You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

ஒரு பாடசாலையானது அறிவானதும் ஆரோக்கியமானதுமான மாணவ இலக்கை அடையவேண்டுமானால் ஆரோக்கியமான பாடசாலை உணவகத்தை ஆரம்பித்தல் வேண்டும். இதன் மூலமே மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தையும் பாடசாலை இலக்கையும் அடைய முடியும். இவ்வாறான ஆரோக்கிய மான பாடசாலை உணவகத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பல. போஷாக்கான சுத்தமான உணவு கிடைக்க வழியேற்பட ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துதல், ஆரோக்கியமான போஷாக்கு நிலையிலுள்ளமாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தொற்றா நோய்களின்தாக்கத்தைக்குறைத்தல், ஆரோக் கியமான உணவுப்பழக்கங்கள் தொடர் பான […]

மனிதவாழ்க்கை அமைதியாகவும், சந்தோஷம் நிறைந்ததாகவும் இருக்கவேண்டுமாயின் நோயற்ற வாழ்க்கை அவசியமாகும். வாழ்வதற்குப் பல்வேறு காரணிகள் முக்கியமானவையாகக் காணப்படினும், ஆரோக்கியமான நிறைவான உணவும், சுத்தமான நீரும் நோயின்றி நீண்டகாலம் உயிர்வாழ இன்றியமையாதவை எனலாம். எவ்வளவு தான் உணவுப்பழக்க வழக்கங்களில் அக்கறை கொண்டிருந்தாலும், நியம முறைப்படி நிறை உணவுக் கூறுகளைத் தேர்ந்தெடுத்தாலும் கிருமிநாசினித் தாக்கமற்ற காய்கறிகளைத் தற்காலத்தில் பெறமுடிவதில்லை. அதிகரித்துவரும் பீடைநாசினிப் பாவனையால் தாக்கம் விளைவிக்காத காய்கறி, இலைக்கறி வகைகளைப் பெறல் அரிதே எனலாம். அதிகரித்து வரும் பீடைத் […]

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களின் மிக முக்கியமான அறிகுறியாக காணப்படுவது காய்ச்சலாகும். ஒரு குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படும் போது அந்தக் குழந்தைக்கு பாரதூரமான தொற்றுக்கள் உள்ளனவா என்பதை எப்போதும் பரிசோதிக்க வேண்டும். எனவே பெற்றோர்கள் காய்ச்சல் பற்றிய அடிப்படை விடயங்களைத் தெரிந்திருப்பது அவசியமாகும் காய்ச்சல் ஏற்படுவதற்கு பல காரணங்களுண்டு அவற்றில் சில பின்வருமாறு – பல்வேறுபட்ட கிருமித் தொற்றுக்கள் உதாரணம் – வைரசு, பக்ரீறியா, ஒட்டுண்ணிகள் என்பன. எமது உடலிலே ஏற்படும் கிருமித் தொற்றுக்கள் அல்லாத, எமது […]

“சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான் சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்” என்பது இன்றைய காலத்தின் தேவை யான சூழல் சுகாதாரத்தைப் பற்றி இயல்பாககூறுகின்ற இனிமையான திரை இசைப் பாடல் ஆகும். நாளுக்கு இருமுறை நம்மை சுத்தமாக வைத்திருக்க முயல்கிறோம். வீட்டை அழகுபடுத்தி சுத்தமாக வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் நாம் வாழும் சூழலை மட்டும் சுத்தமாக வைத்திருக்க ஏனோ அக்கறை செலுத்துவதில்லை. அதனால் அசுத்தத்திலேயே வாழவேண்டியநிலை. இதற்கு காரணம் என்ன? நாம் எப்போது, […]

மனிதன் ஒவ்வொருவரும் தனித்துவமானவன். அவனின் ஆற்றலும் ஆழுமையும் கூட தனித்துவமானவைதான். ஒவ்வொரு மனிதனுள்ளேயும் அவனுக்கே உரித்தான பல திறமைகள் புதைந்திருக்கின்றன. ஒருவன் போன்று இன்னொருவன் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. எமது பழைய பதிவுகளை புரட்டிப்பார்ப்போமாக இருந்தால் பாரதியார் போன்று திருவள்ளுவர் இல்லை. அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி போன்று ஆறுமுகநாவலர் இல்லை. தியாகி பொன் சிவகுமாரன் போன்று தந்தை செல்வா இல்லை. நடிகர் விவேக் போன்று வடிவேலு இல்லை. இவர்கள் ஒவ்வொருவருமே ஆற்றலும் ஆர்ப்பணிப்பும் […]

உயரவளர்ச்சி குன்றிய பிள்ளைகள் அவ்வாறு இருப்பதற்கான காரணங்கள் யாவை? பிள்ளையொருவரின் உயரம் குறைவாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக நீண்டகாலமாகப் போதுமானளவு சத்தான உணவுகளை உள்ளெடுக்காதவிடத்து (Chronic Malnutrition) உயரம் மற்றும் உடல் நிறை என்பன சீரற்ற விதத்தில் அதிகரிக்காது விடுகின்றன. இதேபோல் எந்தவோரு நீண்டகால நோய் ( உதாரணம் சிறுநீரக பிரச்சினைகள், சமிபாட்டுத் தொகுதி நோய்கள், இருதய நோய்கள்) இருக்கும்போது சிறுவர்களின் உயரவளர்ச்சி பாதிப்படைய நேரிடுகின்றது. பெற்றோர் உயரம் குன்றி இருக்கும்போது பிள்ளைகளின் உயரமும் […]

குடிதண்ணிர்த் தேவைக்காக பொதுக்கிணறுகளில் இருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் செயன்முறை தொன்று தொட்டுநடைபெற்றுவரும் ஒன்றாகும். நிலத்தடி நீர் சவர்த் தன்மையுடைய பகுதிகளில் வாழுகின்ற மக்கள் இன் றும், தமது குடிதண்ணிர்த் தேவைக்காக பொதுக் கிணறுகளில், கோயில் கிணறுகளில் தங்கி இருக்கும் நிலை காணப்படுகின்றது. இங்கிருந்து பெறப்படும் நீர் சுத்தமான குடிதண்ணி என அவர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்தக் கிணற்றில் இருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும்போது, அவர்களின் தவறான செயன்முறைகளினால் அந்தக் கிணற்று நீர் மாசடைந்து கிருமித் தொற்றுக்குள்ளாவதை அவர்கள் உணர்வதில்லை. […]

இதய நோயுடன் தொடர்புடைய நெஞ்சு வலியானது உடனடியாக சிகிச்சையளிக் கப்பட வேண்டிய ஒன்றாகும். முடியுரு நாடிகளில் ஏற்படும் தடைகளால் இதயத்தசைக்குக் குருதிவழங்குதல் குறை வடைந்து, இதயத் தசைக்கான ஒட்சிசன் விநியோகம் குறைவடைவதால் மாரடைப்புக்கான நெஞ்சுவலி (Angine) ஏற்படுகின்றது. நைத்திரேற்றுக்கள், மாரடைப்பு நெஞ்சுவலியின் நிவாரணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. GTN எனப்படும் Glyceryl Tri Nitrate மாத்திரைகள் திடீ ரென ஏற்படும் நெஞ்சுவலியின்போதும், நெஞ்சுவலி வருமென ஊகிக்கும் சந்தர்ப்பங்களிலும் பாவிக்கக் கூடியனவாகும். இந்த GTN மாத்திரை மாரடைப்புக்கான நெஞ்சுவலிக்குக் […]

நீரிழிவு நோயாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளில் ஏற்படும் மாறாநிலைப் புண்கள் என்பது பொதுவானதாகும். இவை சிறு புண்கள் முதல் நீண்ட காலமாகக் குணமாக்க முடியாத பெரிய புண்கள் வரை வேறுபடலாம். இதனால் நடப்பதில் சிரமம், அன்றாட கருமங்களை ஆற்ற முடியாமை, நீண்ட காலமாக வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டி இருத்தல் என்பவற்றை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம். சில வேளைகளில் கால் விரல்களை அல்லது அவயவங்கைளை நிரந்தரமாக சத்திர சிகிச்சையின் மூலம் ( Amputation) அகற்ற வேண்டி […]

அழுத்தம் (stress) என்பது : நீங்கள் வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ அதனை அனுபவித்திருப்பீர்கள். (Stress) என்பது நீங்கள் ஒரு சவாலான மாற்றத்துக்கு வெளிக்காட்டப்படும் போது உடலில் இயற்கையாகவே நிகழும். உங்களை உயர்நிலையில் தயார்ப்படுத்துவதற்கான நிலைமையே ஆகும். அந்த மாற்றம் நெருக்கமான ஒருவரின் மரணச்செய்தியாகவோ அல்லது உங்களை ஓர் எதிரி தாக்கவரும் சூழலாகவோ இருக்கமுடியும். stress அவசியாமான ஒன்று. பின் அது ஏன் பாதிப்பானதாக மாறுகின்றது? ஏதாவதொரு( stress) அழுத்தத்தை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கையில் நீங்கள் stress […]