You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

உலக நீர்வெறுப்பு நோய் தினம் வருடா வருடம் செப்ரெம்பர் 28 ஆம் திகதியன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. நீர்வெறுப்பு நோயானது மிருகங்களிடமிருந்து மனிதனுக்குக் கடத்தப்படுகிறது. எவ்வாறெனில், ஒரு வைரஸான Rabies Virus ஆனது தங்கி வாழ்வதற்கான சிறந்த இடமாக விலங்குகளின் உடல் காணப்படுகின்றது. இவ்வகையான வைரஸினால் பீடிக்கப்பட்ட விலங்குகளிலிருந்து மனிதனுக்கு கடத்தப்படுவதன் மூலம் ஏற்படும் இறப்புக்களில் 95வீதத்துக்கு மேலான இறப்பானது நாய்க்கடியினால் ஏற்படுகிறது. இவ் வைரஸானது உடலின் மூடிய தோலினூடாக எம் உடலினுள் செல்லாது. இவ் வைரஸானது விலங்கு களிலிருந்து […]

உலகளாவிய உள சுகாதார தினமானது வருடந்தோறும் ஏதாவதொரு தொனிப் பொருளுடன் விழிப்புணர்வு நாளாகப் பிரகடனப்படுத்தப் படுகின்றது. உள சுகாதாரப் பிரச்சினையால் ஒருமனிதனது உரிமை மற்றும் அவன் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உளசுகாதாரப்பிரச்சினைகள் பற்றிய விழிப் புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்துவதும், உள சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உதவி செய்தலும் அவசியமானதாகும். அந்த வகையில் இந்த வருடத்துக்குரிய தொனிப்பொருளாக அமைவது யாதெனில் “உளவியல் ரீதியான முதலுதவியைச் செய்தல்” என்பதாகும். ஏதேனும் ஓர் உளநெருக்கீட்டால் […]

ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளை நோக்கும்போது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரேமாதிரியான பிரச்சினைகளே ஏற்படுகின்ற போதிலும் அவை பெண்களை வித்தியாசமான முறையில் பாதிக்கின்றன. சிலநோய்நிலமைகள் உதாரணமாக மூட்டுவாதம் அதிகரித்த உடற்பருமன் மற்றும் மனஅழுத்தம் போன்றன. பெண்களை அதிகளவில் பாதிக்கின்றபோதிலும் சில நோய்நிலமைகள் பெண்களுக்கேதனித்துவமானவை. பெண்கள் எப்பொழுதும் தங்களைச் சார்ந்தவர்களுடையநலனில் செலுத்தும் கவனத்தை சிறிதளவேனும் தமக்காகவும் செலுத்த வேண்டும். பெண்களுடைய நலன்பற்றிக்கருதும்போது அவர்களுடைய உடல்நலம் பற்றி மட்டும் சிந்திக்காது உள. மனநல ஆரோக்கியம் பற்றியும் சிந்தித்தல் அவசியமானதாகும். பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் […]

கேள்வி : எனது வயது20 ஆகும் எனக்கு சில மாதங்களாக தூக்கம்.சோம்பல் என்பவை இருப்பதோடு உடல் நிறையும் அதிகரித்து வருகின்றது. எனக்கு மாதவிடாயின் போதான குருதிப்போக்கும் அதிகமாக உள்ளது. எனது நண்பியொருவர் இது தைரொயிட சுரப்பிக் குறைபாட்டால் ஏற்படுவதாகக் கூறியிருந்தார். இது பற்றி ஆலோசனை வழங்கவும்? பதில் : நீங்கள் குறிப்பிடும் நோய் அறி குறிகளைப் பார்க்கும்போது உங்களுக்கு தைரொயிட் சுரப்பி குறைவாகச் சுரக்கும் நிலை (Hypothy roidism) இருப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமாக இருக்கின்றது. தைரொயிட் சுரப்பி […]

கேள்வி: எனது வயது56 ஆகும். நான் மெற்போமின் மருந்தை (500 mg) நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த கடந்த 5வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றேன். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குருதிப்பரிசோதனைகளின்படி எனது நீரிழிவு நோய்க்கட்டுப்பாடானது சிறந்த முறையில் உள்ளதாக மருத்துவர் கூறியிருந்தார். எனது உறவினர்கள் சிலர் மெற்போமின் பயன்படுத்தினால் சிறு நீரகம் பாதிக்கப்படுமெனக் கூறுகின்றனர். இதுபற்றி விளக்கிக் கூறவும்? பதில்: இது மிகவும் அவசியமானதொரு வினாவாகும். எமது மக்களிடையே நீரிழிவு நோய் தொடர்பான பல பிழையான எண்ணக்கருக்கள் உள்ளன. அவற்றில் இது […]

நீரிழிவுநோய் அற்றவர்களை விட நீரிழிவு உள்ளவர்களுக்கு இருதயநோய்கள். மாரடைப்பு, பாரிசவாதம் போன்ற பல நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதற்கு பலகாரணங்கள் கூறப்படுகின்றன உதாரணமாக, நீரிழிவுடன் உயர்குருதி அமுக்கம், அதிக உடற்பருமன், புகைத்தல் பழக்கம், சிறுநீரக செயல்இழப்பு. தன்னாட்சி நரம்புத்தொகுதிபாதிப்புக்கள். நீரிழிவுடன் குருதிக்குழாய்களில் LDL கொலஸ்ரோல்படிதல், LDL கொலஸ்ரோலில் கிளைகேசன் செயற்பாடுகள், முச்சேர்மான கொழுப்பு Triglyceride இன் அதிகரித்த நிலை நீரிழிவுடன் குருதிச் சிதட்டுகளின் குவிதல் அதிகரிப்பும், பெருநாடியில் சுருக்கம், நீரிழிவுடன் குறைந்த HDL அளவு இரண்டாவது […]

பல வயது முதிர்ந்த பெண்களின் வாழ்க்கையையும் அவர்களின்வா ழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும். ஒரு வெளியில் சொல்லமுடியாத அல்லது வெளியில்சொல்லவிரும்பாத ஒருபிரச்சினையாக கர்ப்பப்பை இறக்கம் உள்ளது. பொதுவாக பல குழந்தைகளை பிரசவித்த தாய்மாருக்கு இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்தில் ஆயுதம் பாவித்து பிரசவம் ஏற்பட்டிருப்பினும் ஏற்படலாம். மேலும் பெண்களின் வயது கூடும் போதும் இவ் வகை குடல் இறக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். கருப்பை இறக்கம் தனியாகவும் வரலாம். பல வேளைகளில் சிறுநீர்ப்பை மற்றும்பெருங்குடல் ஆகியனவும் சேர்ந்து கர்ப்பப்பையுடன் […]

நீரிழிவு வகை (II) நோயானது சில பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப மருந்து வகைகளை பரிந்துரை செய்வது மருத்துவர்களின் பொறுப்பாகும். எனினும் நோயாளிகளுக்கும் இந்த மருந்துகளின் அறிவு இருப்பது நோயை தொடர்ச்சியாக கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். நீரிழிவு நோய்க்கு பலவகையான மருந்துகள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. கிளிகிலசயிட் மருந்து எமது உடலில் சதையில் உள்ள இன்சுலின் சுரக்கும் கலங்களைத் துண்டி இன்சுலின் சுரக்கும் தன்மையை அதிகரிக்கவல்லதாகும். இந்த மருந்து வகையானது நீரிழிவைக்கட்டுப்படுத்தும் மருந்து சல்பனையில் யூரியா வகுப்பைச் சார்ந்ததாகும். […]

எலும்பு தேய்வடையும் நோய் (Osteoporosis) சம்பந்தமாக சிறிது விளக்கமாகக் கூறுங் கள்? இது எமது உடலிலுள்ள எலும்பு களின் உள்ளகக் கட்டமைப்பில் (Structural integrity) ஏற்ப்படும் பிரச்சினைகளால் என்பிழையத்தின் அளவு குறைவடைந்து ஏற்படுகின்ற ஒரு நோயாகும். இந்த நோயுள்ள வர்களுக்கு எலும்புஉடைந்துபோகும் தன்மை (Fracture) ஏற்படுவதற் கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகும். இவ்வாறான நோயாளருக்கு. எலும்பில் உடைவு வெடிப்பானது இடுப்பெலும்பு முள்ளந்தண்டெலும்பு அல்லது மணிக்கட்டு எலும்பு போன்றவற்றிலே பிரதானமாக ஏற்படுகின்றது. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? சாதாரணமாக மாதவிடாய் […]

வாழ்வை இலகுவாக்க அறிமுகமாகிய பிளாஸ்ரிக் பொலித்தீன் பாவனையானது இன்று மனிதவாழ்வின் இருப்பையேகேள் வியாக்கி நகரின் அழகையும் சுற்றுச் சூழல் சுகாதாரத் தையும் பாதிக்கும் பொருளாக மாறியுள்ளது. இலகுவில் உக்கும் தன்மையற்ற அதன் இயல்பு காரணமாக படிப் படியாக சூழலில் சேர்ந்து சூழலின் இயல்பைக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது இதன் நேரடி மற்றும் மறைமுகத்தாக்கங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயநிலை இன்றுமனிதகுலத்திற்கு எழுந்துள்ளது. குளப்படுக்கைகளிலும் வெள்ளநீர் ஓடும் வடிகால்களிலும் சேரும் இப்பிளாஸ்ரிக் பொருள்கள் மண்ணினுள் ஒரு படையாக உருப்பெறுவதால் வெள்ளநீர் புவியீர்ப் […]