You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

மங்கோலிஸநிலைமையானது 21ஆம்பரம்பரை அலகில் ஏற்படும் பிறழ்வானசேர்க்கையால்பிறப்பின்போதே உடல் உளசார்பான அசாதாரண குணங்குறிகளைக்காட்டுவதைக் குறிப்பிடும். இந்த நிலைமையானது (JoHn London Down) இனால் விவரிக்கப்பட்டமையால் அவரின் பெயரால்”Down Syndrome“ என அழைக்கப்படுகிறது. இந்த நிலையானது உடல் வினைத்திறன் மற்றும் மூளையின் வினைத்திறனைப்பின்னடைவான வளர்ச்சியிலேயே கொண்டுசெல்லும் தாயின் கர்ப்பகால வயது 35 வருடங்களைத்தாண்டுகையில் பிறக்கும்பிள்ளைகள் இவ்வாறான குறைபாடுகளைக் கொண்டிருக்க சாத்தியப்பாடு உள்ளது. இந்தநிலைமையை அறிந்து கொள்வதற்காக கர்ப்பகாலத்திலேயே தாயின் வயிற்றை ஸ்கான்செய்து பார்த்தல்தாயின் வயிற்றினூடு ஊசியைச் செலுத்தி சிசுவைச்சுற்றியுள்ள சடை […]

நீரிழிவு நோய் கண், மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகத்தைப் பாதிக்கும். இந்த நோய் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட பார்வைக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். கண்ணில் முக்கியமாக பின்புறமுள்ள விழித்திரையின் குருதி நாளங்களைப் பாதிக்கும். விழித்திரையில் ஏற்படும் மாறுதல்களை கண்மருத்துவர்களால் மட்டுமே பரிசோதித்து கண்டறியமுடியும். மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகங்களிலும் இதே மாறுதல்கள் ஏற்படுவதால் இந்தப் பரிசோதனை மூலம் இவற்றின் தன்மைகளையும் அறிய முடியும். நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோயின் தீவிரம் மற்றும் […]

ஒரே ஊசியை நீண்ட நாள்களுக்கு தொடர்ந்து பாவித்தல் கூடாது. (3 நாள்களுக்கு மேற்படல் கூடாது) ஊசிமருந்து குளிரூட்டியில் வைக்கப்பட்டு இருந்தால் பாவிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் அறை வெப்ப நிலையில் வைத்தல் வேண்டும் ( குளிர் வலியை அதிகமாக்கும்) மெல்லிய கூர் உடைய ஊசியைத் தெரிவு செய்தல் வேண்டும். உள்ளங்கைகளுக்கு இடையில் வைத்து ஊசி மருந்தை மெதுவாக உருட்டல் வேண்டும். ஊசிபோடும் உடலின் பகுதியை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை மாற்றுதல் வேண்டும். சவர்க்கார நீர் கொண்டு […]

இன்சுலின் ஊசி மருந்தை பாவிப்பது எப்படி? கைகளைச் சுத்தமாகக் கழுவுதல் வேண்டும். இன்சுலினையும் சரியான கருவியையும் தெரி செய்தல் ( இன்சுலின் சிறிஞ் 29G/100 Unit) இன்சுலின் குப்பியில் ஒட்டப்பட்ட தாளை சரிபார்த்தல் வேண்டும் ( இன்சுலின் வகை, காலாவதி திகதி, மருந்துதின் அளவு) உணவு தயாராக உள்ளது என்பதை உறுதி செய்தல் ( ஊசி ஏற்றி அரை மணித்தியாலத்துக்குள் சாப்பிடல் வேண்டும்) ஊசி ஏற்றுவதற்கான உடலின் பகுதியைத் தெரிவு செய்தலும் சுத்தப்படுத்தலும் ( மேல் கை, […]

உடலின் தசையி சுரப்பியினால் ( Pancreas B cell ) சுரக்கப்படும் ஹோர்மோன் இன்சுலின் (Insulin) ஆகும். இது உடலின் உயிர்க் கலன்களுக்குத் தேவையான குருதியிலுள்ள குளுக்கோசை உயிர்க்கலத்தினுள் உற்செலுத்த உதவுகின்றது. இன்சுலின் தொழிற்பாடு குறைவதனாலோ ( Insulin resistant) அல்லது தசையி சுரப்பியினால் குறைவதாக சுரப்பதனாலோ அல்லது சுரக்கப்படும் இன்சுலின் தரம் குறைவதனாலோ இது போன்ற காரணங்களால் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு கூடி இறுதியில் சிறுநீருடன் வெளிச் செல்வதே நீரிழிவு ஆகும். இதனை ( Diabetes […]

ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளைச் சிறந்த பிள்ளைகளாகவே வளர்க்க விரும்புகின்றார்கள். இதற் காகவே அல்லும் பகலும் கஷ்டப்படுகின்றார்கள் இருந்தபோதிலும் சில பிள்ளைகள் வழிதவறிப் போவதும் சில பிள்ளைகளின் கல்வி மட்டம்தாழ்ந்து போவதும்நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இதற்கான காரணங்கள்தான் என்ன? இவர்களின் வளர்ப்பு முறை சரியானது தானா? எனும் கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது. இன்றைய பொற்றோர் தம் பிள்ளைகள் பன்னாட்டுப்பாடசாலைகளில் படிக்கவேண்டும்.நல்ல பதவிநிலை அடையவேண்டும், கைநிறையச்சம்பாதிக்கவேண்டும்,சொத்துசுகத்தோடுவாழவேண்டும் என்றே சிந்திக்கின்றார்கள். அதுதான் வாழ்வின் நோக்கம் என்பது அவர்களின் எண்ணமாயுள்ளது. பலகலைகளும் […]

செ.தயாபரி யாழ்.போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்

நாவுக்கினிய சுவைகொண்டதும், பார்க்கும்போதே உண்ணக்கூடிய விருப்பைக் கூட்டும் பழம் அண்ணாசி, மிகவும் குறைந்த கலோரிப் பெறுமானத்தைக் கொண்டிருப்பதுடன் அதிக நார்ச்சத்தையும் இது கொண்டுள்ளது. ஒழுங்கான குடற் செயற்பாட்டுக்கும், கழிவுப் பொருள்கள், நச்சுப் பொருள்கள் என்பனவற்றின் வெளியேற்றத்திற்கும் இது உதவுகின்றது. அதேவேளை, கொலஸ்ரோல் அகத்துறிஞ்சலையும் குறைக்கின்றது. அதீத நிறை உடையவர்களும், நீரிழிவு நோயாளர்களும் அன்னாசிப்பழத்தை வேண்டியளவு உட்கொள்ளமுடியும். 100கிராம் அன்னாசிப் பழத்தில் விற்றமின் C 47.8mg ஆக உள்ளது. விற்றமின் C ஆனது எலும்புகள், இழையங்கள் மற்றும் பற்கள் […]

வகை I, II நீரிழிவு, நீரிழிவுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்க விருப்பம் இருப்பின், ஆரோக்கியமான குழந்தை பெறுவது உங்கள் இலட்சியமாக இருக்கவேண்டும். எனவே கர்ப்பம்தரிக்க முன்பு தாய்மார்கள், உயர் இரத்த அழுத்தம், இருதயநோய், சிறுநீரக கோளாறு நரம்புக் கோளாறு மற்றும் கண்களில் ஏதாவது பிரச்சினை இருப்பின் அவற்றுக்குரிய சிகிச்சைகளை கர்ப்பம் தரிக்க முன்பே எடுத்தல் நல்லது. நல்ல பழக்கங்கள், ஆரோக்கிய உணவுகள், கருத்தரிக்கும் முன்பும், பின்பும், பின்பும் தாயின் குருதியில் வெல்ல மட்டத்தை கட்டுப்பாடான ஆரோக்கிய நிலையில் […]

ஐம்பலன்களில் செவி கேட்க உதவும் கருவியாக இருக்கிறது. அத்துடன் உடல் சமநிலை, உணர்வு தொடர்பாடலுக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக முதுகெலும்பு உள்ள உயிரினங்களில் தலையின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரு செவிகள் இருக்கும். இவ்வமைப்பு ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்கு உதவும். எனினும் பிற உயிரினங்களால் உதாரணமாக ஆடு, மாடு நாய் போன்றவற்றால் தமது காதுமடலை வளைத்தும் திருப்பியும் ஒலியைச் சேகரித்து ஒலியை உள்ளே அனுப்ப முடியும். எனினும் மனிதனால் காதுகளை […]