You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 2 ஆயிரத்து 500 பேர் வரை நாட்பட்ட சிறுநீரக நோயினால் (Chronic Renal Failure) பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்கிறார்கள். சிறுநீரகம் (Kidney) செயலிழந்தால் அதனை சாதராண மருந்துகள் மூலம் சீர் செய்ய முடியாது. அதற்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை அல்லது குருதி சுத்திகரிப்புச் சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒருதடவை குருதியை சுத்திகரிப்பதற்கு சுமார் 6 ஆயிரம் ரூபாவரை செலவாகும். வாராத்தில் குறைந்தது இரண்டு […]

பிள்ளையானது சிறுவர் பாடசாலைக்கு (pre school) சென்ற பின்பு தான்பாடசாலைக்கு (School) செல்வார்கள். அதேபோல இன்றுஉலகில் காணப்படும் 95% க்கு மேற்பட்டநீரிழிவு (வகைII) நோயாளிகள் நீரிழிவுக்கு முந்தைய நிலை pre Diabetic என்ற நோய் நிலையை அடைந்த பின்புதான் அவர்கள் நீரிழிவு நோயாளிகளாக மாறுகின்றனர். எனவே ஒருவரை நீரிழிவுக்கு முந்தைய நிலையில் (pre Diabetic stage) கண்டறிவதன் மூலம் அவர் ஒரு நீரிழிவு நோயாளியாக மாறுவதைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். இந்த நோய் வருவதை கண்டறிவதற்கும் இது […]

நான் 32 வயதுடைய பெண். 6 மாதகாலமாக மாதவிடாய் இரத்தப்போக்கு எனக்கு முன்பு உள்ள காலங்களை விட அதிகளவில் வெளியேறியது பெண் நோயியல் வைத்திய நிபுணரைச் சந்தித்து எனது பிரச்சனையைக் கூறினேன். என்னைப் பரிசோதித்த அவ் வைத்தியர் எனது வயிற்றில் கட்டி இருப்பதாகக் கூறி எனது வயிற்றை “ஸ்கான்” செய்து பார்த்த போது எனது கர்ப்பப்பையின் சுவர்த்தசையில் ஒரு கட்டி – Fibroid இருப்பதாக கூறினார். எனினும் அது “புற்றுநோய் வகை அல்லாத கட்டி. பயப்பட வேண்டிய […]

இருதயமும் தொழிற்பாடு இதயம் நான்கு அறைகளைக் கொண்ட உடலுக்கும் நுரையீரலுக்கும் குருதியை வழங்குகின்ற பம்பியாகும். மேலே உள்ள வலது மற்றும் இடது சோணை அறைகளைப் பிரிக்கும் சுவர் சோணை அறை பிரிசுவர் எனப்படும். கீழே உள்ள வலது மற்றும் இடது இதய வறைகளைப் பிரிக்கும் சுவர் இதயவறைப் பிரிசவர் எனப்படும். உடல் உறுப்புகளில் இருந்து ஒட்சிசன் (O2) குறைந்த குருதி மேற்பெருநாளம், கீழ் பெருநாளங்களினூடாக வலது சோணை அறையை அடைந்து முக்கூர் வால் பினூடாக வலது இதய […]

குழந்தைப் பருவம் ஆபத்தை அறியாத ஆழமறியாது காலை விட்டு மாட்டிக்கொள்ளும் பருவமாகும் பெற்றோரும் வீட்டிலுள்ளோரும் கவனம் இல்லாது இருந்தால் குழந்தைகள் விபத்துக்களில் சிக்கிக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது. ஒவ்வொருவருடமும் எம் நாட்டில் 600 சிறுவர்கள் இறக்கிறார்கள். அதே போல, கிட்டத்தட்ட 27,0000 சிறுவர்கள் வைத்திய சாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள். காயங்கள் காரணமாக அதிகமாகக் காப்பாற்றப்படும் சிறுவர்கள் அங்க வீனங்களுடன் வாழ்கின்றார்கள். விபத்துக்களைத் தவிர்த்துவளரும் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அவைபற்றிய அடிப்படை அறிவு அவசியமாகும். குழந்தைகள் நிலத்தில் கிடக்கும் சிறிய […]

1. உலக சுகாதார தினம் (World Health Day) கடந்த 7ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தத் தினம் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் விளக்கிக் கூறுங்கள்? உலக சுகாதார தாபனமானது (World Health Organization) 195Oஆம் ஆண்டிலெிருந்து ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதியை உலக சுகாதார தினமாகக் கொண்டாடிவருகின்றது. உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு இலக்கு களைக் கருத்தில் கொண்டு இந்தத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்குரிய சுகாதார […]

எமது குருதியில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களில் (செங்குழியங்களில்) ஹீமோகுளோபின் (Haemo globin) எனும் இரும்புப் புரதம் உள்ளது. எமது சுவாசத்தின் மூலம் கிடைக்கும் ஒட்சிசனை ஒட்சி ஈமோகுளோபினாக மாற்றி உடல் கலங்களுக்கு செங்குழியங்கள் என்ற படகின்மூலம் எடுத்துச்சென்று சக்தியை வழங்க இது உதவுகின்றது. இவ்வாறு உடலில் எல்லாப் பாகங்களுக்கும் சுற்றித்திரியும் போது குருதியில் இருக்கும் குளுக்கோசானது சிறிதளவு இந்தக் ஹீமோகுளோபினிலும் ஒட்டிக் கொள்ளும்தன்மையைக் கொண்டிருக்கிறது. அத்துடன் குருதியில் அதிகளவு குளுக்கோஸ் இருக்குமானால் அது அதிக வீதத்தில் இந்த […]

இலங்கையில் வாய்ப்புற்று நோயானது ஆண்களில் ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடத்தையும் (30%) பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களில் மூன்றாம் இடைத்தையும் (10%) பெற்றுக்கொள்கின்றது. இலங்கையில் வாய்ப்புற்று நோய்க்கு பிரதான காரணிகளாக பாக்கு மற்றும் புகையிலை பாவனையைக் குறிப்பிடலாம். வாய்ப்புற்றுநோயானது வாயின் எந்தப்பாகத்திலும் ஏற்படலாம். உதாரணமாக நாக்கு, நாக்கிற்கு கீழான பகுதி, உமிழ்நீர்ச் சுரப்பி, கன்னத்தின் உட்புறம், உதடு, முரசு, பற்களைச் சுற்றியுள்ள பகுதி, மெல்லண்ணம்,வல்லண்ணம் உள்நாக்கு, வாய்த்தொடை போன்ற பகுதிகளைக் குறிப்பிடலாம். வாய்ப்புற்று நோயின் அறிகுறிகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். வெள்ளை […]

1. அகஞ்சுரக்கும் தொகுதியியல் என்றால் என்ன என்பது பற்றிச் சிறிது விரிவாகக் கூறுங்கள்? எமது உடலில் பல வகையான ஹோர்மோன்களைச் சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. இவ்வாறான ஹோர் மோன்களைச் சுரக்கும் சுரப்பிகள் ஒட்டுமொத்தமாக அகஞ்சுரக்கும் தொகுதி யென அழைக்கப்படு கின்றது. இந்த அகஞ் சுரக்கும் தொகுதி சம்பந்தமான நோய்கள் தொடர்பாக ஆராயும் பிரிவானது அகஞ்சுரக்கும் தொகுதியியல் (Endocrinology) என அழைக்கப்படுகின்றது. இது பொது மருத்துவத்தின (G e n e r a l medicine) பிரதானமான […]

உலகில் நீரிழிவு நோய் நீரிழிவு நோய், சலரோகம், டயபிடிஸ் (Diabetes) என பலராலும் கூறப்படும் இந்நோயானது உலகளாவிய ரீதியில் மிக அதிகளவான மக்களைப் பாதித்துள்ளது. ஆரம்பத்தில் இது பணக்காரர்களின் நோய் என வர்ணிக்கப்பட்ட போதிலும் தற்போது ஏழை பணக்காரர் எனும் வித்தியாசம் பாராமல் எல்லோரையும் பாதிக்கும் நோயாக உருவெடுத்துள்ளது. 180 மில்லியனிலும் அதிகமான நடுத்தர வயதுடையோர் உலகளாவிய ரீதியில் பாதிக்ப்பட்டுள்ளனர். மொத்தமாக 194 மில்லியன் மக்களை நீரிழிவு நோய் பாதித்துள்ளது. 2030ம் ஆண்டளவில் மொத்த நீரிழிவு நோயாளர்களின் […]