You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஏற்படும் ஆபத்தான நோய்நிலை இதுவாகும். இலங்கையிற் குழந்தைகளின் வைத்தியசாலை அனுமதியில் இரண்டாவது இடத்தினை இந்த நோய் வகிக்கின்றது. இது ஒரு வைரஸ் நோய் நிலை இது Human Metapneumo Virus. Adeno Virus, Parainfluensa Virus, போன்ற வைரஸ் தொற்றுதலினால் ஏற்படுகின்றது. நோய்த் தொற்றலின்போது சுவாசப்புன் குழாய்கள் அழற்சியுற்றுச் சுரப்புகள் அதிகரிக்கும். இதனால் குழந்தைகளில் சுவாசித்தல் கடினம். காய்ச்சல், இருமல், பால்குடித்தல் கடினம். சுவாசவீதம் அதிகரித்தல் என்பன காணப்படும். நோய் ஏற்படின் […]

நோயாளர்கள் மருந்து வகைகளைப் பாவிக்கும்போது பல்வேறு தவறுகளை விடுகின்றனர். அது மட்டுமன்றி வைத்திய சிகிச்சையை இடைநடுவே தமது சுயவிருப்பின் பெயரில் நிறுத்திக்கொள்ளலும், குறிப்பிட்ட நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உபயோகிக் காமையும் இவற்றில் சுட்டிக்காட்டப்பட வேண்டியவையாகும். இது தொடர்பாக விழிப்புணர்வூட்டும் முகமாகவே இந்த ஆக்கம் தரப்படு கின்றது. நோய் குணமான பின்பும் மருந்து வில்லைகளை உபயோகிக்க வேண்டும்?” சில நோய்கள் மட்டுமே குறுகிய மருந்துகள்மூலம் முற்றாகக் குணப்படுத்தக்கூடியன. சில நோய்களுக்கு நீண்டகால அடிப்படை யில் மருந்துகளைத் தவறாது உள்ளெடுப்பதன்மூலம்தான் […]

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல உடலின் நலத்தை, நகத்தில் தெரிந்து கொள்ளலாம். மருத்துவ உலகில் நகத்தினுடைய நிறம், வடிவம். நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்கமுடியும். நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, நுண்மை யான நரம்புக் கட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பதும் நகங்களே. நாம் நுட்பமான பொருள்களைக் கையாளவும், நமது தொடுஉணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள உரோமத்தினைப் போலவே கெராட்டீன் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் […]

வைத்தியசாலையில் பல்வேறு வகையான நோயுடைய நோயாளிகள் இருப்பதனால் பல தொற்றுநோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே வைத்தியசாலையில் அனுமதிக் கப்படும் நோயாளிகள் தங்களைத் தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தொற்றுநோய்களிலிருந்துநாம் பாதுகாப்புப் பெறுவது எப்படி? வைத்தியசாலையில் தங்கியிருக்கும் நாள்களை இயன்றவரை குறைத்துக்கொள்ள வேண்டும். தொற்று நோயுடைய வேறு நோயாளிகளுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக சுவாசத் தொற்றுடைய நோயாளிகளை (TB) கைகளைப் பின்வரும் சந்தர்ப்பங்களில் சரியான முறையில் கழுவிக் கொள்ள வேண்டும். சாப்பாட்டுக்கு முன் மருந்து […]

“மிகினும் குறையினும் நோய் செய்யும்” உடலில் உள்ள மூலப் பொருள்களில் எப்பொருள் மிகுந்தாலும் அல்லது எப்பொருள் குறைந்தாலும் உடலுக்கு ஊறு ஏற்படும் என்பதனை வள்ளுவர் அழகாகக் கூறியுள்ளார். எனவே, உடலுக்குத் தேவையான சத்தான சரிவிகிதமான உணவுகளை எந்த அளவுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வேளாவேளைக்குச் சரியான இடைவெளியில் சாப்பிடுதல் முக்கியம். உங்களை உயிர்ப்புடையவராக வைத்திருப்பதற்கும் உங்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதற்கும் உங்களுக்கும். இவ்வுலகுக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்கும் உணவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பாரம்பரிய உணவுப்பழக்கங்கள் […]

பெண் கர்ப்பமானது முதற்கொண்டு தனது குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும் என்ற உணர்வும் முனைப்படையத் தொடங்குகிறது. இதற்கேற்ப அந்தப் பெண் தனது உடலையும் தயார் செய்து கொள்கிறாள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதில் காணப்படும் உத்வேகமும் அவசரமும் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்ட வேண்டும் என்பதில் காணப்படுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் மிகவும் முக்கியமானது அனேகமான தாய்மார்கள் தமக்குப் பால் சுரப்பதில்லை. அல்லது அதன் சுரப்புக் குறைவாகக் காணப்படுகிறது. எனக் காரணம் கூறுகின்றார்கள். இது […]

உயர் குருதியமுக்கம் என்றால் என்ன? சாதாரணமாக எம்மில் இரத்தக்குழாய்களினூடாகக் குருதி பாய்கை பில் நாடிகளின்சுவர்களில் அமுக்கமொன்று ஏற்படுத்தப்படுகிறது. இது இதயம் சுருங்கும்போது 120mmHg இலும் குறைவாகவும், இதயம் தளரும்போது 80mmHg இலும் குறைவாகவும் சாதாரணமானவர்களில் இருக்கும். இதனையே வைத்தியல் 120/80 mmHg எனக் குறிப்பர். சில சந்தர்ப்பங்களில் இந்த அமுக்கமானது 140/90mmHg இனைவிட அதிகரிக்கும்போது அதனையே உயர்குருதியமுக்கம் என்கிறோம். உயர் குருதியமுக்கம் ஏற்படும்போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்? ஆரம்பத்தில் அறிகுறி எதுவும் தென்படாது. ஆனால் நீண்ட காலமாகக் […]

முதுமை என்பது தனி மனித வாழ்க்கைச்சக்கரத்தில் ஒரு பருவமே. இது நோய் அல்ல. ஆனால் பல நோய்களின் விருப்பத்திற்கு உரிய இடமாக இது உள்ளது என்பதுதான் உண்மை. அரோக்கியமான முதுமை என்பது தானும் சந்தோசமாக இருந்து கொண்டு மற்றவர்களையும் சந்தோசப்படுத்துவதே. வளரிளம் பருவத்தில் நாம் கற்றுக்கொண்ட நல்ல பழக்கவழக்கங்களே ஆரோக்கிய முதுமையைத்தரும். மாறாக, புகைத்தல், மதுபான பழக்கம், போதைப்பொருள் பாவனை, முறையற்ற பல பெண்களுடனான தொடர்புகள், ஆரோக்கியமற்ற உணவுப்பாவனை போன்ற தகாத பழக்கங்களைக்கொண்ட வளரிளம் பருவம் நல்ல […]

ஒரு பெண்ணின் மாதவிலக்கு சாதாரணமாக 45 – 55 வயதிற்கிடையில் நிரந்தரமாக நின்றுகொள்ளும். மாதவிலக்கு ஓயும்போது என்ன நேர்கின்றது. மாதவிலக்கு நிற்கும் காலம் நெருங்கும்போது ஒரு பெண்ணின் ஜனன உற்பத்தி உறுப்புக்களில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பாலியல் ஓமோன் திரவம் உண்டாவதும் சூல் வெளிப்படுதலும் படிப்படியாக குறைந்துகொண்டு போகும். இதனால் மாதவிலக்கு வட்டத்தில் ஒழுங்கின்மை ஏற்படலாம். ஓமோன் திரவம் குறைவடைந்ததும் நிரந்தரமாக மாதவிலக்கு ஏற்படுதலும் நின்றுவிடும். மாதவிலக்கு நிற்கும் காலம் நெருங்கும்போது மாதவிலக்குடன் இரத்தப்போக்கு அதிகமாக அல்லது […]

மனிதன் ஒவ்வொருவரும் தனித்துவமானவன். அவனின் ஆற்றலும் ஆழுமையும் கூட தனித்துவமானவைதான். ஒவ்வொரு மனிதனுள்ளேயும் அவனுக்கே உரித்தான பல திறமைகள் புதைந்திருக்கின்றன. ஒருவன் போன்று இன்னொருவன் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. எமது பழைய பதிவுகளை புரட்டிப்பார்ப்போமாக இருந்தால் பாரதியார் போன்று திருவள்ளுவர் இல்லை. அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி போன்று ஆறுமுகநாவலர் இல்லை. தியாகி பொன் சிவகுமாரன் போன்று தந்தை செல்வா இல்லை. நடிகர் விவேக் போன்று வடிவேலு இல்லை. இவர்கள் ஒவ்வொருவருமே ஆற்றலும் ஆர்ப்பணிப்பும் […]