You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

அநேகமான மக்கள் நம்புவதுபோல் மது பாவிப்பதனை மாத்திரைகள் பாவித்தோ அல்லது ஊசிகள் போட்டோ மறந்துவிடச் செய்ய முடியாது. உண்மையில் மதுவிலிருந்து ஒருவர் விடுபட விரும்பினால், மதுவானது தனக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது என்ப தனை உணர்ந்து கொண்டு, தன்னுடைய மன வலிமையின் துணைகொண்டு அதிலிருந்து விடுபடுதலே சாத்தியமானதாகும். அவ்வாறன்றி மதுவை நினைத்தவுடன் மறப்பதற்கான, மது இருக்கும் திசையையே நாடாமலிருப்பதற்கான, அதிசயமளிக்கும் மருந் துகள் எவையும் இதுவரை கண்டு பிடிக்கப்பட வில்லை. ஆயினும் மது அடிமை நிலையிலிருந்து வெளிவர விரும்பும் […]

நச்சு நீக்கல் சிகிச்சையானது பொதுவாக ஒரு பொது மருத்துவ விடுதியிலேயே நடைபெறும். இதன்போது, மதுவை விடுவதனால், உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய அறிகுறிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் மாத்திரைகளாகவோ, ஊசி மூலமோ உடலில் சேர்க்கப்படும். மதுவைத் தொடர்ந்து பாவிப்பதனாலும், சாப்பாடுகளில் கவனமில்லாமல் இருப் பதனாலும், ஏற்படக்கூடிய விற்றமின் குறைபாடு களை நீக்குவதற்காக சக்தி வாய்ந்த விற்றமின் மருந்துகள் கொடுக்கப்படும். ஏற்கனவே நித்திரையின்மையும், ஏனைய குழப்பமான மனநிலைமையும் தோன்றியிருந்தால் அவற்றைச் சீர்செய்வதற் குரிய மருந்துகள் பாவிக்கட்டும். இவற்றைவிட மதுவினால் ஏற்பட்டி ருககக் […]

குடிக்கு அடிமையான ஒருவர் அந்த அடிமை நிலையிலிருந்து மருத்துவ உதவியுடன் முழமை யாக வெளிவரலாம். ஒருவர் குடியை நிறுத்துவதென முடிவு செய் வாராயின் அவரிற்கு மருத்துவரின் ஆலோசனையும், மருத்துவச் சிகிச்சையும் தேவைப்படும். அத்துடன் அவர் சிறிதுகாலம் தனது வழமையான சூழலில் இருந்து வெளியே வந்து ஒரு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கி யிருக்க வேண்டி வரும். அவ்வாறானதொரு நிலையத்தில் அவருக்கு சரியான ஆலோசனைகளும், பரிவுடன் கூடிய சிகிச்சையும், தொடரச்சியான ஆதரவும், வழி காட்டல்களும் வழங்கப்படும். நன்றி – […]

கு டிப்பழக்கத்திற்கு அடிமையான பலர் அந்நிலையிலிருந்து விடுபட விரும்பினாலும், அதனை எவ்வாறு செய்வது என்று தெரியாமல் இருக்கின்றார்கள். அத்துடன் அவர்கள் குடியை நிறுத்துவது தொடர்பாகப் பல்வேறு விதமான நம்பிக்கைகளையும் பயங்களையும் கொண்டி ருக்கிறார்கள். குடியைத் திடீரென்று விட்டால், “கையைக் காலை இழுத்துவிடும்”, “வருத்தங்கள் வரும்” போன்ற நம்பிக்கைகள் ஆதாரமற்றவை. யாரா வது குடியைவிட முன்வந்தால், அவரோடு சேர் ந்து குடித்துக்கொண்டு இருந்தவர்கள் இவ்வாறான கதைகளைச் சொல்லி அவரைத் தொடர்ந்தும் குடிக்க வைப்பார்கள். மதுப்பழக்கத்திற்கு அடிமை யான ஒருவர் […]

எமது சமுதாயத்தில் மது பாவனை யின் அளவு வருடாவருடம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. மது பாவிப்பவர்களில் கணிசமானோர் மதுவிற்கு அடிமையாகி விடுகிறார்கள். மது பாவனையாளர்கள் முதலில் பல் வேறு காரணங்களைச் சாக்காகச் சொல்லிக் கொண்டு குடிக்கத் தொடங்குவார்கள். பின்பு அவர்கள் மெல்ல மெல்ல மதுவிற்கு அடிமை யாகிவிடுகிறார்கள். ஆரம்பத்தில் சந்தோஷமானதாக, மிகவும் சாதாரணமான விடயமாகத் தோன்றும் குடிப்பழக்கமானது, பின்பு ஒரு மாறா நோயாகிக் கஷ்டங்களைக் கொடுக்கின்றது. இவ்வாறான ஒரு நோய் நிலையில் ஒருவருடைய உடலும் மனமும் மது […]

குடிப்பவர்கள் எல்லாம் நித்திய குடிகாரர் ஆவதில்லை. அதாவது மதுவைத் தொட்டவர்கள் எல்லாம் மதுவுக்கு அடிமையான வாழ்வை அடைவதில்லை. ஆயினும் குடிக்கத் தொடங்கும் பலர் நாளடைவில் மதுவுக்கு அடிமையாகி, அதிலே தங்கியிருக்கும் ஒரு நிலைக்கு ஆளாகின்றனர். குறிப்பாக மிக இளவயதுகளில் குடிக்கத் தொடங்குபவர்களிற் பலர் விரைவாக அடிமை நிலைக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். உண்மையில் மது அடிமைநிலை என்பது ஒரு நோய் போன்றது. ஒருவருடைய விருப்பத்திற்கு மாறாகவே இந்த நோய் அவருக்கு ஏற்டுகின்றது. இதற்கு ஆரம்ப காலத்தில் விரும்பியோ அல்லது […]

ஒருவர் படிப்படியாக மதுவுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் பொழுது அவர் தனது வாழ்க் கையில் பல்வேறு பருவங்களைக் கடந்து செல்வதனைக் காணலாம். ஆரம்பப்பருவம் இந்தப் பருவத்திலே ஒருவர் போதையில் உள்ள நாட்டம் காரணமாக, தனக்கு விரும்பிய அளவு போதை ஏற்படுகின்ற வரையில் குடிப்பார்கள். காலஞ் செல்லச்செல்ல, ஒரேயளவின தான போதை ஏற்படுவதற்கு முன்பு குடித்ததைவிட அதிகளவில் குடிக்கவேண்டிய தேவை ஏற்படும். மிக அதிகளவில் குடிப்பவர்கள் சிலரில் மது உள்ளெடுத்த நிலையில் நடந்த சம்பவங்களை ஞாபகத்தில் கொண்டு வருவது கஷ்டமாக […]

மதுப் பழக்கத்தினை உடைய ஒருவர். அவருக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ தற்பொழுது மதுவிலே தங்கிநிற்கும் ஒரு நிலைக்குவந்திருக்கலாம். இந்த நிலையையே மதுவுக்கு அடிமையாகிப்போன ஒரு நிலை என அழைக்கின்றோம். மதுவுக்கு அடிமையாகிப் போனவர்கள் தமது வழமையான விருப்பு வெறுப்புகள் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டு மதுவுடன் தொடர்புடைய வெவ்வேறு இயல்புகளை வெளிக்காட்டுவார்கள். ஒருவரில் கடந்த ஒரு வருட காலத்தில் கீழ்வரும் இயல்புகளில் மூன்றோ அல்லது அதற்கு மேலோ இருக்கும் எனில் அவர் மதுவுக்கு அடிமையாயிருக்கிறார் என்ற முடிவுக்கு வரலாம். மதுவின் […]

மனித சமுதாயத்தைப் பெரிதும் பாதித்துப் பல லட்சக் கணக்கான மக்கள் இறப் பதற்குக் காரணமான கொடிய நோய்கள் இரண்டு. அவையாவன, எயிட்ஸ் மற்றும் புற்றுநோயாகும். மனித சமுதாயத்துக்குச் சவாலாக இருக் கும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நிகழ்கின்றன. இந்த ஆராய்ச்சிகளின் பயனாகப் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அதிநவீன பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள புதியமுறைகள் முன்னேற்றங்களால் […]

மாரடைப்பு என்றால் என்ன? எமது இதயம் சக்தி வாய்ந்த பம்பியாகச் செயற்பட்டு உடல் முழுவதற்கும் குருதியை வழங்குகின்றது. இதயத் தசைக்கு குருதி வழங்கும் முடியுரு நாடிகள் (coronary arteries) ஒட்சியேற்றப்பட்ட குருதியைத் தேவையான அளவு வழங்குவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாகப் பேணுகின்றன. இரத்தக் கட்டி அடைத்தல், கொலஸ்ரோல் படிவு, முடியுரு நாடியின் சுவரில் ஏற்படும் சுருக்கம் என்பவற்றால் முடியுரு நாடியில் இரத்தோட்டம் தடைப்படுவதால் முடியுரு நாடியால் குருதி வழங்கப்படும் இதயத்தின் தசைப்பகுதியில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதனால் […]