You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

நீரிழிவு வகை II நோயாளர்களுக்கு பல இனவகைகையச் சேர்ந்த புதுப்புது பல இனவகையைச் சேர்ந்த புதுப்புது மருந்து வகைகள் மிகச்சிறந்த நவீன ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுக் கொன்டே இருக்கின்றன. எனினும் இவை எல்லாவற்றுக்கும் மேல் சிகரம் வைத்தாற்போல் 60 – 70 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட டெற்போமின் மருந்து சிறந்ததாகவே தற்போதும் கருதப்படுகின்றது. இது பலதரபை்பட்ட விற்பனைப் பெயர்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த வகை மருந்துகளில் பக்கவிளைவுகள், பின் விளைவுகள் குறைவானதுடன் குறைந்த விலையில் பெறக்கூடியதாகவும் […]

குழந்தைகளுக்கான மேலதிக உணவுகளைக் (உப உணவுகளை) கொடுக்க ஆரம்பித்தல் தொடக்கம் அவர்கள் வளரும்போது தொடர்நது உணவு வேளைகளில் உணவூட்டல் வரை பலரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். அதற்கு பிரதான காரணம், தவறான முறைகளில் மேலதிக உணவூட்டலை (complementary feeding) மேற்கொள்ளல் ஆகும். ஒரு சாதாரண தாயிடம் 7 – 8 மாதக் குழந்தைக்கு என்ன சாப்பாடு கொடுக்கிறீர்கள் எனக் கேட்டால் வரும் பதில் பிஸ்கட்களும் அல்லது வர்த்தக ரீதியிலான பக்கட்டில் அடைத்த தானியமா கலவைகளும் தான். இந்த உணவுகள் […]

நீரிழிவானது இன்று ஒரு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன? நீரிழிவானது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவருகின்றது. இதன் தாக்கத்தை வளர்ச்சியடைந்த நாடுகளில் மாத்திரமல்லாது இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலும் காணக் கூடியதாகவுள்ளது. அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஏறக் குறைய 23 சதவீதமானோர் நீரி ழிவினால் அல்லது நீரிழிவுக்கு முந்திய நிலையினால் Pre Diabetes பாதிக்கப்பட்டுள்ளனர். தவறான உணவுப் பழக்க வழக் கங்கள் மற்றும் […]

சங்க இலக்கியங்கள் முதல் நவயுகப் படைப்புகள் வரை முதுமை என்னும் கருப்பொருளை விட்டுவைக்காத கவிஞர்களே இல்லை எனலாம். “தொந்திசரிய, வயிறே அசைய, நிரைதந்தம் உதிர ஒருகைதடிமேல் வா, இருமல் கிண்கிணென துஞ்சு கிழவன் இவனாரென மகளிர் நகையாடி” என முதுமையின் கோலத்தைச் சந்தத் தமிழில் எடுத்தியம்புகிறார் அருணகிரியார். இந்தப் பாடலில் திருப்புகழார் சொல்லாமற் சொல்லும் உண்மை என்னவெனில் முதுமையை நெருங்கும் போது ஒருவருக்குப் பல உடல் நலசீர்கேடுகள் தானாவே வந்து சேர்ந்து விடுகின்றன என்பதே ஆகும். அதை […]

இடம் – குழந்தை மருத்துவ விடுதி வைத்தியர் – இந்தப்பிரச்சினை கனநாளாய், கிட்டத்தட்ட ஒருவயதில் இருந்து இந்தப் பிள்ளைக்கு இருந்திருக்குது. வளர்ச்சிப் பதிவேட்டிலயும் குறிப்பிடடிருக்கினம். இப்பவரைக்கும் அஞ்சு வயது வரைக்கும் ஏன் அம்மா எந்த வைத்திய ஆலோசனையும் பெற்றுக் கொள்ளவில்லை…? தாய் – ஊர்கிளினிக்கில மிஸ்ஸி சொன்னவா தான்… கொஞ்ச நாள் போகத் தானாகச் சரிவரும் என்று பார்த்துக் கொண்டிருந்தன்… இவனின்ர கிரகமும் மாற வேணும் எண்டுதான்….? பெற்றோர்களின் செயற்பாடுகள், குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் சார்ந்தே […]

ஒருவருடைய வாழ்நாளில் அவரைப் பல ஆயிரம் கிலோமீற்றர்வரை காவிச் செல்வது அவரது பாதங்களாகும். இவ்வாறு பாதங்கள் எமது உடலைக் காவிச் செல்லும் போது காலில் பல்வேறு சேதங்கள் ( உரசல் காயங்கள், கிழிவுகள், வெடிப்புகள்) ஏற்படுகின்றன. ஒரு வாகனத்தினுடைய அதிர்வு உறுஞ்சிகள் போல் செயற்படுவதும் எமது பாதங்களே. இவ்வாறு மகத்தான சேவை புரிகின்ற எமது பாதங்களுக்கு ஒழுங்கான கவனிப்பும் பராமரிப்பும் இன்றியமையாதவை. ஒரு வாகனத்தைப் பல மைல்களுக்குச் செலுத்திய பின்னர் அதனைக் கழுவித் துடைத்து சுத்தம் செய்து […]

மனி்த வாழ்வில் உணர்வுகள் முக்கியமானவை. பல சமயங்களில் நாம் எமது உணர்வுகளில் வாழ்கின்றோம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணர்வு வெளிப்பாடு மிகவும் முக்கியமானது. இதற்கான பயன் தரவுள்ள படிமுறைகளைச் சிந்திப்போம். உணர்வுகளை இனம் காணுதல் இதுதான் முதற்படி. பல உணர்வுகள் எமக்குப் பழக்கமானவை. மகிழ்ச்சி ஆச்சரியம், பயம், பாலுணர்வு, வெறுப்பு, குற்றவுணர்வு, கோபம், பொறாமை திருப்தி என அவை பல வகைப்படும். இந்த உணர்வுகளுள், எமது தற்போதைய உணர்வு என்ன என்பதற்கான விடை எமக்குத் தெரிந்திருத்தல் நன்று. உணர்வுகளைப் […]

தற்காலத்தில் பலரையும் துன்புறுத்தி வருகின்ற நோய்களில் நீரிழிவுநோயும் ஒன்றாகிவிட்டது. நீரிழிவு ஒரு தொற்றாத நோய் ஆகும். உணவில் அதிகளவான வெல்லம் சேர்த்தல், மாப்பொருள் உணவுகளை உண்ணல், சதை யில் ஏற்படும் நோய்கள், பரம்பரை என்பன இந்த நோய்க்குக் காரணமாகின்றன. இன்சுலின் ஓமோன் குறைபாட்டினால் உருவாகுகின்ற இந்த நோயின் பராமரிப்புமுறையில் செயற்கையாக இன்சுலின் ஓமோனை ஊசிமூலம் ஏற்றுதல் ஒரு பிரதான பங்கு வகிக்கின்றது. இன்சுலின் இன்சுலின் பாவிக்கின்ற நோயாளர்களிடத்தில் இன்சுலினை பாதுகாக்கும் பேணும் முறை. (Storag), பாவனைமுறைகள், பக்கவிளைவுகள் […]

உறுதி மொழி “மதுவினால் பிரச்சினைகளும் கஷ்டங்களும் வருகின்றதென்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு மதுவில்லாத வாழ்வை நோக்கி அடியெடுத்து வைக்க உறுதி கொண்டு மது அடிமை என்கின்ற இந்தப் பிரச்சினையிலிருந்து பூரணமாக விடுபட்டு எமது சகமனிதர்கள் போல், மனைவி பிள்ளைகள் சுற்றத்தோடு சந்தோஷமாய் வாழவேண்டுமெனத்தீர்மானம் எடுக்கின்றோம். மதுவுக்கு அடிமையாக இருந்தவர்கள் இவ்வாறு ஒரு தீர்மானம் எடுக்க முடிந்தால், அது அவர்கள் மீண்டும் ஒருமுறை பிறப்பதற்கு ஒப்பானதாகும். அது மிகவும் சந்தோஷமான ஒரு விடயம். அந்தப் புதிய பிறப்பை அடைய […]

LDதுவை மனப்பூர்வமாகக் கைவிட்டு, ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி ஒருவர் காலடி எடுத்து வைத்தாலும், அவர் புதிதாக நடக்கத் தொடங்கும் ஒரு குழந்தையைப் போல, தடக்கி விழவும், வழுக்கி விழவும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இது மிகவும் சாதாரணமான, எதிர்பார்க்கக் கூடிய சில பின்னடைவுகளே. இதற்காகக் குடியை விட்டவரோ,அல்லது அவர்தம் குடும்பத்தவரோ மனக்கலக்கம் அடையத் தேவையில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில், அவர் அதனை ஒளிக்கத் தேவையில்லை. இவ்வாறு தனது உறுதியான தீர்மானத்தில் இருந்து வழுக்கி விழுந்தவர் இயலுமானளவு விரைவில் தனது […]