்வரன் என்றும் ஒரு பெயா் இருக்கிறது. நோய்த்தடுப்புக்கும் நோய் குணமாக்கலுக்கும் அடி நாதமாய் விளங்கும் இயற்கை மூலமாகக் கிடைக்கும் வளங்களை அசட்டைசெய்து செயற்கையான பொருட்களின் கால்களிலே நாம் முற்றாக சரணாகதி அடைந்துகொண்டிருக்கிறோம். அதனால் நோய்வாய்ப்பட்டுக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கை செயற்கைத்தனமாகி, இயந்திரமாகி, உணவுவகைகள் கூட பக்கற்றுகளிலும் பேணிகளிலும் வருகின்ற இரசாயன உணவுகளாக மாறி, பானங்கள் எல்லாம் போத்தலில் […]

வாகனத்தின் வேகத்தை அதிகரித்து சில நிமிடங்களை சேமிக்க நினைக்கும் நீங்கள் பல நாட்கள் படுக்கையில் இருக்க நேரிடும் விபத்துக்களைப் பற்றி நினைப்பதிலையோ? எவ்வளவு மெதுவாக வாகனத்தை செலுத்துகின்றீர்களோ அவ்வளவு விபத்துக்களையோ அல்லது விபத்தின் தீவிரத்தன்மையையோ குறைத்துக் கொள்ளலாம். சிந்தியுங்கள்!!, செயற்படுங்கள் !!

இன்றைய மனித சமூகமோ கோபத்தினால் குடும்பத்தையும் குலைத்து சமூகத்தையும் சீர்குலைத்து எங்கும் வன்முறையும், அடாவடியுமாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மனிதன் என்பவன் பலவகை உணர்வுகளால் அளப்படுகிறான். அவன் ஆசை, கோபம், மகிழ்ச்சி, பயம், காமம், கவலை, ஏக்கம், இரக்கம் போன்றவற்றால் இயக்கப்படுகின்றான். இவற்றுள் எது கூடினும் எது குறையினும் அது நோய் நிலையாகத்தான் கருதப்படும். ஆகவே மனிதன் எல்லாவற்றுக்கும் அளவோடு இருப்பானாயின் அவன் இந்த பூமியில் குழப்பமில்லாமல் வாழலாம். இதை வள்ளுவர் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார். “எது மிகினும் […]

வாயை சுகாதாரமாக வைத்திருக்க பற்களை நன்றாக பராமரிக்க வேண்டும். காலை எழுந்தவுடனும் இரவு நித்திரைக்கு செல்ல முன்பும் நாளுக்கு இருமுறை பல்துலக்க வேண்டும். ஒவ்வொருமுறை உணவு உண்ட பின்பும், நன்றாக அலசி வாயைக் கொப்பளிக்க வேண்டும். அச்சமயம் வெறும் தூரிகை கொண்டு சுத்தம் செய்வது நன்று. பற்தூரிகை வாங்கும்போது சிறிய தலையுடைய மிருதுவான வகையாக வாங்குவது நன்று. அப்போதுதான் பற்களின் வெளி மற்றும் உட்புறத்தை இலகுவாக சுத்தம்செய்ய முடியும். நான்கு மாதத்துக்கொருமுறை அதை மாற்ற வேண்டும். ஒரு […]

ஒரு மிதமான பொழுதுபோக்கிற்காக, நண்பர்களுடன் கலந்துரையாடும்போது பிடிப்பதாக இருந்த இந்த வெண்சுருட்டுகள் இன்று அனைத்து தரப்பிலும், பழக்கமாகிப் போய், அதை விட்டொழிக்க முடியாமல் தள்ளாத வயதிலும் தடுமாற்றத்தோடு அதை தவறாமல் புகைத்து வருகிறார்கள். புகைப்பவருக்கு புகை பல்வேறு நோய்களை தருவது மட்டுமின்றி, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இலவசமாக நோய்களைத் தந்து விடுகிறது என்பதுதான் புகைப்பவர்கள் தன்னையும் அறியாமல் செய்யும் கொடும் செயல்! அப்படி என்னதான் புகையால் தீமைகள் ஏற்படுகின்றன? என்றால், முதலில் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் […]

தகரத்தில்,பக்கற்றுக்களில் அடைத்த உணவுப்பொருட்களைவிட இயற்கையாகக் கிடைக்கக்கூடிய உணவுப்பொருட்களே நம் உடலுக்கு சிறந்தவையம் ஆரோக்கியமானதாகவும் உள்ளது.

தாய்ப்பாலின் உன்னதத் தன்மையைப் பற்றியும், அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றியும் பெரும்பாலானோர் அறிவர். எனினும் வெற்றிகரமாக தாய்ப்பாலூட்டலைச் செய்வதில் அநேக தாய்மார் சிரமப்படுகின்றனர். இதனால் தான் தாய்ப்பாலூட்டல் சம்பந்தமான ஆலோசனைகளும் அறிவூட்டல்களும் சுகாதார சேவையாளர்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. எமது சுகாதார அமைச்சும் தாய்ப்பாலூட்டலை ஊக்குவிப்பதற்கு பல வழிகளிலும் முயற்சிகள் எடுத்து வருகின்றது. அதன் ஒர் அங்கமாக 2013ம் ஆண்டு ஆவணி மாதத்தின் முதல் வாரத்தை ( 1 – 7ம் திகதி) தேசிய தாய்ப்பாலூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தி […]

வயது மூப்படையும்போது சிலருக்கு கூனல் ஏற்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்தக் கூனல் ஏற்பட ஒஸ்ரியோபொரசிஸ் என்னும் நோய் நிலைமையே காரணமாகும். ஒஸ்எயோபொரசிஸ் என்ற நோய் எலும்புகளின் அடர்த்தி குறைவதனாலேயே ஏற்படுகின்றது. இந்த நோய் மனிதர்கள் மூப்படையும் போது தானாகவோ அல்லது தொடர்ச்சியான சில குறித்த மருந்துப்பாவனைகளின் விளைவாகவோ ஏற்படலாம். இந்த நோய் நிலைமையால் எலும்புகள் வலுவிழந்து உடையும் தன்மை அதிகரிக்கின்றது. இதனால் பொதுவாக முள்ளந்தண்டு எலும்புகளே உடையக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கின்றது. இந்த நோய் வயது மூத்தவர்களிடம் […]