You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

“பாலோடு தேன் கலந்தற்றே பனி மொழி வாலெயிறும் ஊறி நீர்” என்பான் வள்ளுவர். பனி போன்ற குளிர்ச்சியான சொற்களைப் பேசுகின்ற என் காதலியின் பற்களிலிருந்து வருகின்ற நீர் பாலும் தேனும் கலந்தது போல் இனிமையானது என்பது இதன் பொருள். காதலியின் எச்சில் அழுதம் என்று இலக்கியங்கள் விளிக்கின்றன. எச்சில் அமுதமோ இல்லையோ அது நாற்றமில்லாமல் வாயில் புற்றுநோய் இல்லாமல் இருக்க வாய்ச்சுகாதாரமும் மிகவும் முக்கியமானதாகும். புற்றுநோயில் புற்றுநோய்க்கலங்கள் ஒட்டுமொத்த வெளிப்புறத் தோற்றம் கால்களை விரித்திருக்கும். நண்டின் தோற்றத்தை […]

குழந்தைகளுக்கு எத்தனை தடவைகள் உணவு வழங்கப்பட வேண்டும் என்பது, குழந்தை உண்ணும் உணவின் சக்தியினளவிலும், கொடுக்கப்படும் உணவில் எவ்வளவை குழந்தை உட்கொள்கின்றது என்பதையும் பொறுத்தும் அமையும். ஒன்று தொடக்கம் இரண்டு தேக்கரண்டியளவு எண்ணெயை உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தும் போது, உணவிலுள்ள சக்தியினளவு அதிகரிக்கும். பொதுவாக மேலதிக ஆகாரம் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டு 1 – 2 மாதங்களில் குழந்தை அதற்குப் பழக்கப்பட்டு விடும். பின்வரும் அட்டவணையில் குழந்தைகளின் வயதிற்கேற்ப பொதுவாக வழங்கப்கூடிய மேலதிக உணவுகளும், அளவுகளும் வேளைகளும் தரப்பட்டுள்ளது. […]

சிக்கனத்துக்க பெயர் எடுத்தவர்கள் நாம். சேமிக்கும் பழக்கம் எம்பலத்துக்கு பக்கபலமாக இருந்தது. நாம் சிறுகச் சிறுகச் சேமித்த சேமிப்புகள் சத்துமா பேணிகளுக்கும், டொனிக்குகளுக்கும், பலத்துக்கு என்று சொல்லிவரும் மாத்திரைகளுக்கும், அநாவசிய மருத்துவச் செலவுகளுக்கும், இரசாயன உணவுகளுக்கும் இரையாசிக் கொண்டிருப்பது ஒரு வேதனையான விடயமாகும். சமூகம் ஆரோக்கியம் கிடைக்குமென்று நம்பி, ஆபத்தான பலவற்றை வாங்கி உட்கொள்வது நோயை விலைகொடுத்து வாங்குவதுக்கு ஒப்பானது. இயற்கைதான் எமது இனிய வைத்தியன். தடிமன் குறுகியகால வயிற்றோட்டம், தசைப்பிடிப்பு, சாதாரண கை, கால் உளைவு, […]

உங்கள் முகப் பராமரிப்பில் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்களோ அதைவிட உங்கள் பாதங்களை பராமரிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு உண்டு. ஏனெனில் இடத்துக்கு இடம் நகர்ந்து எமது தேவைகளை இயல்பாக பூர்த்திசெய்வதற்கு இறைவனால் அளிக்கப்பட்ட இயற்கையான கொடை பாதங்களாகும். எனவே செல்வத்தை நாம் கவனமின்றி விடுவது நியாயமாகுமா? உங்கள் ஆரோக்கியமான பாதக் கவனிப்புக்காக….. உங்கள் பாதங்களைத் தினமும் கூர்ந்து அவதானித்தல் வேண்டும் அத்துடன் பாதங்களைச் சுத்தமாக பேணுதல் வேண்டும். குறைந்தது பாதங்களை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது […]

இரத்த தானம் தெரியும் அதென்ன குருதிச் சிறு தட்டு பரித்தியாகம்? இதுவும் இரத்த தானம் போன்றதே ஆனால் அதினிலும் விசேடமானது. இதைப்பற்றி நாம் இப்போது அறிந்து கொள்வோம். முதலில் “குருதிச் சிறு தட்டு” என்றால் என்னவென்று அறிவோம் குருதிச் சிறு தட்டு என்பது இரத்தத்தில் உள்ள ஒரு பகுதி அல்லது கூறு எனலாம். இரத்த பெருக்கு ஏற்படாமல் இருக்க உதவிபுரிகின்றது. அதாவது ஒரு காயம் ஏற்பட்டால் அதனை இந்த குருதிச் சிறு தட்டுகளின் உதவியுடன் எமது ஒடல் […]

சிசேரியன் சத்திரசிகிச்சையின் மூலமான பிள்ளைப் பேற்றின் பின்னர் எனக்கு முன்னுள்ள பிரசவத் தெரிவுகள் எவை? இலங்கையில் 20 -30 வீதமான கர்ப்பிணிப் பெண்கள் சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் சிசுவைப் பெற்றெடுக்கின்றனர். சில பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்டசிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்படுகின்றனனர். சிசேரியன் சத்திர சிகிச்சைக்குட்பட்ட நீங்கள் சாதாரண யோனிவழிப் பிரசவம் அல்லது சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் மீண்டும் சிசுவைப் பெற்றெடுக்கலாம். இது பின்வரும் காரணிகளில் தங்கியுள்ளது. சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொண்டமைக்கான காரணம் உடனடியாக அல்லது அவசரமாக மேற்கொள்ளப்பட்டதா? கர்ப்பப்பை மீதான […]

நாளாந்த கருமங்களில் ஈடுபடும் போது பின்வரும் ஏதேனும் மாற்றங்களை உணர்கின்றீர்களா? உடலினோரு அங்கமோ ( முகம், கை, கால்) பாதி உடலோ உணர்வற்றதன்மை திடீரென ஏற்படுதல் சடுதியானதொரு தடுமாற்றம் அல்லது பேசுவதற்று முயற்சி செய்யும் போது நாக்கு பிறழாத தன்மை அல்லது மற்றவர்கள் பேசுவதை கிரகித்து உள்வாங்க முடியாத தன்மை. ஒரு பக்கப் பார்வையோ, இரு கண்களின் பார்வையிலோ திடீரென பார்வை குறைபாடு ஏற்படுதல். நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென உருவாகும் சமனிலை குழப்பம் […]

அன்றைய காலத்தில் பாம்புகள் செல்வத்தின் அடையாளமாகக் கருதப்பட்டன. சிவனின் கழுத்து ஆபரணமாகவும் விஷ்ணுவின் படுக்கையாகவும் சித்திரிக்கப்படும் பாம்புகளினால் சில சமயம் ஆபத்துக்கள் நேர்ந்து விடுகின்றன. இந்த ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து வைத்திருப்பது பயனுடையதாக இருக்கும். இலங்கையில் 104 வகைபாம்புகள் வாழ்கின்றன. இவற்றில் அனேகமானவை தீங்கு விளைவிக்கக் கூடியவையல்ல. எல்லாப் பாம்புகளும் தீண்டுவதில்லை. தீண்டும் பாம்புகள் எல்லாம் நச்சுப் பாம்புகளில்லை. எல்லாவிசப் பாம்புகள் தீண்டுதல்களும் மரணத்தில் முடிவதில்லை. இலங்கையில் பாம்புதீண்டுதலினால் ஏற்படும் […]

ஒரு தாய் எத்தனையோ சிரமங்களுடன், தனது வயிற்றில் ஒன்பது மாதமாகச் சுமந்து குழந்தையைப் பெற்றுக் கொள்கிறாள். அவளுடைய எதிர்பார்ப்பு தனது குழந்தையை ஆரோக்கியமான குழந்தையாக வளர்ப்பதே. அதற்காக அந்தக் குழந்தையை கிருமித் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பது மிக முக்கியமானதாகும். அண்மைக் காலங்களில், எமது வைத்தியசாலையில் நோய்க்கிருமித் தொற்றுக்களால் பாதிக்கப்படும் பச்சிளங்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனைத் தடுப்பதற்கு, பெற்றோர் உறவினராகிய உங்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது. அதற்காக நீங்கள் கீழ்க் குறிப்பிடப்படுபவை தொடர்பாக அக்கறை காட்டிச் செயற்பட வேண்டும். பிள்ளை […]

எளிமையும் எண்ணற்ற சத்துக்களையும் கொண்டது ஜம்பு. இதுவோர் முதல் இலை வரை பயன்படக்கூடியதும் மருத்துவ குணங்களைக் கொண்டதும், கோடை கால தாகத்தையும், பசியையும் தீர்க்கும் அருமருந்தும் ஆகும். ஜம்பு மரத்தினுடைய வரலாறு, பயன்கள் எப்படி நடுவது என்பவை பற்றிப் பார்ப்போம். ஜம்பு மரத்தின் வரலாறு முதலில் ஜம்பு மரத்தின் பெயர்கள் பற்றி பார்ப்போம். தமிழிலே ”ஜம்பு” என்றழைப்பது போல் ஆங்கிலத்தில் இதனை றோஸ் அப்பிள் (Rose apple), பெல் பழம் (Bell fruit), றோயல் அப்பிள் ( […]