You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

இன்றைய நவீன, இயந்திரமயமான வாழ்வியலில் பலரது முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக விளங்குவது இரப்பை அழற்சி (அல்சர்) என்பதாகும். அதாவது இரைப்பைச் சுவரில் ஏற்படுகின்ற அழற்சி அல்லது சீதமென்சவ்வின் சுரண்டலினால் இரப்பைச் சுவரின் போர்வை பாதிக்கப்படுதலாகும். இது நீண்ட நாள் செயற்பாட்டிலும், உடனடியாகவும் இடம்பெறலாம். கூடுதலாக அளவுக்கு மேற்பட்ட மதுபாவனை, புகைப்பிடித்தல், நீண்ட நாள் வாந்தி, மன அழுத்தம் போன்ற வற்றாலும், சில வகை மருந்துகளின் பக்கவிளைவாகவும் இரப்பை அழற்சி ஏற்படுகின்றது. மேலும் ஒரு வகை பக்ரீரியாதாக்கத்தினாலும் இரப்பை […]

பள்ளிப்பருவத்தில் இருந்தே மாணவர்கள் உடல் உழைப்புப் பயிற்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 60 வயதைத் தொட்டுவிட்ட யாவரும் மாரடைப்புக்கான எந்த அறிகுறியும் இல்லாவிட்டாலும் வருடத்துக்கு ஒரு முறையாகிலும், குருதியில் கொழுப்பின் அளவு, வெல்லத்தின் அளவு, ECG போன்ற இருதயப் பாதிப்புக்களைக் கண்டறியும் பரிசோதனைகளை வைத்திய ஆலோசனையுடன் செய்து உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்யுங்கள். குடும்பத்தில் இளவயது மாரடைப்பு பாதிப்புகள் இருப்பின் 25 வயதில் இருந்தே வருடாந்த பரிசோதனைகளைச் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். வைத்திய ஆலோசனைக்கு அமைய உணவு, […]

ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் ஒரு வரப்பிரசாதம். மனித வாழ்வெனும் விருந்துக்குத் தலையாய போஷாக்கை அளிக்கும் ஆழ்ந்த உறக்கம், நாள் முழுக்க வேலை செய்யும் உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் ஒய்வை வழங்குவதுடன், களைப்பைக் குறைத்து, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை வழங்குகின்றது. ஒவ்வொரு தனி நபருக்கும் தத்தமது வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியைத் தூக்கத்திலேயே செலவிடுகிறார்கள். எனினும் தூக்கத்தில் அவர்களை அறியாமல் ஏற்படுகின்ற பிரச்சினை குறட்டை. இது வயது வித்தியாசம் இன்றி எல்லோரிலும் ஏற்படக் கூடியது. ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் […]

இன்று எங்கள் மத்தியில் பல விதமான காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இவற்றில் அரிதான ஒருவகைக் காய்ச்சலை எலிக்காய்ச்சல் என்று அழைக்கின்றோம். இந்தக் காய்ச்சல் Laptospira interrogans எனப்படுகின்ற ஒரு வகை பக்றீரியாவால் ( Gacteria ) ஏற்படுகிறது. இந்த நோய்க் கிருமி பொதுவாக மிருகங்களின் (எலி) சிறுநீருடன் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட நோய்க்கிருமி நீர்த் தேக்கங்களில் இருந்து மனிதனின் தோலில் உள்ள சிறு புண்கள் ஊடாகவோ அல்லது தோலின் மென்மையான பகுதிகள் ஊடாகவோ (Mucous Membrane) மனித […]

எவ்வயதினருக்கும் ஏற்ற பயிற்சி எது என்று கேட்டால் அது நடைப்பயிற்சி தான். இந்தப் பயிற்சி எம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் நாம் இழந்த ஆரோக்கியத்தையும் மீட்டுத்தர உதவுகின்றது. எம்மை எப்போதும் புத்துணர்வோடும் ஆரோக்கியத்தோடும் வைத்திருப்பது நடைப்பயிற்சிதான் என்றால் அது மிகையல்ல. ஆங்கிலத்தில் walking என நாகரிகமாக அழைக்கப்படும் இந்தப் பயிற்சி அனைவரும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டியதொன்று. இதற்கு பெரிய அளவில் எந்த முன்னேற்பாடும் செய்ய வேண்டிய தேவையில்லை. குறிப்பிட்ட நேரத்தை இதற்காக நாம் ஒதுக்க வேண்டியது மட்டும்தான். வேறு […]

நாம் கர்ப்பகாலத்தில் உண்ண வேண்டிய உணவானது எமது உடற்திணிவுச் சுட்டிக்கும் எமது உடற் தொழிற்பாட்டின் அளவுக்கும் ஏற்பமாறுபடும். முதல் மூன்று மாதங்களில் போசனைப் பொருள்களின் தேவையானது மிகச் சிறியளவிலேயே அதிகரிக்கின்றது. பின்பு சீராக அதிகரித்து 6 மாதங்களின் பின்னர் இத்தேவை உச்ச நிலையை அடையும். உண்பது எவற்றை? எமக்கு ஏற்ற நிலை அதிகரிப்பு எவ்வளவு என்பதற்கு அமைவாக ஆறு வகை உணவுப் பொருள்களிலிருந்து தெரிவு செய்து உண்ண வேண்டும். உண்ணக்கூடிய 6 வகை உணவுகளுக்கான சில பரிந்துரைகள் […]

உலகில் அறியப்பட்ட உடற்பயிற்சிகளில் நீச்சலே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்கின்றது விஞ்ஞானம். ஒரு மணிநேர நீச்சலில் உடலின் அத்தனை தொகுதிகளும் பழுது பார்க்கப்பட்டு அவற்றின் தொழிற்பாடு சீராகி விடுகிறது. இன்று எம்மை அச்சுறுத்தும் நீரிழிவு, கொலஸ்ரோல், இதய நோய்கள், உயர் குருதியமுக்கம் என்று அத்தனைக்குமே ஒழுங்கான நீச்சல் பயிற்சி ஒரு சிறந்த நிவாரணி! இன்றைய நிலையில் வெகு சீக்கிரத்தில் வீட்டுக்கு ஒரு நீரிழிவு நோயாளி என்ற பெருமை இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் ஏற்படும் என்று […]

உடல் உழைப்புக்குறைந்து மூளை உழைப்புக் கூடிய இன்றைய அவசல அலுவலக வாழ்க்கையில் எவரைப் பார்த்தாலும் ஏதாவது ஒரு தொற்றா நோயுடன் வாழவேண்டிய நிலமை. ஒவ்வொரு வீடுகளிலும் மருந்து டப்பாக்களும், மருந்துப் பைகளும் மேசைளிலும் பேணப்படும் நிலை. பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்பு 60 – 65 வயதளவில் தான் தொற்ற நோய்களுக்கு மருத்துவம் செய்யும் நிலைமை இருந்தது. ஆனால் இன்று, நாற்பது வயதைக் கடக்கின்றோமோ இல்லையோ அதற்கான சோதனைகளைச் செய்யவேண்டிய கட்டாயமும், மருந்துகளை பாவிக்க வேண்டிய நிலையும் […]

ஒரு குழந்தையின் சுவாசத் தொகுதியானது மூக்கிலிருந்து ஆரம்பித்து சுவாசப்பையினுள் உள்ள காற்றறைகளில் (Alveli) முடிவடைகின்றது. காற்றறைகளிலேயே ஒட்சிசன் எனப்படும் நாம் உயிர் வாழ்வதற்கான நல்ல வாயு குருதிக்குள் எடுக்கப்பட்டு குருதியிலிருந்து காபனீரொட்சைட் எனப்படும் கழிவு வாயு வெளியகற்றப்படுகின்றது. மூக்கினுள் செல்லும் காற்றானது, தொண்டை, குரல்வளை, வாதனாளி போன்ற சுவாசக் குழாய்களினூடாக காற்றறைகளை அடையும். எமது சூழலில் காணப்படும் வேறுபட்டகிருமிகளால் சுவாசத்தொகுதி தொற்று நோய்கள் உண்டாகலாம். பொதுவாக வைரசு கிருமித் தொற்றே குழந்தைகளில் அதிகமா ஏற்படுகின்றது. சுவாசப்பாதையை மேல் […]

குழந்தைகளை வைத்திய சிகிச்சைக்காக கொண்டு செல்ல வேண்டிய இரண்டாவது மிகப் பொதுவான பிரச்சினை வயிற்றோட்டமாகும். இது மிகப் பொதுவான பிரச்சினையாகக் காணப்படினும் வசதி வாய்ப்புக்கள் குறைந்த இடங்களில் சிகிச்சை தாமதமானால் சில வேளைகளில் உயிராபத்துக்கூட ஏற்படக்கூடும். உலகில் ஒவ்வொரு வருடமும் 1.7 மில்லியன் வயிற்றோட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றார்கள். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போசனைக் குறைபாட்டுக்கு ஒரு பிரதான காரணம் வயிற்றோட்டமாகும். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஒரு சாதாரண 3 வயதுக்குட்டபட்ட குழந்தைக்கு ஒரு வருடத்தில் […]