You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

எவ்வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக மலச்சிக்கல் காணப்படுகின்றது. ஒருவர் தனது வழமைக்கு அதிகமான நாட்கள் மலங்கழிக்கமுடியாமல் இருக்கும் போதோ அல்லது மிகக் கடினமான மலத்தை கழிக்கும்போதோ அல்லது முழுமையாக மலங்கழிக்க முடியாமல் இருக்கும் போதும் மலச்சிக்கல் எனக் கருதப்படுகின்றது. இன்றைய நவீன வாழ்க்கை முறையே அதாவது போதியளவு நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமை, போதியளவு நீர் குடிக்காமை, போதியளவு உடற்பயிற்சியின்மை மற்றும் மலங்கழிக்க வேண்டிய தேவை ஏற்படுமிடத்து அதனை பிற்போடுதல் போன்றவையே மலச்சிக்கலுக்கான முக்கிய காரணங்களாகும். உளவியல் […]

Scabies என்பது Sarcoptes scabbier என்கின்ற உண்ணியால் ஏற்படுகின்ற தோல்கடி நோயாகும். இவ்உண்ணியானது எமது தோலினை ஊடுருவி தோலின் கீழாக முட்டையினை இடுகின்றது. இதனால் நோய்த்தாக்கம் ஏற்படுகின்றது. நோய்அறிகுறிகளாவன கடுமையான கடி(அதிகமாக இரவுப்பொழுதில்) தோழ் தடிப்படைதல் சிறுபருக்கள் புண் என்பன ஏற்படலாம். முதல் தடவையாக இவ் உண்ணியால் பாதிக்கப்படின் 4 – 6 கிழமைகளின் பின்னரே நோய் அறிகுறிகள் ஏற்படும். தோலில் ஏற்படுகின்ற தடிப்புகள் (Skin rashes) மற்றைய நோய் அறிகுறிகளுடன் ஒருமைப்பட்ட தன்மையைக் காட்டும். தோல்கடியானது […]

உடலின் ஒருசீர்த்திடனிலையின் ஒரு அங்கமே வெப்பச்சீராக்கல், சாதாரண உடல் வெப்பச்சீராக்கலில் வியர்வைச் சுரப்பிகளின் பங்கும் குறிப்பிடத்தக்களவில் அமைகின்றது. சாதாரண உடல்வெப்பச்சீராக்கலுக்கு மேலதிகமாக சிலரில் அதிகமான வியர்வை சுரக்கும் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறு அதிக வியர்வை வெளியேற்றம் உடையோர் உளவியல் ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்டுகின்றனர். நாளாந்த வேலைகளில் நெருக்கீடுகளை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக எழுதுகருவியை தொடர்ந்து பிடிப்பதில் கூட சிரமத்தைச் சந்திக்கின்றனர். அது மட்டுமன்றி அதிக வியர்வை ஏற்படும் இடங்களில் பக்ரீரியாத் தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் ஏற்படுவதனாலும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். […]

நோயுற்றவர்கள் எதிர்நோக்கும் அவமதிப்புகள், கவனிப்பு குறைபாடுகள், வசதிக்குறைவுகள், சமூகமட்டத்தில் பராமரிப்பு குறைபாடுகள், தனித்துவத்தையும் இரகசியத்தன்மையையும் பேணுவதில் எதிர் நோக்கப்படும் சவால்கள், பொருளாதாரச்சுமை, தரமான மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் தனிப்பட்ட தகவல்கள் ஊடகங்களில் அம்பலப்படுத்தல் போன்ற பல விடயங்களுக்கு எதிரான பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன இந்த முயற்சிகள் மேலும் உத்வேசம் பெறவேண்டிய தேவை இருக்கின்றது. சில சமயங்களில் சட்டவரையறைக்கு உட்பட்டு நோயாளர்களின் உரிமைகளை மீறவேண்டிய இக்கட்டான நிலைகளும் மருத்துவக் குழுவிற்கு ஏற்படுகின்றது. உதாரணமாக நோயுற்ற ஒருவரின் மனநிலை […]

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியமிகப் பொதுவான தொற்று நோய்களாக சளிக்காய்ச்சலும், வயிற்றோட்டமும் அமைவதை பெரும்பாலான பெற்றோர் அவதானித்திருப்பார். அவர்களுக்கு தோன்றும் கேள்வி இதுதான், “ஏன் எனது குழந்தைக்கு அடிக்கடி சளிக்காய்ச்சல், வயிற்றோட்டம் ஏற்படுகின்றது?” உலக சுகாதார நிறுவனத்தினதும் (WHO) UNICEF இனது தகவலின் படி குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் 27 சதவீதமாக சுவாசத் தொற்று நோய்களும் (சளிக்காய்ச்சல்) 23 சதவீதமாக வயிற்றோட்ட நோய்களும் காணப்படுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1.8 மில்லியன் குழந்தைகள் […]

நோயுற்றவர்கள் நோய்காரணமாகவும், பல வசதிக்குறைவுகள் காரணமாகவும், உரிமைமீறல்கள் அல்லது அவர்களின் உரிமைகள் மதிக்கப்படாமை காரணமாகவும் அவமதிப்புக்கள் காரணமாகவும் ஆதரவின்மை, பாரமரிப்பு போதாமை போன்ற காரணங்களினாலும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு ஆளாகிவருகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கு வைத்தியசாலை மட்டங்களிலும், சமுதாய மட்டங்களிலும் பல பரந்துபட்ட நடவடிக்கைகள் தேவையாக இருக்கின்றது. இதன் மூலம் பல தவறான புரிந்துணர்வுகளையும் நிவர்த்தி செய்ய முடியும். நோயுற்றவர்களும் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு தம்மாலாக முயற்சிகளை எடுப்பதற்கு முயலவேண்டும். ஒருவர் தொழில்புரியும் இடத்தில் காணப்படும் அபாயநிலமை காரணமாக […]

விசர்நாய்க்கடியினால் உலகளாவிய ரீதியாக ஒவ்வொரு வருடமும் 55000 மக்கள் இறக்கின்றார்கள். 2005 ஆம் ஆண்டில் இலங்கையில் 55 மரணங்கள் விசர்நாய்க்கடியினால் ஏற்ப்பட்டுள்ளது. விசர்நாய்க்கடியினால் ஏற்படும் மரணம் 100வீதம் தடுக்கப்படக்கூடியதே. விசர்நாய்க்கடி நோயானது ரேபீஸ் (Rabies) எனும் வைரசின் மூலம் ஏற்படுகின்றது. இவ் வைரசானது மனிதனின் நரம்புத்தொகுதியை செயலிழக்கச் செய்வதன் மூலமே மரணத்தை விளைவிக்கின்றது. இது விலங்குகளின் மூலம் பரவப்படும் ஒருநோயாகும். இவ்வைரசானது முலையூட்டிகளில் இந்நோயை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் மனிதன் மற்றய முலையூட்டிகளிடமிருந்து இவ்வைரசினை விபத்தின் மூலம் பெற்றுக்கொள்கின்றான். […]

ஒருவன் நோய்வாய்ப்பட்டுவிட்டான் என்பதற்காக அவனிற்கு இருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மீறிச் செயற்படுவது மனிதத்துவம் ஆகாது. அந்தவகையிலே நோயுற்றவர் தனது சொந்த விருப்பப்படி நடந்துகொள்ளும் உரிமையும் மதிக்கப்படவேண்டும். நோயுற்ற ஒருவர் மருந்தை பாவிக்காமல் இருப்பதற்கு விருப்பப்படலாம், சத்திரசிகிச்சை செய்யாமல் இருக்க விரும்பலாம், தொடர்ந்து புகைப்பிடிப்பதற்கு விருப்பப்படலாம் உடலில் வலியை ஏற்படுத்தக்கூடிய சோதனைகளை செய்யாமல் விடுவோம் என்று நினைக்கலாம், தொடர்ந்து குடிவகைகள் பாவிக்க ஆசைப்படலாம், வேறோரு மருத்துவரின் இரண்டாவது அபிப்பிராயத்தை கேட்க விரும்பலாம், கோயிலுக்குச் சென்று சில சமயப்பெரியவர்களின் […]

எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு எமக்கு ஒவ்வொரு துறையினருக்கும் நியாயமான உரிமைகள் என்ன? என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். அந்தவகையிலே நோயுற்றவர்களுக்கு இருக்கும் தீர்மானம் எடுக்கும் உரிமை சம்பந்தமாக சிந்திப்பதும் பயனுடையதாக அமையும். ஒரு குடும்பமோ சமூகமோ அல்லது மருத்துவக்குழுவோ நோயுற்றவர்மீது அவரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு சிகிச்சைமுறையை திணிக்கமுடியாது. மருத்துவக்குழு நோயுற்றவர்களுக்கு சொல்வது ஆலோசனைகளே தவிர கட்டளைகள் அல்ல. அது அவரது மருந்துகள் சம்பந்தமாக இருந்தாலும் சத்திரசிகிச்சைகள் சம்பந்தமாக இருந்தாலும் மருத்துவக் குழுவின் ஆலோசனைகளைக் கேட்டு இறுதித்தீர்மானம் […]

ஒருவரின் உரிமைகளை இன்னொருவர் மதித்து நடக்கும் பொழுது ஒரு ஆரோக்கியமான மகிழ்ச்சியான சமுதாயம் உதயமாகும் அந்த வகையில் நோயுற்று இருக்கும் ஒருவரின் உரிமைகள் என்ன? அது மீறப்படுவதை தடுப்பதற்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது. நோயாளர்களின் உரிமை மீறல்களையும் உரிமைப்போராட்டத்தையும் பல பரிவுகளாக எடுத்து ஆராயமுடியும். முதலாவதாக நோயுற்றவரின் நோய்நிலை சம்பந்தமான தகவல்கள் பிறருக்கு தெரியாதவாறு இரகசியமாகப் பேணப்படுகின்றனவா?” என்ற வினாவை முன்வைத்தால் அதற்கு இல்லை என்பதே பதிலாக வருகின்றது. […]