You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

எப்போதும் பாரம்பரிய பழக்கங்களுக்கும் புதிய மருத்துவ அறிவுரைகளுக்கும் இடையில் ஒரு கண்ணுக்குத்தெரியாத இழுபறி இருந்து கொண்டே இருக்கும். இது கர்ப்பிணி தாய்மாருக்கும் அவர்களின் உணவு பற்றிய பல கேள்விகளுக்கும் பொருந்தும். ஒரு பெண் தாயாக மாறத் தொடங்கியவுடன் பலரும் இதை சாப்பிடாதே அதை சாப்பிடாதே என்று அறிவுரை கூறத்தொடங்கிவிடுவர்கள். உண்மையில் அந்த புதிதாக தாயாக போகும் பெண் தான் பாவம். மேலும் கிடைக்கும் சில அறிவுரைகளையும் வாசித்து அவளும் குழம்பி விடுவாள். இவ்வாறன சந்தேகங்களை தீர்ப்பதற்கு சற்று […]

இலங்கையில் சிறுநீரக நோயாளர்கள் அதிகரிக்க காரணமாகியுள்ள விவசாய இரசாயன உரவகைகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் பாவனையை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் கடந்த 20 ஆண்டுகளாக சில பிரதேசங்களில் மர்மமாக இருந்துவரும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மண்ணில் கலக்கும் விவசாயஇரசாயனப் பொருள்களே காரணம் என்று தமது ஆய்வுகள் உறுதி செய்வதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படும் சிறுநீரக நோய்களிலும் வித்தியாசமான காரணங் களால் சிறுநீராக நோய்க்கு உள்ளான […]

உலகமயமாதலின் ஊடாக மனித வாழ்க்கையில் பல்வேறுவகையான மாற்றங்கள் நிகழ்கின்றன. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மருத்துவத்துறையின் வளர்ச்சிப்போக்கு பிரமிக்கத்தக்க வகையில் சென்று கொண்டிருக்கின்ற அதேநேரம், உலகையே உலுக்கும் அளவிற்கு நோய்களின் தோற்றமும் வளர்ச்சியும், உச்சக்கட்டத்தை அடைந்துகொண்டே இருக்கின்றன. இந்த வகையில் மனித வாழ்க்கை முறையில் தவறான நடத்தைகளின் விளைவு மற்றும், சமநிலையற்ற சுகாதார பழக்க வழக்கங்களினால் மனித வாழ்வை நிர்க்கத்திக்கு உள்ளாக்குகின்ற நோய்களில் முக்கியமானதொரு நோயாக பாரிசவாதம் காணப்படுகின்றது. பாரிசவாதம் (Stroke) மனித மூளைக்கான இரத்தத்தையும், ஒட்சிசனையும் […]

சலரோகம் (Diabetes mellitus) இன்று எமது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வளர்ந்தவர்களில் 10 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் இந்நோயினால் பாதிக்கப்படுள்ளார்கள். வருங்காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். சலரோகமானது முறையாகச்சிகிச்சை பெறப்படாது விட்டால் உடலிலுள்ள எல்லா உறுப்புக்களையும் பாதிக்கக்கூடியது. கண்கள், மூளை, இருதயம், ஈரல், சிறுநீரகங்கள், பாதங்கள் என இப்பட்டியல் நீண்டு செல்கின்றது. சலரோகத்தினால் பாதங்களில் ஏற்படுமு் பாதிப்புக்களானவை பாரதூரமானவை. இதனால் சத்திரசிகிச்சை மூலம் கால்களை அகற்றவேண்டி ஏற்படலாம் (Amputatron) விபத்துக்களால் அல்லாத Amputatron இதற்கான […]

இன்றைய வாழ்வில் பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எனினும் தொடர்ந்து உணவு விடயத்தில் நீண்டநாள் பிளாஸ்ரிக் பொருள்களின் உபயோகம் ஆபத்தானது. அத்துடன் நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமுகமாக பல்கி பெருகிவரும் கேளிக்கை சாதனங்கள் – உதாரணமாக ரேடியோ, ரீவி, கணினிவோக்மேன், ஐபாட் போன்ற பல புதிய பொருள்கள் இவை எல்லாம் நம்மை சந்தோசமாக வைத்திருக்கும் என்ற அவ நம்பிக்கையிலே மேலும் புதிது புதிதாக சந்தைக்கு வரவழைத்ததுக் கொண்டு இருக்கின்றோம். எனினும் இவை அனைத்தும் நம்மை […]

முதல் பகுதியை பார்வையிடுவதற்கு.. 5. நெஞ்சு இறுக்கமாதல் ஒரளவு வளர்ந்த பிள்ளைகள் இந்த நிலையைக் கூறக்கூடியவர்களாக இருப்பர். தொய்வு நோய் நிர்ணயம் செய்வதில் ஏனைய நோய்நிலைகளை அறிய வினவ வேண்டிய கேள்விகள். இந்த நிலை எப்பொழுது ஏற்பட்டது? எவ்வளவு காலம் பிரச்சினையாக உள்ளது? அவ்வாறு என்ன காரணிகளினால் அதிகரிக்கின்றது? என்பவற்றை வினாவிய பின்னர் பின்வருவனவற்றை அறிதல் வேண்டும். பிள்ளைக்கு இதற்கு முன் எவ்வாறு இருந்தது? அடிக்கடி இழுப்பு வருகின்றதா? சுவாசிக்கும் போது சத்தம் ஏற்படுகிறதா? குழந்தைக்கு இடையூறாக […]

1. தொய்வு நோய் தொய்வு என்பது சுவாசத் தொகுதியுடன் தொடர்புடைய ஒரு நோயாகும். உலகெங்கிலும் ஏராளமான மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்தநோய் எமது உள்ளெடுக்கும், வெளிவிடும் சுவாசச் செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சுவாசக்குழாயிலும் அழற்சியை உண்டு பண்ணுகிறது. தொய்வினால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு இழைப்பு ஏற்படும். இந்த நோய் சிறுபிள்ளைகளுக்கு இலகுவில் ஏற்படுகிறது. இதனால் உறக்கம் மாத்திரமின்றி கல்வி நடவடிக்கைகளும் பாதிப்படையலாம். தொய்வு நோயின் பொதுவான அறிகுறிகள். இருமல்( பெரும்பாலும் இரவில்), இழைப்பு, நெஞ்சில் அழுத்த […]

தொழுநோய் என்பது மெதுவாக பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். இது தோலையும் நரம்புகளையும் பாதிக்ககடகூடிய ஒரு வியாதியாகும். இது Mycobacteruim keprae ( மைக்கோ பக்ரீரியம் லெப்றே) எனும் ஒரு பக்ரீரியாவினால் தோற்றுவிக்கப்படுகிறது. இது தொற்று உள்ளவர்களின் சுவாசத்தொகுதியில் இருந்து தும்மல், இருமல், மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. இது எல்லா வயதுடையவர்களையும் தாக்கக்கூடியதானாலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 10 வயதிற்கு குறைந்த சிறுவர்களில் இது ஏறக்குறைய 20 வீதமாகக் காணப்படுகின்றது. இந் நோய் தொற்றக்கூடிய அபாயமுடையோர். […]

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகலவனுக்கும் ( சூரியனுக்கும்) எலும்புக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்ந்து “எல்” என்ற வேர் சொல்லில் இருந்து எலும்பு என்ற பெயர் உருவானது. அதாவது எல் என்றால் ஞாயிறு, ஒளி என்று பொருள். ஞாயிறு ஒளியில் உள்ள நுண் ஊதாக் கதிர்கள் தோலினூடு ஊடுருவிப் பாய்ந்து வன்திசுவாகிய எலும்பு கெட்டிப்படுத்தப்படுவதை உறுதி செய்துள்ளனர். இன்றைய மருத்துவ விஞ்ஞானிகளும் எலும்பு ஒளியினால் உருவாக்கப்பட்டதை உறுதி செய்துள்ளனர். குழந்தைப் பருவத்தில் தலை முதல் கால் வரை […]

இன்றைய நவீன யுகத்திலே காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளுள் மருத்துவ ரீதியாகப் பெரிய பிரச்சினையாக விளங்குவது தீக்காயங்கள் எனலாம். மக்கள் தமது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. அதற்குத் தீர்வாக சிலர் தமக்குத்தாமே தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொள்வது சுலபமான வழி எனக் கருதி செயற்படுகின்றனர். இது இன்று குடாநாட்டைப் பொறுத்தவரை அதிகரித்துக் காணப்படுகிறது எனலாம். படித்தவர்கள், சிறுவர், பெண்கள், ஆண்கள் எனப் பலதரப்பட்டோரும் எடுக்கின்ற திடீர் முடீவு பெரிய பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்கிறது. […]