You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

இன்று நீரிழிவு நோயானது உலகை ஆட்டிப்படைக்கும் சவால்மிக்க நோயாக மாறிவருகின்றது. நீரிழிவிற்கான உலக கூட்டமைப்பானது தற்போது உலகில் 415 மில்லியன் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தத் தொகையானது 2040 ஆம் ஆண்டளவில் 640 மில்லியனாக இருக்கும் என்றும் கணிப்பிட்டுள்ளது. இதில் தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் 78.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என்றும் இந்தத் தொகை 2040 இல் 140.2 மில்லியனாக இருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. ஆக, இந்த நோயின் தாக்கம் என்பது எவ்வளவு பாரதூரமான விளைவுகளையும் […]

பன்னாட்டு ரீதியில் நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் பல்கிப் பெருகி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இலங்கை போன்ற வளர்முக நாடு களிலும் சிறிது சிறிதாக இவற்றின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது. மிக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி கொழும்புநகரப் பகுதியில் ஏறக்குறைய23 சதவீதத்தினர் நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலையால் (prediabetes) பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இனங்களை ஒப்பிடுகையில் இலங்கைத் தமிழரிடையே நீரிழிவு ஏற்படும் சதவீதம் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. எமது மக்களிடையே சீனி மற்றும் மாச்சத்துப் பாவனையானது அதிகமாக இருப்பது […]

நீரிழிவு ஓர் அறிமுகம் நீரிழிவு நோயானது‚ சதையினால் சுரக்கப்படும் இன்சுலின் ஓமோன் சுரப்பு பெருமளவில் குறைவடையும் போது அல்லது அதன் தொழிற்பாட்டில் பாதிப்பு ஏற்படும் போது‚ குருதியில் குளுக்கோஸ் எல்லை மீறி அதிகரிப்பதால்ஏ ற்படுகிறது. அதிகரிக்கும் குருதிக் குளுக்கோஸானது உடலின் பல அங்கங்களில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. முக்கியமாக கண்‚ நரம்புத் தொகுதி இதயம் மற்றும் சிறுநீரகத்தை இது வெகுவாக பாதிக்கின்றது. கடந்த இரு தசாப்தங்களாக உலகளாவியரீதியில் நீரிழிவு நோயானது பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆண்‚பெண் இருபாலாரையும் நீரிழிவு […]

கர்ப்பம் தரித்தல் எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுவதாகும். இது அந்த தாயின் முதலாவது பிள்ளையாக இருக்கலாம் இல்லை நான்காவது பிள்ளையாக இருக்கலாம். எத்தனையாவது கர்ப்பம் என்றாலும் சில சந்தேகங்கள் எல்லாரிடமும் இருக்கும். இதே மாதிரி திருமணமானவுடன் புதுமணதம்பதிகள் விரும்பியோ விரும்பாமலோ எதிர்நோக்கும் ஒரு கேள்வி “இன்னும் வயிற்றில் ஒன்றும் உருவாக இல்லையா” என்பதாகும். கர்ப்பமாகிய முதல் மூன்று மாதங்களும் மிகவும் முக்கியமானது. இந்த ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம். பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் […]

உடலின் தசையி சுரப்பியினால் ( Pancreas B cell ) சுரக்கப்படும் ஹோர்மோன் இன்சுலின் (Insulin) ஆகும். இது உடலின் உயிர்க் கலன்களுக்குத் தேவையான குருதியிலுள்ள குளுக்கோசை உயிர்க்கலத்தினுள் உற்செலுத்த உதவுகின்றது. இன்சுலின் தொழிற்பாடு குறைவதனாலோ ( Insulin resistant) அல்லது தசையி சுரப்பியினால் குறைவதாக சுரப்பதனாலோ அல்லது சுரக்கப்படும் இன்சுலின் தரம் குறைவதனாலோ இது போன்ற காரணங்களால் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு கூடி இறுதியில் சிறுநீருடன் வெளிச் செல்வதே நீரிழிவு ஆகும். இதனை ( Diabetes […]

தோற்றா நோய்களின் தாக்கத்திலிருந்தும் அவற்றின் பாரதூரமான பின் விளைவுகளிலிருந்தும் மீளவேண்டுமாயின் உடற் பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமானதொன்றாகும். இதன் முக்கியத்துவம் இன்று எல்லாத்தரப்பினராலும் உணரப்பட்டுவருகிறது. நாம் உடற்பயிற்சிசெய்ய ஆர்வத்துடன் இருப்பினும் அதற்கான நேரத்தைக்கண்டுபிடிப்பதே சிரமமாக உள்ளது. இயந்திரத்தன்மையான இலத்திரனியல் வாழ்வியல் நடைமுறையில் உடற்பயிற்சிக்கான நேரம் காணாமலேயே போய்விட்டது. அவ்வாறு உடற்பயிற்சி செய்வதற்கான நேரம்கிடைக்காதோரும், நேரத்தைக்கண்டுபிடிக்க முடியாதோரும் வழக்கப்படுத்திக் கொள்வதற்கான சில குறிப்புக்கள் இங்கே முன்னிலை பெறுகிறது. வாழ்வில் இயலுமாயின் இவற்றை நடைமுறைப்படுத்த முயற்சித்துப்பார்க்கலாமே. வேலைத்தளங்களில் மாடிகளில் ஏறுவதற்கு மின் […]

உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் பெண்களைத் தாக்கும் புற்று நோய்களில் முக்கியமானவையாக மார்பகப்புற்றுநோய், கருப்பைக் கழுத்துப் புற்று நோய் என்பன காணப்படுகின்றது. இலஙகையில் புற்றுநோயின் தாக்கத்தால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் புள்ளிவிபரங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. மேலும் இலங்கையில் ஒட்டுமொத்த புற்றுநோய்களின் தாக்கத்தில் கருப்பைக்கழுத்துப் புற்றுநோய் என்பது மூன்றாவது இடத்திலும் பெண்களைத்தாக்கும் புற்றுநோய்களில் இந்தப்புற்றுநோய் இரண்டாவது இடத்திலும் இருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றது. இது சுகாதாரத் துறையினருக்குப் பெரிய சாவாலையும், சுமையையும் […]

உலக சுகாதார நிறுவனமானது நிறுவப்பட்ட தினத்தை நினைவு கூரும் முகமாக வருடந்தோறும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதியன்று பிரத்தியேகமான ஏதேனுமொரு சுகாதாரம் சார்பான விடயத்தை அழுத்தமாகக் கதைப்பதுண்டு. அந்தவகையில் 2017ஆம் ஆண்டுக்குரிய தொனிப்பொருளாக அமைவது யாதெனில் “மனச்சோர்வினைப் பற்றிக் கதைப்போம்” என்பதே மனச்சோர்வானது உலகத்தில் எந்த மூலைமுடுக்கெங்கிலும் வசிக்கின்ற எல்லா வயதுடையவர்களையும் வாழ்க்கையில் எல்லாவிதகட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது எமது வழக்கமானதும் இலகுவானதுமான நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளில் மட்டுமல்லாது எம்முடன் சேர்ந்து வாழ்க்கை வட்டத்தை இயக்கிச்செல்கின்ற குடும்பம் […]

ஓர் ஆணின் கல்வி தனி ஒருவனை உருவாக்கும். ஆனால் ஒரு பெண்ணின் கல்வி ஒருநாட்டையே வளமாக்கும்” இவ் ஆபிரிக்க நாட்டு பழமொழி சுட்டி நிற்பதைப்போல் பெண்களின் ஆரோக்கியமானது வீட்டினதும் நாட்டினதும் ஆரோக்கியமாகும். ஒரு பெண்ணே குடும்பத்தின் சகல நலன்களிலும் தலையாய பொறுப்பைத்தாங்குகின்றாள். வீட்டிலுள்ள தாய், தலைவி நோய்வாய்ப்பட்டால் வீடே படுத்துவிடும். அதாவது பெண்ணின் ஆரோக்கியமே மக்களினது ஆரோக்கியமாகும். ஒரு தாயின் பராமரிப்பிலேயே பிள்ளைகளின் எதிர்காலம் அழகான அமைதியான வீட்டுச்சூழல் என்பன தங்கியிருக்கின்றன. ஆகவே பெண்கள் தங்கள்ஆரோக்கியத்தை கண்களை […]

யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவும் மருத்துவ விடுதிகளும் இன்று நோயாளர்களால் நிரம்பி வழிகின்றன. இந்த நோயாளர்களில் பெரும்பாலானவர்கள் காய்ச்சல் காரணமாகத்தான் வைத்தியசாலையை நோக்கிப் படையெடுக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் பன்றிக்காய்ச்சல் (swine Flu) ஏற்படுத்தியுள்ள பீதியாகும். இது பற்றிய பல கேள்விகள் உங்கள் மனதில் தோன்றியிருக்கும். பன்றிக்காய்ச்சல் ஏன்றால் என்ன? பன்றிக்காய்ச்ல் என்பது (H1N1) எனப்படும் ஓர் இன்புளுவென்சா வைரசால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். இன்புளுவென்சா (Influenza) என்பது சுவாசத் தொகுதியைத் தாக்கும் ஒரு வைரஸ் […]