You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

எமது நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளில் கூடியளவு அசைவுக்கு உட்படுவது கழுத்து ஆகும். எமது உடல் அவயவங்களுக்கும் மூல காரணியான மூளைக்கும் இடையில் அமைந்துள்ள தொடர்புபடுத்தும் அங்கம் கழுத்து ஆகும். இதில் ஏற்படுகின்ற வலி வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கின்றது. கழுத்துவலி என்பது சாதாரணமாக தட்டிக்கழிக்க கூடியாதொரு விடயமல்ல, ஏனேனில் மூளையிலிருந்து வருகின்ற நரம்புத் தொகுதியின் நரம்புத் திரட்டுகளும் இதயத்திலிருந்து மூளைக்கும் மற்றைய அவயவங்களுக்கும் குருதியைக் கொண்டு செல்கின்ற இரத்தக் குழாய்களும் ஒருங்கமைந்துள்ளமையால் அவற்றில் ஏற்படுகின்ற பாதிப்புக்களும் கழுத்து […]

இன்றைய நவீன வாழ்க்கை முறையின் விளைவால் உலகை ஸ்தபிக்க வைக்கும் முக்கியமானதொரு நோயாக பாரிசவாதம் காணப்படுகின்றது. மூளைக்கான குருதிக்கலங்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவோ கசிவு காரணமாகவோ மூளையின் நரம்புக்கலங்களுக்கான குருதிச் சுற்றோட்டம் தடைப்படுவதால் ஏற்படும் பாரதூரமான விளைவாக பாரிசவாதம் காணப்படுகிக்றது. தேவையானளவு ஒட்சிசன் மற்றும் சத்துக்கள் கிடைக்காத நரம்புக்கலங்கள் நிரந்தரதொழிற்பாட்டை இழந்து இறந்துவிடுவதனால், அந்தக் கலங்களால் கட்டுப்படுத்தப்படும் தொழிற்பாடுகளும் முற்றாக செயலிழந்துவிடுவதையே பாரிசவாதம் என்கின்றோம். இதன் விளைவாக உடற்தொழிற்பாடுகளில் முக்கியமான ஐந்து குழப்பங்கள் ஏற்படுகின்றது. 1. அசைவுகளை […]

சிறுவர்களிடையே வாசிப்பு பழக்கத்தில் அல்லது வாசிக்க முயற்சிப்பதற்கான செயற்பாட்டில் பின்னடைவு காணப்படுமாயின் அதை திருத்தவேண்டும் இவ்வாறான பிள்ளைகள் ஒரு சொல்லை சரியான விதத்தில் இனங்கண்டு உச்சரிப்பதை கடிகமாக கருதுவர் இதனால் இவர்கள் புதுப்புது சொற்களை பாவிப்பதிலும் வாசிப்பதிலும் சிரமங்களை எதிர்கொண்டு இறுதியில் வாசிப்புத்திறனை இழந்துவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலைமையானது மரபுவழி ரீதியாகவும் நரம்பியல் ரிதியாகவும் ஏற்படுகின்றது. எனினும் தகுந்த வழிகாட்டலின் கீழ் இப்பிள்ளைகள் தமது வாசிப்புத்திறனை விருத்தி செய்து சிறந்த வாசிப்பாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் பற்காலத்தில் திகழலாம். வாசிப்பு […]

இன்று சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள் நாளுக்கு நாள் பெருகிவருகின்றது. அவை ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும் மிகவும் சாதாரணமாக நடைபெறுகின்றது. இவ்வாறான செய்திகள் பத்திரிகைளிலோ, வானோலியாலோ, தொலைக்காட்சியிலோ கேட்கவோ, வாசித்தோ, பார்க்கும் போது அட இவ்வளவு பேருக்கு இந்த நோயம் வைத்தியசாலையில் சரியான வசதிக் இல்லை அல்லது சரியான மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை மருந்துகள் சரியாகக் கிடைப்பதில்லை. என இன்னோரால் செய்திகளை ஆச்சரியத்துடன் நோக்குவதுடன் முன்னர் இப்படியல்ல இப்பதான் நடைபெறுகின்றது. என்பதுடன் இதற்கு அரசாங்கமும், அரசாங்க அதிகாரிகளும் […]

மூச்சிழுப்பு என்பது, உயிர் சுருதியுடனான விசில் ஊதுவது போன்ற சுவாசத் சத்தமாகும். சுவாசத் தொகுதியின் சிறு சுவாசக் குழாய்களின் சுருக்கத்தால் மூச்சிழுப்பு ஏற்படுகின்றது. இது ஒரு பொதுவான சுவாசத் தொகுதி சம்பந்தப்பட்ட அறிகுறியாகும். இருபத்தைந்து தொடக்கம் முப்பது சதவீதமான ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் எப்போதாவது ஒரு முறை மூச்சிழுப்பால் அவதிப்பட்டிருக்கலாம். அதேபோல் ஆறுவயதிற்குட்பட்டசிறார்களில் அரைவாசி பேருக்கு ஒரு தடவையாவது மூச்சிழுப்பு ஏற்பட்டலாம். மூச்சிழுப்புக்கான காரணங்கள் எவை? 1. மூச்சிழுப்புக்கான மிகப் பொதுவான காரணியாக சுவாசத் தொகுதியில் ஏற்படும் […]

இன்றைய யுகத்திலே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்படுவோர் பலர். நீரிழிவு நோயானது பரம்பரைக் காரணிகளாலும், உணவுப் பழக்கங்களினாலும் ஏற்பட்டாலும் அதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். மேலும் நீரிழிவு கட்டுப்பாடில்லாமல் காணப்படின் குருதியின் வெல்லமட்டம் கூடி அவை நரம்புக்கலங்களின் கவசங்களைப் பாதிப்பதாலும், கலங்களுக்குத் தேவையான குளுக்கோசு கிடைப்பது குறைவதாலும் நரம்பு சம்பந்தமான பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடுகின்றது. அந்த வகையிலே நீண்ட காலமாக நீரிழிவு நோய் உடையவர்களது சாதாரண முறைப்பாடு கால் பாதங்கள் விறைக்கின்றன, காலில் காயங்கள் ஏற்படுவது தெரிவதில்லை, […]

நீரிழிவுக்கான உங்களது மருந்துகள் ஒரு வைத்தியர் மூலம் உறுதிப்படுத்தி பரிந்துரை செய்த மருந்துகளாக இருக்க வேண்டும். ஒரே அளவு மருந்து பலருக்கு பல வித்தியாசமான விளைவுகளைக் கொடுக்க கூடியது. மருந்து உட்கொண்ட பின்பு உங்கள் உடலிலோ, நடத்தையிலோ ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும். வைத்தியர் உங்களுக்கு மருந்தைப் பரிந்துரை செய்யும் போது உங்களது தற்போதைய உடல் நிலை வாழ்க்கை முறை உங்களது தனிப்பட்ட தேவைகள் உங்களுக்கு இருதய, சிறு நீரக கல்லிரல் சம்பந்தப்பட்ட நோய்கள் […]

“எனக்கு இரவில் தூண்டா நித்திரையில்லை, படுத்து அங்காலையும் இஞ்சாலையும் உருண்டு கொண்டிருப்பன் உடன் விடிஞ்சிடும் பேந்தென்ன பகலெல்லாம் ஒரே சோர்வாய்க் கிடக்கும் என்னென்டு வேலை செய்யிறது..” “எனக்குச் சும்மா ஐந்து வருஷமாக நித்திரையில்லை கண்ணிமை மூடுறதேயில்லை வாழ்க்கை வெறுத்துப் போச்சு நித்திரையில்லாமல் என்ணெண்டு இருக்கிறது.” நிம்மதியாய் நித்திரை கொள்ளுமவம் எண்டு படுத்தா அது வந்தாத்தானே படுத்து நீட்டி நிமிர்ந்து கிடக்கிறது தான் ஒருகண் நித்திரையில்லை.” இப்படி பல கூற்றுக்களை எங்கள் செவிகளில் நாம் அடிக்கடி கேட்கக் கூடியதாக […]

உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 15 மில்லியன் கணக்கிலானா குறைமாதப்பிள்ளைகள் வருடந்தோறும் பிறக்கின்றவேளை, ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தம் ஒரு வயது பூர்த்தியாக முன்னரே இறந்துவிடுகின்றனர். “குறைமாத பிரசவம்” பற்றிய விழிப்புணர்வு உண்டாக்குவதே இவ்வாறான சிசுக்களின் இறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவத்துறையினர் மேற்கொள்ளவேண்டிய முதலாவது குறைமாதப் பிரசவம் பற்றிய வழிப்புணர்வு மாதமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் நவம்பர் 17ம் திகதி இதற்குரிய விழிப்புணர்வு தினமாக பிரகடனப்படுத்தப்படுகிறது. முதலாவது விழிப்புணர்வு தினமானது “Europe Parent Organizations” இனால் 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. […]

கொலஸ்ரோல் என்பது ஒரு வேதிக்கூட்டுப் பொருள். இது இயற்கையாக எமது உடலில் உருவாக்கப்படுகிறது. எமது உடலுக்குத் தேவையான கொலஸ்ரோலில் 80 வீதமானதை எமது கல்லீரல் உற்பத்திசெய்து விடுகிறது. மீதம் நாம் உண்ணும் உணவில் இருந்து எடுக்கப்படுகின்றது. கொலஸ்ரோல் நாம் உயிர் வாழ்தற்கு இன்றியமையாதது. ஆயினும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்கும்போது தீங்கை ஏற்படுத்துகின்றது. நமது உடலில் கடத்தும் சாதனமாகத் தொழிற்படும் குருதியின் கொழுப்பானது புரதங்களுடன் இணைந்த நிலையில் பின்வருமாறு காணப்படுகிறது. L.D.L குறை அடர்த்திக் கொழுப்புப் புரத […]