You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

செய்முறை சட்டியில் நல்லெண்ணை ஊற்றி குடை மிளகாயை வதக்கவும். வதக்கி வந்ததும் உருளைக்கிழங்கு, கரட் இரண்டையும் போட்டு வதக்கவும் பின் கீரையையும் போட்டு வதக்கவும். முட்டையை நன்றாக அடிக்கவும் அதனுடன் சீஸ், பால் என்பவற்றினை சேர்த்து அடித்த பின் வதக்கி வைத்திருக்கவும். மரக்கறிகளை முட்டைக் கலவையுடன் சேர்க்கவும். உப்பு, மிளகு தூள் போட்டு கலக்கவும் பின் சிறிய குழி உள்ள பாத்திரத்தில் இக் கலவையை ஊற்றி 20 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். தேவையான பொருட்கள் அளவு சிவப்பு […]

செய்முறை சுண்டங்காயை விதை நீக்கி குத்தியெடுத்துக் கொள்ளவும் (அதன் விதையை அலசி கழுவ வேண்டும்) பின்னர் சிறிது நல்லெண்ணையை விட்டு வெங்காயம், உள்ளி போட்டு வதக்கி அமனுள் சுண்டங்காயை போட்டு வதக்கி அதனுள் தனிமிளகாய், உப்பு அளவாக போட்டு கொள்ளவும். பெருஞ்சீரகமும் சிறிது போடலாம். தேவையான பொருட்கள் அளவு சுண்டங்காய் 150கிராம் வெங்காயம் 1 பெரியது உள்ளி 4 பல்லு பெருஞ்சீரகம், உப்பு, தனிமிளகாய் அளவாக நல்லெண்ணை சிறிதளவு (தாளிக்க) தோசை, பிட்டு இடியப்பத்தோடு உட்கொள்ளலாம். இவ் […]

செய்முறை சட்டியில் நல்லெண்ணையை ஊற்றி குடைமிளகாயை வதக்கவும். வதங்கி வந்ததும் கரட்டையும் போட்டு வதக்கவும். பின் கீரையையும் போட்டு வதக்கவும். இன்னுமொரு கோப்பையில் முட்டையை நன்றாக அடிக்கவும். பின் முட்டைக்கலவையுடன் சூடாக்கிய பாலை சேர்த்து அடித்த பின்னர் வதக்கி வைத்துள்ளதை முட்டைக்கலவையுடன் சேர்க்கவும். பின் உப்பு, மிளகுதூள் போட்டு கலக்கவும். பின் சிறிய குழி உள்ள பாத்திரத்தில் ( முக்குழிச்சட்டி) ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி பின் முன் கலக்கிய கலவையை விட்டு வேக வைத்து இறக்கவும். […]

செய்முறை முட்டையை அவிக்கவும் வெங்காயம் பச்சை மிளகாய் சிறிதாக வெட்டி நல்லெண்ணையில் தாழிக்கவும். வெங்காயம் வெந்து வர மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வேக வைக்கவும். பின் சோம்புத்தூள் சேர்த்து வதக்கி பின் தக்காளியை சிறு துண்டுகளாக போட்டு வதக்கவும். தக்காளி வெந்ததும் முட்டையை சிறு துண்டுகளாக வெட்டி போட்டு பிரட்டி எடுக்கவும். தேவையான பொருட்கள் அளவு முட்டை 2 அவித்தது தக்காளி 2 வெங்காயம் சிறிதாக வெட்டியது பச்சை மிளகாய் தேவையானளவு கறிவேப்பிலை தேவையானளவு உப்பு தேவையானளவு […]

செய்முறை இராசவள்ளிக் கிழங்கினை நன்கு தோல் சீவி சுத்தப்படுத்தவும், பின்னர் கழுவவும். சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ½ ரம்ளர் தண்ணீர் விட்டு மூடிய பாத்திரத்தில் அவிக்கவும். நன்கு அவிந்ததும் நன்கு மசிக்கவும். பின்னர் அதனுள் பயறு, கௌபி, என்பவற்றினை இடவும். உழுத்தம்மாவை பாலில் கரைத்து அப்பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடிப்பிடியாத வண்ணம் கிளறவும். உழுத்தம்மா நன்கு வெந்ததும் அதனுள் சாறு வகைகளை விட்டு நன்கு இறுகி வரும் வரை கிளறவும். பின்னர் இறக்கி சூடு ஆறியதும் […]

செய்முறை பயறு, உழுந்து, கௌபி என்பவற்றை தனித்தனியே அவிக்கவும், கரட், கோவா, குறிஞ்சா இலை என்பவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி அவிக்கவும். செத்தல் மிளகாய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை என்பவற்றை சிறிதளவு நல்லெண்ணெயில் தாழிக்கவும். தாழித்த கலவையினுள் அவித்த தானியங்கள், மரக்கறி என்பவற்றை சேர்த்துக் கிளறவும். தேவையான பொருட்கள் பயறு 100கிராம் உழுந்து 100கிராம் கௌபி 100கிராம் கரட் 100கிராம் கோவா 100கிராம் குறிஞ்சா இலை 100கிராம் பெரிய வெங்காயம் 100கிராம் செத்தல் மிளகாய் 100கிராம் கடுகு, […]

செய்முறை பயற்றம் மாவை உப்பு சேர்த்து கொதி நீர் விட்டு இடியப்பத்திற்கு குழைத்து உரலில் மாவை போட்டு பிழிந்து எடுத்து நீராவியில் அவித்து எடுத்து உலர்த்தி வைக்கவும். கரட் போவையும் 2நிமிடம் நீராவியில் அவித்து எடுக்கவும். தாச்சியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாய் வதக்கவும். வதக்கிய பின் உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி விழுது , பூடு விழுது சேர்த்து வதக்கி கரட் கோவா, உலர்த்திய இடியப்பத்தையும் போட்டு கிளறவும். தேவையான பொருட்கள் […]

கீழ்வரும் மாவொன்றில் ஏனையவற்றை தாச்சியிலிட்டு வதம் செய்து சிற்றுண்டியாக்குதல். தேவையான பொருட்கள் அளவு பயறு மா 205 கிராம் அப்பிள் குறுணி சிறிதளவு கொய்யா குறுணி சிறிதளவு சீரகம் பொடி சிறிதளவு உழுந்து மா தேவையானளவு கடலை அல்லது மா அரைத்த மா தேவையானளவு பருப்பு மா தேவையானளவு உள்ளி குறுணி சொற்பம் வெங்காயம் நறுக்கியது சிறிதளவு மிளகாய் குறுணி சிறிதளவு வெந்தயம் பொடி சொற்பம் கரட் குறுணி சிறிதளவு நல்லெண்ணெய் சிறிதளவு மாலை நேரத்திற்கு ஏற்ற […]

செய்முறை ஒரு சட்டியில் எண்ணெய்யை கொதிக்க விடல். ப.மிளகாய், இஞ்சி என்பவற்றை மிக்ஸியில் அரைத்தல். ஆவித்த உருளைக்கிழங்கு, அவித்த மீன், வெங்காயம், மஞ்சள் தூள், அரைத்த கலவை, உப்பு என்பவற்றை சேர்த்து மிக்ஸ் பண்ணவும், பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டவும். வேறு சட்டியில் முட்டையை விட்டு அடிக்கவும். பின்பு வட்டமாக உருட்டிய உருண்டையை எண்ணெய்யில் போட்டு பொறிக்கவும். தேவையான பொருட்கள் அளவு உருளைக்கிழங்கு 205 கிராம் மீன் 200 கிராம் பச்சை மிளகாய் 05 இஞ்சி ஒரு […]

உணவு பழுதடைதல் என்பது சாதாரண மனிதனால் உட்கொள்ளமுடியாத தொரு அளவுக்கு அது பௌதிக, இரசாயன மாற்றங்கள் அடைந்து காணப்படுதல் ஆகும். நுண்ணங்கிகளின் தாக்கம் காரணமாகவும், ஒட்சியேற்றத் தாக்கங்களின் மூலமாகவும், உணவில் காணப்படும் நொதியத்தாக்கங்கள் காரணமாகவும், உணவைச் சரியான முறையில் பாதுகாக்காமை போன்ற பல காரணங்களாலும் உணவு பழுதடைகின்றது. உணவுக்கே உரித்தான அகக்காரணிகள், உணவு காணப்படும் சூழலில் நிலவும் சூழற்காரணிகள் போன்றன உணவு பழுதடைதலைப் பாதிக்கும் காரணிகள் ஆகும். அகக் காரணிகள் என்பது உணவின் தன்மையைப் பொறுத்து இவை […]