You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

இது தான் இவ்வருட உலக சிறுவர் தினத்துக்கான தொனிப் பொருள். உலக சிறுவர் தினம் இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஒக்ரோபர் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. எல்லோரும் சிறுவர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களது பாதுகாப்பாக்காகவும் குரல் கொடுத்து வருகின்றார்கள். சிறுவர்களின் பாதுகாப்பு எனக் கூறும் போது. அனைவராலும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியும் சிறுவர் தொழிலாளிகள் பற்றியும் அவற்றைத் தடுக்க வேண்டிய வழிகள் பற்றியும் பேசப்படுகிறது. அவற்றுக்கு மேலாக, எமது வீட்டிலேயே எம் சூழலிலேயே எம் குழந்தைகளையும் சிறார்களையும் சிறு சிறு […]

தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு, பல்கலைக்கழக மாணவன் தற்கொலை, போன்ற செய்திகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதை எம்மில் பெரும்பாலோர் அறிவர். உலகில் சராசரியாக 40 செக்கன்களுக்கு ஒரு தற்கொலையும், 3 செக்கன்களுக்கு ஒரு தற்கொலை முயற்சியும் இடம்பெறுகின்றன. இலங்கையில் வருடாவருடம் 30,000 செக்கன்களுக்கு ஒரு தற்கொலை இடம்பெறும்வதாக கூறப்படுகின்றது. தற்கொலை வீதம் கூடிய நாடுகளில் இலங்கையும் ஒன்று. உலக சுகாதார நிறுவனத்தினுடைய அறிக்கையின் படி உலகிலுள்ள 127 நாடுகளில் இலங்கை தற்கொலை செய்து கொள்பவர்கள் […]

அரிசிச் சோறு, கோதுமை மாவிலான உணவுகளை குறைவாக உண்போம். “மிகிறும் குறையறும் நோய் செய்யும்” என்றாராம் பொய்யா மொழிப் புலவர் வள்ளுவர். அவ்வாறே நாம் உண்ணும் உணவு உணவுத் தெரிவு, உணவின் அளவு நோயைத் தீர்ப்பது மட்டுமன்றி நோய் ஏற்பட அடிப்படை ஏதும் ஆகின்றது. இலங்கையர்களான எமது பிரதான் உணவு அரிசிச் சோறே ஆகும். இதனாலோ என்னவோ நாம் எமது உணவுத்தட்டினை சோற்றினால் நிரப்பி உண்ணவே பழக்கப்பட்டுள்ளோம். மேலும் நாம் மாப்பொருளிற்கு அடிமையாதல் எனும் வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் […]

ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் அவரையும், உங்களையும் பாம்புக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். கடித்த பாம்பினை நன்கு அடையாளம் காணமுயலுங்கள். இதனால் எவ்வகையான பாம்பு என அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வைத்தியருக்கு உதவியாக இருக்கும். பாம்பை இனங்காணுவதில் அதிக நேரத்தை செலவழிப்பதையோ அல்லது அம்முயற்சியில் மீண்டும் கடிவாங்குவதையோ தவிர்க்கவும். பாம்பினால் தீண்டப்பட்டவரைக் குறைந்த அசைவுடன் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும். அத்துடன் கடிக்கு இலக்கான நபரை அமைதியாக வைத்திருக்கவும். (அதிக அளவு அசைவும் மன உளைச்சல், அதிர்ச்சி என்பன இரத்த ஒட்டத்தை […]

கடந்த வாரம் நாம் எவ்வாறு சரியான உணவுகளை பிழையின்றி தெரிவு செய்வது? எனும் தலைப்பின் கீழ் ஒரு அறிமுகக்கட்டுரையை பார்த்தோம். இந்த வாரத்திலிருந்து இனிவரும் வாரங்களில் ஒவ்வொரு அறிவுறுத்தல்களையும் விரிவாக பார்ப்போம். 1. பலவகையான உணவுகளை தினமும் உணவிற்காக எடுத்துக் கொள்வோம். நாம் அன்றாடம் உண்ணும் உணவானது ஆறு உணவுப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தினமும் எல்லா உணவுப்பரிவில் இருந்தும் அவசியமான அளவுகளில் உணவுகளை உள்ளெடுப்பதன் மூலம் எமக்கு ஒவ்வொரு நாளும் தேவையான சகல போஷனைக்கூறுகள் ( மாப்பொருள், புரதம், […]

உலக தாய்ப்பாலூட்டும் வாரம் ஆவணி 1-7, 2014 World Brest Feeding week 2014 – Aug 1-7 Brest Feeding : A winning Goal For LIFE தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவம் கருதி இந்த வருடமூம் ஆவணி 1ம் திகதி தொடக்கம் 7ம் திகதி வரை உலக தாய்ப்பாலூட்டல் வாரம் அனுஷ்டிக்ப்படுகின்றது. இந்த வருடத்தின் தொனிப்பொருள் பின்வருமாறு அமைகின்றது. “தாய்ப்பாலூட்டல் வாழ்விற்கான ஒரு வெற்றி தரும் இலக்கு” ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பாலூட்டலை பிறந்ததிலிருந்து வெற்றிகரமாக வழங்கும் […]

வயது மூப்படையும் போது சிலரில் கூனல் ஏற்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இக் கூனல் ஏற்பட ஒஸ்டியோபொரசிஸ் என்னும் நோய் நிலைமையே காரணமாகும். ஒஸ்டியோபொரசிஸ் எனும் நோய் எலும்புகளின் அடர்த்தி குறைவதையே குறிப்பிடுகின்றது. இந்நோய் மூப்படையும் போது தானாகவே அல்லது வேறு நோய்களின் அல்லது தொடர்ச்சியான சில குறித்த மருந்துப்பாவனைகளின் விளைவாகவோ ஏற்படலாம். இந்நோய் நிலைமையால் எலும்புகள் வலுவிழந்து உடையும் தன்மை அதிகரிக்கிறது. இதனால் பொதுவாக முள்ளந்தண்டு எலும்புகளே உடையக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கின்றது. இந்நோய் வயது முத்தவர்களிடம் […]

இலங்கையில் பல வகையான பழங்கள், மரக்கறி வகைகள், தானியங்கள் மற்றும் வெவ்வேறு உணவு வகைகள் வருடம் முழுவதும் கிடைக்கக் கூடியதாக இருப்பினும், நாம் உயர்ந்தளவு ஆரோக்கியம் சார் சுட்டிகளை அடைந்திருப்பினும், இலங்கையர்களின் போசாக்கு மட்டமோ அன்றி போசாக்கு சார் சுட்டிகளோ ஏனைய நாட்டவர்களுடன் ஒப்பிடுகையில் எந்த வகையிலும் திருப்தி அளிக்கக் கூடிய வகையிலோ அல்லது மகிழ்ச்சி அடையக் கூடியதாகவோ இல்லை. எங்களுடைய நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 16.6 வீதமானவர்கள் குறைந்த பிறப்பு நிறையுடையவர்களாக இருப்பதுடன், கர்ப்ப காலத்தின்போது […]

தூக்கம் ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாததும், தவிர்க்கமுடியாததும் அத்துடன் ஒரு இயற்கையான நிகழ்வும் ஆகும். இது நலமான வாழ்வுக்கும் சுகமான ஆரோக்கியத்துக்கும் அவசியம். ஒருவர் எத்தனை மணிநேரம் படுக்கையிற்படுத்து இருக்கிறார் என்பது முக்கியம் அல்ல. எவ்வளவு நேரம் நன்றாகத் தூங்குகிறார் என்பது தான் முக்கியம். ஆழ்ந்த தூக்கத்தின் பயன்களாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம். 1. பகலில் அதிகவேலை செய்த தசைகள் நரம்புகளுக்கு ஒய்வை அளிக்கிறது. 2. உடலில் அதிக சக்தியை சேமிக்க உதவுகிறது. 3. இரவு நேர உடல் வளர்ச்சி […]

“அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்பதன் உண்மையை நாம் எம்முன்னோர்களிடமிருந்தும், அனுபவ ரீதியாகவும் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் நஞ்சு அன்று கொல்லும் சோடா நின்று கொல்லும் என்ற விடயம் எம்மில் பலருக்குத் தெரியாது. சோடா சக்தி தரும் ஒர் ஆரோக்கிய பானம் என்று நம்பி ஏமார்ந்து கொண்டிருக்கின்றோம். பெருகிவரும் சோடா குடிக்கும் பழக்கம் சுகாதாரத்துறைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இதன் காரணமாகப் பல சுகதேகிகள் இளம் வயதிலேயே பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு ஆளாகிவருகின்றார்கள். சோடா குடிப்பதால் […]