You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

ஒருவர் குடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பெரும்பாலும் அவரைச் சுற்றி நிறைய நண்பர்கள் இருந்திருப்பார்கள். ஆனாலும் துர திஷ்டவசமாக அவர்களில் பெரும்பான்மை யோர் குடிப்பவர்களாகவே இருந்திருப்பார்கள். ஆனால் அவர் குடியை விட்டு விலகி அமைத்துக் கொண்ட புதிய வாழ்க்கை நிலையில் அந்தப் பழைய நண்பர்கள் கூட்டம் பயன்பட மாட்டார்கள். அவர்கள் இப்போதும் குடியைக் கைவிடாத ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பதனால் அவர்கள் குடியை விட்டு வாழ விரும்பும் தமது நண்பருக்கு உதவ மாட்டார்கள். மேலும், அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாவும் […]

மது பாவிக்கின்ற பலர் குடிப்பதற்கு தங்களது வேலையுடன் தொடர்பான காரணங்களையும் சாட்டாகக் கூறுவதுண்டு. அவர்கள் கடுமையான உடல் வேலை, அலுப்புக் களைப்பு, மன அழுத்தம், ரிலாக்ஸ்” பண்ண வேண்டும் என்ற நினைப்பு வேலை செய்யுமிடத்தில் நடைபெறுகின்ற விருந்துபசாரம் போன்றனவற்றைத் தாங்கள் குடிப்பதனை நியாயப்படுத்தும் காரணங்களாகக் கூறுவதுண்டு. மது உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள், வியாபாரம் சார்ந்து வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தும் தொழில்களில் ஈடுபடுபவர்கள், நகர்ப்புறக் கூலித் தொழிலாளிகள் போனற சில குறிப்பிட்ட துறைகளில் வேலை செய்பவர்கள் இயல்பாகவே மிக […]

ஒருவருடைய வாழ்க்கையில், அவரது குடும்பம் மிகவும் முக்கியமானதொரு பங்கை வகிக்கின்றது. மது அடிமை நிலையில் இருந்து விடுபட்டதன் பின்பு ஆரம்பிக்கும் புதிய வாழ்க்கையிலும் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. மது பாவனையினால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் ஒருவரின் மது அடிமை நிலையானது அவரது குடும்பம் என்ற அமைப்பினுடைய அத்திபாரத்தையே ஆட்டம் காண வைக்கும். தந்தை ஒருவரின் மதுபாவனையால் பிள்ளைகளிடத்தே அன்பு, பாசம், மகிழ்ச்சி,சந்தோஷம், எதிர்கால நம்பிக்கை என்பன இல்லாமல் போய்விடும். அத்துடன் பெற்றோர் பிள்ளைகளிடம் […]

மது அடிமையிலிருந்து விடுபட்டு வெளி வருவது என்பது சவாலான ஒரு காரியம் என்பதனைப் புரிந்து கொள்ளல் வேண்டும். மதுவிலிருந்து விடுபட்டாயிற்று என்று இருப்போரிலும் சிலவேளைகளில் மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம். இவ்வாறு குடிக்கும் எண்ணம், ஆசை வரும் போது எல்லாம் அவர் தான் முன்பு குடிக்கு அடிமையாகவிருந்தபோது இருந்த நிலைமையை எண்ணிப் பார்க்க வேணன் டும். அப்பொழுது ஏற்பட்ட அவமானங்கள், கஸ்டங்கள், துயரங்கள், மரியாதை இழப்புகள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்ப்பது நல்லது. சில வேளைகளில் […]

பொதுவாக ஒவ்வொரு மனிதருடைய பிரச்சினைகளும் தனித்துவமானவையாகவே இருக்கும். அதுபோல் குடிப்பழக்கத்தை விட்டிருக்கும் அல்லது அதிலிருந்து முற்றாக விடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருடைய சவால்க ளும் தனித்துவம் வாய்ந்தவையே. எனவே ஒவ்வொருவருடைய தனித்துவங்களையும், அவர்களது விருப்பு வெறுப்புக்களையும் பொறுத்தே மதுவை நோக்கிக் கவர்ந்திழுக்கும் சவால்களை எப்படிச் சமாளிக்கலாம் எனத் தீர் மானிக்கலாம். இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, பொருத்த மான வழிமுறைகளை அடையாளங் கண்டு, அவற்றை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதற்கு மது அடிமையுடன் வேலை செய்யும் உளவளத் துணையாளர்கள் உதவி செய்வார்கள். ஆயினும் பின்வரும் […]

மதுவுக்கு அடிமையான ஒருவர் அதிலிருந்து விடுபட்டு மதுவை நாடாது வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில், எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டன என நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராத விதமாக அவர் மறு படியும் குடிக்கத் தொடங்குவது நடக்கக்கூடிய ஒரு விடயமே. ஆனால் இது திடீரென்று ஏற்படும் மாற்றம் அல்ல. ஒருவரில் மெல்ல மெல்ல ஏற்படும் சலனங்கள் பின்னர் அவரது எண்ணங்கள், சிந்தனைகள், நடத்தைகள் என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மாற்றங்கள் மூலம் உண்டாகும் தூண்டல்களே குடியைவிட்டு மீண்டவர்களை மறுபடி […]

மதுவில்லா வேலை. மது அடிமை நிலையிலிருந்து விடுபட்ட ஒருவர் மீண்டும் வேலை செய்யத் தொடங்கும் பொழுது அவர் பல விடயங்களளில் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக அவர் வேலை செய்யும் இடங்களில் குடிக்கின்ற நண்பர்கள் அதிகமாக இருந்தால் அவர் அவ்வாறான வேலை செய்யும் இடங்களைத் தவிர்த்துக் கொண்டு தனது வேலைக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வது மிகவும் அவசியமானது. அதுபோல் அவர் பார்க்கின்ற வேலை காரணமா, பழக்கதோஷம் காரணமாக, அவர் வேலையின் பொழுது மீண்டும் குடிக்கக்கூடிய சாத்தியங்கள் […]

மது அடிமை நிலையிலிருந்து விடுபட்டதன் பின்பு திரும்பவும் மதுவை நாடாது, மதுவில்லாத ஒரு வாழ்க்கையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வது என்பது மிகவும் சாலான ஒன்றாகும் அதற்கு உதவக்கூடிய சில விடயங்களை இனிப் பார்க்கலாம். மதுவை கைவிட்டதன் பின்பு, உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல் மிகவும் முக்கியமானதாகும். நல்ல இயற்கையான , சத்துள்ள உணவுகளைச் சரியான அளவுகளில் ஒழுங்கான நேர இடைவெளிகளில் உள்ளெடுக்க வேண்டும். அதுபோல் உடல் வருத்தங்கள் ஏதாவது இருப்பதாக அறியப்பட்டால் அவற்றிற்கு தாமதியாது சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது […]

மதுவுக்கு அடிமையானவர்கள், மதுவின் நச்சுத்தன்மை நீங்கி, தொடர்ந்தும் மதுவை உள்ளெடுக்காத ஒருநிலையில் அவர்கள் பலவிதமான உடல் முறைப்பாடுகளையும், உளவியல் தாக்கங்களையும் வெளிக்காட்டலாம். உண்மையில் இவ்வாறான முறைப்பாடுகளிற் பல அவர்கள் மதுவினைப் பாவித்துக் கொண்டிருக்கும் போதே ஏற்பட்டிருக்கும். ஆயினும் மதுவானது ஒருவரை மயக்கி அவரது புலன்களைத் திரிபுபடுத்தி நோவையும் வலியையும் தெரியமாற் செய்வதனால் மதுவின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒருவர் அவ்வேளைகளில் தனது மனக்கவலைகள், பிரச்சினைகள் பற்றி உணராது, சந்தோஷமாக இருந்தது போன்ற உணர்வைப் பெற்றிருப்பார். ஆனால் மதுவிலிருந்து வெளிவரும் […]

இந்த சிகிச்சையில், மது அடிமை நிலையில் உள்ளவர், நச்சகற்றல் சிகிச்சையின் பின்பு, தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு “டைசல்பி(F)ரம்” குளிசைகளைப் பாவிப்பர். பின்னர் ஆறா வது நாள் அவர் தனக்குப் பிடித்தமான மதுவை சிகிச்சை நிலையத்தில் இருந்தவாறே அருந்து மாறு அறிவுறுத்தப்படுவர். மது அருந்தக் கொடுக்கப்படும். அந்த வேளைகளில் ஏற்படக்கூடிய மருத்துவப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு ஒரு மருத்துவக்குழு தயாராக இருக்கும். இதன் போது ஏற்படுகின்ற தீவிரமான கஷ்டமான அனுபவங்களினால் மீண்டும் ஒருவர் அவ்வாறான முயற்சியை, குளிசைகளோடு மது அருந்துதலை […]