You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

புரத அடை செய்முறை உழுந்து, கௌபி என்பவற்றை சுத்தமாக்கி திரித்து மாவாக்கவும். மாவுடன் உப்பு, சிறிதளவு தேங்காய்ப்பூ என்பன சேர்த்து குழைக்கவும். பின்பு ரொட்டி போல் தட்டி தோசைக்கல்லில் போட்டு சுடவும். தேவையான பொருட்கள் உழுந்து 250 கிராம் கௌப்பி 250 கிராம் உப்பு சிறிதளவு தேங்காய்ப்பூ சிறிதளவு அம்பிறலா சட்னி தேவையான பொருட்கள் அம்பிறலங்காய் 5 சிறிய வெங்காயம் 10 மிளகாய்த்தூள் 1.மே.க மஞ்சள் தூள் சிறிதளவு ஏலக்காய் 3 அங்கர் பால் 1 கப் […]

செய்முறை பயறு பருப்பு என்பவற்றுள் சிறிது நீர் விட்டு நன்றாக அவித்துக் கொள்ளவும். இறைச்சி, மரக்கறி மற்றும் இறால் என்பவற்றைச் சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும். அதற்குள் உள்ளி வெங்காயம், மிளகாய், வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம், என்பனவற்றையும் சேர்த்து அவிக்கவும். தேவையானளவு உப்பு சேர்க்கவும். பின்னர் அவித்த பயறு பருப்புடன் இக்கலவையைச் சேர்த்துக்கிளறவும். தேவையான பொருட்கள் பயறு ½Kg பருப்பு ½Kg கோழி இறைச்சி 1Kg இறால் 250g கறிமிளகாய் 50g பச்சை மிளகாய் தேவையானளவு வெங்காயம் 50g […]

புரதக்கலவைப் பிட்டு தேவையான பொருட்கள் கொள்ளுமா 50 கிராம் முளைகட்டி காயவைத்த பயறுமா ( அவித்தது) 50 கிராம் வறுத்து கோது நீக்கிய உழுத்தம்மா 100 கிராம் உப்பு தேவையான அளவு தேங்காய்ப்பூ சிறிதளவு செய்முறை கொள்ளு, உழுந்தை வறுத்து கோது நீக்கி மாவாக்கவும். பயறை முளைக்க வைத்து வெயிலில் உலர்த்தி பின் மாவாக்கவும். மேலே கூறப்பட்ட மாவகைகளை அரித்து ஒன்றாகச் சேர்த்து உப்பையும் ருசிக்கேற்ப சேர்த்து ஆவியடங்கிய சுடுநீர் சேர்த்து குழைத்து மணி மணியாக உலர்த்தி […]

அதிக அளவு மீன் சாப்பிடுவது மன அழுத்த நோயிலிருந்து பாதுகாப்பளிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. சுமார் ஒன்றரை லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட 26 வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் அதிக அளவு மீன் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்த நோய் தோன்றுவதற்கான வாய்ப்பு 17 சதவீதம் குறைவதாக தெரியவந்திருக்கிறது. மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருப்பது இதற்கான முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஒருவர் […]

செய்முறை பயற்றம்மாவை சிறிது உப்பு சேர்த்து ரொட்டி பதத்திற்கு குழைக்கவும். தட்டையாக தட்டி எண்ணெய் பூசிய தட்டில் போட்டு அவிந்ததும் மறுபக்கம் பிரட்டி எடுக்கவும். பின் அதை சிறு துண்டுகளாக்கவும். கரட்டை தோல் நீக்கி கழுவி உராய்கருவியில் உரோஞ்சிக் கொள்ளவும். வெங்காயம் மிளகாயை சுத்தமாக்கி அளவாக வெட்டிக் கொள்ளவும். சீவிய கரட்டை சிறிது வாட்டிக் கொள்ளவும். வெங்காயம், மிளகாயை தாளித்து பதம் வந்ததும் கரட்டை அதனுள் கொட்டிகிளறவும். சிறிது நேரத்தின் பின் முட்டையை அதனுள் விட்டு கிளறவும். […]

விளையாட்டு, தொலைக்காட்சி , இணையம் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பாதிப்பதாக ஆய்வு கூறுகிறது டிவி, கம்பூய்ட்டர் கேம்ஸிலேயே மூழ்கி நேரத்தை வீணாக்காதே என்று பெற்றோர்கள் அலுத்துக்கொள்வதில் கொஞ்சம் நியாயம் இருக்கும் போல் தெரிகிறது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றை வைத்துப் பார்க்கையில் .. ! பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக தொலைக்காட்சி பார்ப்பதோ, அல்லது இணையத்தில் நேரத்தை செலவிடுவதோ அல்லது கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுவதோ, அவர்களின் பதினோராவது ஆண்டு, […]

செய்முறை முட்டையை நன்கு அடிக்கவும். பால், அடித்த முட்டை, றஸ்க் தூள் என்பவற்றை நன்கு கலக்கவும். கடைசியில் 1 தே.கரண்டி இனிப்பூட்டி சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் கலவையை ஊற்றி அதன் வாய்ப் பகுதியை ஈயக்கடதாசியால் மூடிக் கட்டவும். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அப் பாத்திரத்தில் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து அவித்து எடுக்கவும். தேவையான பொருட்கள் பசுப்பால் 200ml முட்டை 1 றஸ்க்தூள் சிறிதளவு செர்ரிப்பழம் சிறிதளவு இனிப்பூட்டி தேவையானளவு இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி.சிவானந்தராணி […]

செய்முறை முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் இடவும். கரட், போஞ்சி, உருளைக்கிழங்கு சிறிய துண்டங்களாக ஆக்கி நீர் விட்டு அவிக்கவும். வெட்டிய உள்ளி, வெங்காயம் பச்சை மிளாகாய், இஞ்சி, பூண்டு விழுது, மற்றும் அவித்த மரக்கறி, கறிவேப்பிலை உப்பு அனைத்தயையும் ஒரு பாத்திரத்தில் இடவும், முட்டையை நன்கு அடித்த பின் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கி அதனுள் கறிவேப்பளை போடவும். பின்பு தோசைத்தட்டில் எண்ணெய் பூசி இக்கலவையை இடவும். ஓரமாக எண்ணெய் விட்டு வேகிய பின்பு திருப்பிப் […]

அருகிப் போன நமது பாரம்பரிய உணவு முறைகளை மீட்டிப்பார்க்கிறது இந்தக் கவிதை. நெல்லரிசி, வரகரிசி, சாமை, தினை, குரக்கன் என்று பல்வேறு தானியங்கள் பக்குவமாய் பயிரிட்டு பொல்லா நோய் அத்தனையும் பொசுக்கியது அக்காலம் நாட்டுக்கோழி வறுத்து நற்சீரகம் சேர்த்து கூட்டிக் குழம்பாக்கி குடும்பமாய் உட்கார்ந்து பாட்டி வைத்தியத்தில் பசிதணித்ததக்காலம் அரிசிமா சேர்த்து அதில் அளவாய்த்தேன் விட்டு சரியாக நீர் சேர்த்து எங்கள் அம்மா களிக்கிண்ட வரிசையாய் நின்று அதை ருசித்ததுவும் அக்காலம் தினை அரிசிச் சோறும் கேள்வரகுக் […]

செய்முறை பயறு லேசாக சூடாக்கிய பின் தோல் நீக்கி எடுக்கவும். உழுத்தம் பருப்பை நன்கு ஊறவைத்து அரைக்கவும் ஊறவைத்த பயற்றம் பருப்பை வடித்தெடுத்து அரைத்த உழுந்துடக் சேர்த்து தயிர் விட்டு நன்கு பிசையவும் உப்பு அளவுக்கு சேர்க்கவும். பச்சை மிளகாய் தூளாக வெட்டி, இஞ்சி தூளாக வெட்டி சேர்க்கவும். செத்தல் மிளகாய் சிறிதாக வெட்டி கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும் எல்லாவற்றையும் நன்கு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ( பாக்கு அளவு உருண்டை) அதை ஆவியில் (Steam) […]