You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category
மருத்து உலகில் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அபிவிருத்தியானது மனிதனது ஆயுள் எதிர்பார்ப்பில் அதிகளவு நீட்சியினை ஏற்படுத்தியிருப்பினும் தற்காலத்தில் உயிர்க்கொல்லி நோய்களுடனான மனிதனது போராட்டங்கள் அதிகரித்து வரும் போக்கினையே காணக்கூடியதாகவுள்ளது. இத்தகைய உயிர்க்கொல்லி நோய்களில் புற்றுநோயானது முக்கியமான ஒன்றாக காணப்படுவதுடன், இந்நோய்த்தாக்கமானது உலகெங்கும் பல்வேறு வயதுப்பிரிவினரிடையே அதிகரித்துவரும் போக்கினை அவதானிக்கலாம். இலங்கை இதற்கு விதிவிலக்கானதல்ல. புற்றுநோயானது அண்மைக்கால வரலாற்றினைக்கொண்ட ஒரு நோயல்ல. இது கி.மு 2250 களில் காணப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் எகிப்திய பிரமிட்டுக்களிலிருந்து எடுக்கப்பட்ட மனித உடல்களில் மேற்கொள்ளப்பட்ட […]
எமது உணவில் அதிகளவு மரக்கறி வகைகளையும் பழங்களையும் சேர்ப்போமானால் தொற்றா நோய்களின் தாக்கத்தினையும் அவற்றுக்கான மருந்துப்பாவனையையும் பிற்போடலாம். ஆரம்ப காலத்தில் எம் மூதாதையர்கள் எவ்வாறு இவ்வறிவைப் பெற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை. தாவர உணவுடன் இணைந்ததாக தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருந்ததன் காரணமாகத்தான் எண்பதிலும் எழிலுடன் இருந்தார்கள். அவர்கள் தம் வாழ்வில் வாழ்க்கை முறையாகக் கடைப்பிடித்துக் காட்டியதைத்தான். நீண்ட காலத்தின் பின்பாக இன்றைய விஞ்ஞானம் ஆரோக்கியமாக வாழும் முறையாக வகுத்துச் செல்கின்றது. வயது வந்தவர்கள் ஒவ்வொரு நாளும் […]
நாம் எல்லோருமே நாய் என்றால் நன்றியுள்ள பிராணி, வீட்டின் காவல்காரன் என்றெல்லாம் சிறு வயதில் கற்றுக்கொண்டுள்ளோம். எமக்கும் நாய்க்கும் இடையேயான அறிமுக வார்த்தைகள் மேற்கண்டவாறே அமைந்தன. ஆனால் காலமாற்றத்தில்நாய் என்ற விலங்கின் மீதான எமது புரிதல்களும் மாற்றங்கண்டுள்ளது என்றே கூறலாம். செல்லப் பிராணி வீட்டின் செல்லப்பிராணிகளான நாய்கள் சரியான வளர்ப்பு முறையின்றி இருக்கின்றன.அவற்றின் எஜமானர்கள் கட்டாக் காலிகளாக வீதியோரங்களில் அவற்றை விட்டுவிடுகின்றனர். இதன் விளைவாக அவை பலருடைய வாழ்வின் அழிவுக்கு வித்திடும் எமனாகவும் மாறிவிட்டன. இன்று இடம்பெறுகின்ற […]
நீரிழிவு நோய் மற்றும் அதன் சிகிச்சை முறை தொடர்பாக எம்மவர்கள் மத்தியிலே பல தவறான அபிப்பிராயங்கள் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. தவறான கருத்து: நீரிழிவு நோய் தொடர்பான பரிசோதனைகளை 40 வயது கடந்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். உண்மை நிலவரம்: நீரிழிவு நோயானது இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இளவயதிலேயே ஏற்படும் அபாயம் அதிகமாகும். எனவே, நீரிழிவு ஏற்படுவதற்கான அபாய அறிகுறி உள்ளவர்கள் (உடல்பருமனாக இருத்தல், நெருங்கிய குடும்ப உறவினர்களுக்கு நீரிழிவு இருத்தல், நீரிழிவு நோய்க்கான […]
இன்று அதிகளவில் பாதிப்புக்களை ஏற் படுத்தும் தொற்றா நோய்களில் ஒன்றாக நீரிழிவுநோய் காணப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்த நோயின் தாக்கமானது அதிகமாகவுள்ளது. அதுவும் உடல் திணிவுச்சுட்டி (Body Mass Index – BMI) குறைநதவர்களில் கூட இது ஒரு பிரச்சினையாகவுள்ளது. உலகின் 60வீதமான நீரிழிவு நோயாளிகள் ஆசியக் கண்டத்திலேயே வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் தசைநார்களின் பருமன் (Muscle-MaSS) குறை வாகவும், வயிற்றுப்பகுதிகளில் அதிகளவுகொழுப்புப் படிவு ஏற்படுவதுமேயாகும். இவற்றுக்கு மேலாக இவர்களின் வாழ்க்கை முறையும் பெரிய […]
இன்றைய கால நகர்வில் நீரிழிவானது உலகை ஆட் டிப்படைக்கும் நோயாக மாறி வருகின்றது. நீரிழிவுக்கான பன்னாட்டுக்கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்வுத்தகவலின் அடிப்படையில் தற்போது உலகில் 415 மில்லியன் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் தத்தொகை 2040ஆம் ஆண்டளவில் 640 மில்லியனாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் 78.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என்றும், இந்தத் தொகை 2040 ஆம் ஆண்டளவில் 140.2 மில்லியனாக இருக்கும் என்றும் நீரிழிவுக்கான பன்னாட்டுக்கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே இந்த நோயின் […]
என்றுமில்லாதவாறு இன்றைய கால நகர்வில் நீரிழிவு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாகத் தெற்காசியாவில் இதன் தாக்கம் அதிகரித்துச் செல்கிறது. இலங்கையில் வளர்ந்தவர்களில் 10 இற்கு ஒன்று என்ற விகிதத்தில் நீரிழிவு காணப்படுகிறது. முன்பு வயது வந்தவர்களில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நோயானது, தற்போது பதின்மவயதினரையும் தாக்குகின்றது. இது உடலிலுள்ள பல முக்கிய அவயவங்களைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. அபாயகரமான நோயாகக் காணப்படுகின்ற போதும் அதிக கரிசனையோடு இருந்தால் நீழிரிவு ஏற்படாமல் தடுக்க முடியும். வகைப்பாடு நீரிழிவு இரண்டு வகைப்படும். […]
1. தைவாயிட் சுரப்பி தொடர்பான நோய்கள் பற்றிச் சிறிது கூறுங்கள்? தைரொயிட் சுரப்பியில் ஏற்படும் நோய்கள் பல்வேறு வகைப்படும். தைரொயிட் சுரப்பி குறைவாகச் சுரப்பதனால் ஏற்படு கின்ற நோய் (Hypothyroidism), தைவராயிட் சுரப்பி அதிகமாகச் சுரப்பதால் ஏற்படுகின்ற நோய் (Hyperthyroidism) ஆகும். மற்றும் தைரொயிட் சுரப்பியில் ஏற்படுகின்ற பல வகையான புற்று நோய்கள் இவற்றுக்கு உதாரணங்களாகும். 02. தைரொயிட் சுரப்பு குறைவாகச் சுரத்தல் முக்கியமான ஒரு நோயாக உள்ளது. இது பற்றிச் சிறிது விளக்கமாகக் கூறவும்? தைரொயிட் […]
உணர்வழியியல் என்ற மருத்துவ அலகின் ஆங்கிலப்பதம் Anaenthesia (British English) அல்லது Anaen thesiolosy (American English) ஆகும். உணர்வழியியல் என்பது உணர்வை இழத்தல் அல்லது அழித்தல் ஆகும். அதாவது சத்திர சிகிச்சையின்போதுவலி,வேதனைபோன்ற இதரஉணர்வு களைப் போக்கி தேவையேற்படின் நினைவைதற்காலிகமாக இழக்கச் செய்து நோயாளியைப் பராமரித்தலாகும். இந்த வகையான உணர்வழித்தல் பொது மக்களின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட நாளே உலக உணர்வழியியல் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. (World Anesthesia day 1846 William Morton) இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த உணர்வழியியல் […]
தாய்ப்பாலானது.ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனித்துவமானது. தாய்ப்பாலூட்டலானது இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் உரித்தான உரிமை மட்டுமன்றி தனித்துவமான தாய்மையை பூரணப்படுத்தும் செயலாகவும் அமைகிறது. வாருடா வருடமும் தாய்ப்பாலூட்டலில் முக்கியத்துவத்தை உணர்துவதற்க்காக ஓகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பாலூட்டல் வாரமாக கொண்டாடப்படுகின்றது. தாய்ப்பாலூட்டுவதன் நன்மைகள் தாய்ப்பாலூட்டுவதனால் சிசு தாய் இருவரும் பல நன்மைகள் அடைகின்றனர். சிசுவிற்கு ஏற்படும் நன்மைகள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல ஊட்டச்சத்துக்களும் உரிய அளவில் அடங்கியுள்ள தால்குழந்தையின் சீரானவளர்ச்சிக்கு உதவுகின்றது. வளர்ச்சியடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் […]