You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

நீங்கள் எப்போதாவர் தலைச்சுற்றினால் அவதிப்பட்டீர்களா?, நாங்கள் இப்பொழுது பார்க்கலாம். நாம் எவ்வாறு உடல் சமநிலையைப் பேணுகின்றோம் என்று. எமது கண்கள் காதுகள்( உட்காது) தசைகள், மூட்டுகள், பிரதானமாக உடல் சமநிலையைப் பேண உதவுகின்றன. எமக்கு நல்ல கண்பார்வை இருக்குமானால் நாங்கள் சமநிலையாக நிற்பதை உணரமுடியும். எமது உடல் சமநிலைக்கு எழுபது சதவீத பங்கை கண்கள் வகிக்கின்றன. எமது தசைகளும் மூட்டுகளும் எமது மூளைக்கு நாம் நிற்கும் உடல் நிலையைபற்றி செய்தி அனுப்புவதால் அவற்றின் தொழிற்பாட்டின் மூலம் எமது […]

இன்புளுவன்சா A(Infuluenza A) எனப்படுவது ஒருவகை வைரஸ்ஸினால் ஏற்படும் நோய் ஆகும். இது பெரும்பாலும் சுவாசத் தொகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த நோயானது குறித்த பிரதேசத்திலோ அல்லது நாட்டிலோ பரவி பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நோயானது சாதாரண காய்ச்சல், இருமல், என ஆரம்பித்து முடிவில் தீவிரமடைந்து இறப்பு வரை இட்டுச்செல்லும். இந்த நோயால் அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் 2வயதுக்கு குறைந்த சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் ஏற்கனவே ஆஸ்துமா (Asthma) , COPD […]

ஒரு குழந்தை 2500 கிராமிலும் குறைவான எடையுடன் பிறக்கும் போது அக்குழந்தை பிறப்பு நிறை குறைவடைந்த (Law birth weight) குழந்தை என அழைக்கப்படும். அதை ஒரு சிறிய குழந்தை எனவும் கூறலாம். பிரதானமாக உரிய காலத்துக்கு முன் குழந்தை பிறப்பதாலோ அல்லது கர்ப்பத்திலேயே நிறைகுறைந்த சிசுவாக வளர்வதாலோ பிறப்பு நிறை குறைந்த குழந்தை பிறக்கலாம். பிறப்பு நிறை குறைந்த குழந்தைக்கு விஷேடமாக மிகவும் நிறைகுறைந்த குழந்தைக்கு அநேக பிரச்சினைகள் ஏற்படலாம். அதன் காரணமாக அவர்களை பெரும்பாலும் […]

ஏறத்தால 15 மில்லியன் குழந்தைகள் குறைமாதக் குழந்தைகளாக வருடந்தோறும் இவ்வுலகில் பிறக்கின்றார்கள். பிறக்கும் 10 குழந்தைகளில் ஒரு குழந்தை குறைமாதக் குழந்தையாக இருக்கின்றது. குறிப்பாக பிறக்கும் குழந்தைகளில் 12 வீதமானோர் குறைமாத குழந்தைகளாக வருமானம் குறைந்த நாடுகளிலும், 9 வீதமாக வசதிபடைத்த நாடுகளிலும் காணப்படுகின்றனர். இலங்கையில் 10.7 சதவீதமான குழந்தை பிறப்புக்கள் குறை மாதத்தில் நிகழ்கின்றன. உலகில் மிக அதிகளவு குறைமாத பிரசவங்கள் நடக்கும் நாடாக இந்தியாவும், அதற்கு அடுத்தாக சீனாவும் உள்ளன. மாறாக மிகக்குறைந்தளவு குறைமாதப் […]

புதிதாய் பிறந்த குழந்தையானது, பொதுவாக இளஞ்சிவப்பு நிறமாகக் காணப்படும். ஆனால் சில காரணங்களால் அவர்களின் தோல் சாதாரண இளஞ்சிவப்பு நிறத்தைவிட வேறு நிறங்களாக மாற்றமடையலாம். அதிகளவு மெலனின் (Melanin) எனப்படும் நிறப்பொருள் தோலில் இயற்கையாகவே காணப்படின் ( உதாரணம் ஆபிரிக்க குழந்தைகள்) அவர்கள் கடும் நிறம் ( Dark complexion) உள்ளவர்களாக இருப்பார்கள் தோலில் பிளிறூபின் (Bilirubin) எனப்படும் மஞ்சள் பதார்த்தம் படியுமானால் தோல் மஞ்சள் நிறமடையும். இந்த நிலையைப் பற்றி கீழ் வரும் பந்திகளில் விளக்கப்பட்டுள்ளது. […]

ரவ்டோ(Rhabdo) குடும்பத்தைச் சேர்ந்த வைரஸால் ஏற்படும் இவ் வைரஸ் இளஞ்சூட்டுக் குருதியுடைய விலங்குகளை அதிகம் தாக்கும். உமிழ் நீரூடாக தசைக்கும் நரம்புக்கும் பரவிச்செல்லும். அதனால் நரம்புக் கடத்தியூடாக மூளைக்குச் சென்று உயிர் இரசாயன பொருளைத் தாக்குவதால் நரம்பிழையம் பாதிக்கப்படுகின்றது. இது நீர் வெறுப்பு நோய் அல்லது விலங்கு விசர் நாய்க்கடி நோய் எனப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலையாகும். நோயரும்பும் காலம். இது பல காரணிகளில் தங்கியுள்ளது. கடிபட்ட இடத்துக்கும் மூளைக்கும் இடைப்பட்ட தூரம், […]

இலங்கையைப் பொறுத்த வரை பிறந்ததிலிருந்து 12 வயது வரை அனைத்துப் பிள்ளைகளுக்கும் தேசிய தடுப்பேற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின்படி குறித்த சில ஆபத்தான நோய்களுக்கு எதிராகத் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் தடுப்பு மருந்துகள் குறித்தும், வழங்கப்படும் வயது குறித்தும் கீழே சுட்டிக் காட்டப்படுகின்றது. BCG – பிறந்தவுடன் முக்கூட்டு (DTP) + Hep B + Hib 2ம், 4ம், 6ம் மாதங்கள் போலியோ 2ம், 4ம், 6ம் மாதங்கள் 1½ வயது, 5 வயது. […]

தலை – ஒரு கிழமையில் இரண்டு தடவையாவது தலையைக் கழுவுங்கள் ( முழுகுதல்), சொடுகு, பேன் என்பன தலையில் தொற்றாமல் பாதுகாருங்கள். தனியான சீப்பு, துவாய் என்பவற்றைப் பாவிக்கவும். தலையில் கடி ஏற்படும்போது கை நகங்களாலும், சீப்பினாலும் சொறிவதைத் தவிர்க்கவும். இவற்றுக்கு வைத்திய ஆலோசனை பெறுவது நன்று. சூடான அரப்பு, சீயாக்காய், தேசிக்காய், சூடான வெந்நீர், என்வற்றையும் பாவிப்பதைத் தவிர்க்கவும். Clip, Hairpin என்பவற்றை தலையில் காயம் ஏற்படும் வண்ணம் ஏற்றுவதைத் தவிர்க்கவும். கண்கள் – குளிர் […]

ஒருவருக்கு வலிப்பு ஏற்படின் அவருக்கு காயங்கள் ஏற்படுத்த கூடியவற்றை அப்புறப்படுத்தல், நோயாளியைத் தரையில் படுக்கவிடல், அவரது சுவாசத்துக்கு தடை ஏற்படாதவாறு தலையை சற்றுப் பின்னால் சாய்ந்த நிலையிலும் சரித்து படுக்கவிடல், முடியுமாயின் நோயாளியை இடது பக்கத்துக்குச் சரிந்து படுக்க விடுவது சிறந்தது. மற்றும் நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தல், வலிப்பினால் நோயாளிக்கு நாக்கு கடிபடாமல் தவிர்த்துக்கொள்ள றப்பர் சட்டம் அல்லது உருட்டப்பட்ட துணித்துண்டு போன்றவற்றை வாயில் வைக்கலாம். இரும்பு பொருள்கள் எதனையும் திணிக்க கூடாது. வலிப்பு நிகழ்ந்த […]

இன்று எம்மிடையே பல்வேறுபட்ட தொற்றுநோய்கள் மிக வேகமாகப் பரவி வருகின்றன. இத் தொற்றுநோய்கள் பெருமளவில் பக்ரீரியா ( Bacteria) , வைரஸ் , பங்கஸ் என்ற நுண் உயிர்களால் ஏற்படுகின்றன. நெருப்புக்காய்ச்சலும் ஒரு வகை பக்ரீரியாவால் ஏற்படுகின்ற தொற்று நோயாகும். இந்த நோயை ஏற்படுத்துகின்ற பக்ரீரியாவின் பெயர் Salmonella typhi. சில சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பிட்ட பக்ரீரியாவாலும் நெருப்புக் காய்ச்சல் ஏற்படுகின்றது. நெருப்புக் காய்ச்சலை உருவாக்கக் கூடிய நோய்க் கிருமிகள் மனித உடலில் மட்டும் பெருகக்கூடிய இயல்புகள் கொண்டுள்ளன. […]