You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

ஆரோக்கியமாக வாழ அனைவருக்கும் ஆசை நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றோமா ? என்று கேட்டால் 100இற்கு 90 வீதம் இல்லை என்பதே பதில். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆரோக்கியமாக வாழ எமக்கு உணவு பழக்கங்கள் மிகவும் அவசியமாகின்றன. ஏதாவது உடல்நிலை பாதிப்பு என்று வைத்தியரிடம் போனால் மருந்துடன் நல்ல சத்தான சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும் என்று தான் சொல்வார்கள். சரி சத்தான உணவு என்றால் என்ன? இரத்தம், எலும்பு, தசைகள், தோல், நரம்புகளுடன் பின்னிப் […]

வைத்தியர் – பிள்ளைக்கு நிறைகுறைவு என்று அனுப்பியிருக்கினம்… தாய் – ஆம் நிறை குறைவுதான், ஆனால் அவன் நல்ல சுட்டி நிறை குறைஞ்சாலும் “அக்ரிவ்” என்றபடியால் நான் கவலைப்படவில்லை. ஆண் பிள்ளை உயரம் குறைவாய் இருக்கிறான் என்றபடியால்தான் வந்தனான். குழந்தைகளின் வளர்ச்சி வயதுக்கேற்ப இருப்பது பெற்றோர்களின் பெருவிருப்பாகும். வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பதால் பல விருப்பத்தகாத பின் விளைவுகளைத் தடுக்க முடியும். சில நேரங்களில் நோய் நிலைமைகளின் ஆரம்ப வெளிப்பாடாகவும் வளர்ச்சிக் குறைபாடு அமைகின்றது. […]

பாரிசவாதம் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாக கருதப்படுவது ஏன்? பாரிசவாதம் என்பது ஒரு அவசர சிகிச்சை தேவைப்படுகின்ற நோயாகும். உங்களிற்கு அல்லது உங்களிற்கு தெரிந்தவர்களுக்கு பாரிசவாதத்திற்கான குணங்குறிகள் ஏற்படின் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரவும். உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரவும். மூளைக்கான குருதியை விநியோகிக்கின்ற இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் அதனால் பாரிசவாதத்திற்கு ஆளாகியிருந்தால் இரத்தக்கட்டியை உடனடியாக கரைப்பதற்கு விசேட மருந்து தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் கிடைக்கப்பெறுகின்றது. இந்த மருந்தானது பாரிசவாதத்திற்கான […]

உயிரினங்களின் இருப்புக்கு அத்தியாவசியமான ஒரு வளமாக தண்ணீர் அமைந்துள்ளது. மனிதனைப் பொறுத்தவரை அவனது அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான ஒன்றாக தண்ணீர் விளங்குகிறது. மனிதனால் உணவின்றி ஒரு மாத காலம் வரைவாழ முடியும். ஆனால் தண்ணீர் இன்றி ஒரு சில நாள்கள் கூட உயிர் வாழ முடியாது. இதனைத்தான் வள்ளுவப் பெருமான் “நீரின்றி அமையாது உலகு” எனக் குறிப்பிடுகின்றார். அப்படிப்பட்ட மனிதர்களது முக்கிய அடிப்பதை் தேவைகளில் ஒன்றான தண்ணீர் இன்று யாழ். மாவட்ட மக்களுக்குப் பாதுகாப்பான நன்னீராகக் […]

ஒவ்வொரு வாரமும் இரண்டு மூன்று பேராவது ஈரல் சீழ்க்கட்டிகளுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார்கள். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வேதனையை அளிப்பதுடன் சிலவேளைகளில் மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியது. தடுக்கப்படக்கூடிய இந்த நோய் வடபகுதி மக்களிடையே பரவியிருக்கக் காரணம், இந்த நோய் பற்றிய விழிப்புர்வு இன்மையும். அறியாமையுமாகும். பெரும்பாலான ஈரல் சீழ்க்கட்டிகள் என்ரமீபா ஹிஸ் ரோலிடிகா ( Entamoaba Histotlitica) எனப்படும் ஒரு கல நுண்ணங்கிகளால் ஏற்படுகின்றன. இனி இந்த நுண்ணங்கிகள் எவ்வாறு மனிதனின் ஈரலைச் சென்றடைகின்றன […]

சிறார்கள் எப்போதும் சுறுசுறுப்பானவர்கள். எதையும் ஆராயும் குணம் கொண்டவர்கள். வேகமாக செயற்பட விளைபவர்கள். அவர்களின் இயக்கம் பெரியோர்களைப் போன்று ஒருங்கமைக்கப்பட்டதல்ல. இவை சிறுவர்களின் கண்களில் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படக் காரணமாகின்றன. கண்களில் காயங்கள் ஏற்பட்டுவிட்டால் அவர்களின் ஒத்துழைப்புடன் கண்களைப் பரிசோதித்தல் மிகவும் சிரமமானது. கண்களுக்கு உரிய முறையில் மருந்திடவும் அவர்கள் அனுமதிப்பதில்லை. கண்ணில் ஏற்படும் வலிகாரணமாக கண்ணைக் கசக்க முற்படுவதால் காயங்கள் அதிகரிக்கலாம். காயங்களால் ஏற்படும் தற்காலிக பார்வை இழப்புகளும் சிறார்களின் மூளையில் நிரந்தர பார்வை விருத்தி […]

Vitiligo என்றால் என்ன? Vitiligo என்பது தோலில் ஏற்படுகின்ற ஒர் குறைபாட்டு நிலைமையாகும். எமது தோலின் நிறத்துக்குக் காரணமான பதார்த்தமாகிய மெலனினைச் சுரக்கும் கலங்கள் முற்றாக அழிக்கப்படுவதால் அந்த இடங்களில் வெள்ளை நிற மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் இந்த நிறமாற்றம் உருவாவதற்கான காரணம் தோலில் இந்த நிறமாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் ஆய்வாளர்கள் இது தொடர்பில் வெவ்வேறு கொள்கைகளை உருவாக்கி உள்ளனர். இவற்றுள் உடலினுள் செல்கின்ற பிறபொருள்களை அழிப்பதற்காகத் தொழிற்படுகின்ற நீர்ப்பீடனத் தொகுதியானது தனது […]

இலங்கையில் 93 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் கடல் பாம்புகளும் அடங்கும். எனினும் ஐந்துவகை பாம்புகள் மட்டுமே அதிக நச்சுத் தன்மையுள்ளனவாகவும், இறப்பை ஏற்படுத்தக்கூடியளவாகவும் உள்ளன. இலங்கையில் உள்ள அதிக நச்சுப்பாம்புகள். நாகபாம்பு (Cobra) எண்ணை விரியன் ( Common Krair, Ceylon Krait) கண்ணாடி விரியன் ( Russell’s Viper) சுருட்டை பாம்பு ( Saw Scaled Viper) பெரும்பாலான இறப்புக்கள் நாகபாம்பு, எண்ணை விரியன், கண்ணாடிவிரியன் என்பவற்றினாலேயே ஏற்படுகின்றன. பாம்புக்கடியினால் ஏற்படுகின்ற நோய் […]

எக்ஸிமா என்பது தோலில் ஏற்படும் ஒரு வகையான ஒவ்வாமை நோயாகும். இது கிருமித் தொற்றால் ஏற்படும் நோய் அல்ல. இந்நோயானது சில நபர்களுக்கு மட்டுமே ஏற்படும். இது ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை உண்ணுவதாலும் இறப்பர் பாதணிகளை அணிதல் போன்றவற்றாலும் ஏற்படலாம். இந்நோயானது நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு இது வெறுமனே தோல் கடியை மட்டும் ஏற்படுத்தும். சிலருக்கு இது தோல்கடியுடன் சேர்த்து அந்தப் பகுதியில் நீர் போன்ற திரவம் வடிதலையும் ஏற்படுத்தும். இத்தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியர்கள் […]

வருடந்தோறும் பெப்ரவரி 4ம் திகதி புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தினமாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது. அதாவது புற்றுநோய் பற்றிய சுமையை எல்லா நாடுகளும் உலகளாவிய ரீதியில் இணைந்து எவ்வாறு சிந்திக்கலாம் என்பதைப் பற்றி தம் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதே பிரதான நோக்கம். அதேவகையில் 2015ம் ஆண்டின் தொனிப்பொருள் உணர்த்திநிற்பது யாதெனில் “எமக்குப் பின்னால் நிற்காதீர்” யாவரும் ஒன்றினைவோம்” புற்றுநோயானது மனிதனின் உடலிலுள்ள கலங்களானவை கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி மற்றும் பரவிக்கொண்டு செல்லும் செயற்பாட்டிலான நிலைமையாகும். இந்நிலைமையானது உடலிலுள்ள அனேகமான […]