You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category
நிரிழிவானது நீடித்து நிலைக்கும் ஒரு நாள்பட்ட நோயாக இருப்பதனால், அந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் நோயை ஏற்றுக் கொண்டு அதற்கான முறைமைகளிலும் பல பரிகாரங்களைத் தேடுவதோடு, தமது வாழ்க்கையில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வாழ வேண்டியிருக்கின்றது. நீரிழிவு உடையவர்கள் தமது குருதியிலுள்ள குளுக்கோசின் அளவைக்கவனமாகப் பேணுவது மட்டுமல்லாமல், வழமையான தமது உணவுப் பழக்கத்திலும், உடல் தொடர்பான பழக்கவழக்கங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி இருக்கும். ஒருவகையில் இதனை வாழ்வின் ஒரு பண்பாட்டு மாற்றம் எனவும் அழைக்கலாம். வாழ்வை குலைக்கும் […]
சூரிய ஒளியின் நன்மைகளைச் சொல்லில் வடிக்க முடியாது. சூரிய ஒளி இன்றேல் மனித வாழ்வே இல்லை. பூமியின் அனைத்து சக்திகளும் இயங்குவதற்கு மூல காரணமே சூரிய ஒளிதான். இயற்கையான சூரிய ஒளி இலவசமாக எல்லா உயிரினத்துக்கும் கிடைக் கின்றது. எனினும் தற்போதைய நகரமயமான வாழ்க்கைமுறைகள், காடுகள் மற்றும் மரங் கள் அழிப்பு, அடுக்குமாடிகள், நெருக்கமான வாழ்க்கைமுறைகள், சுற்றுசூழலின்வெப்ப அதிகரிப்பு, புவி வெப்பமயமாதல், சூரிய ஒளியின் நேரடித் தாக்கம் போன்ற பலவழிகளில் மனித குலம்வெப்பம் சம்பந்தமான நோய்களையும் பாதிப்புக்களையும் […]
குழந்தைப் பருவம் ஆபத்தை அறியாத ஆழமறியாது காலை விட்டு மாட்டிக்கொள்ளும் பருவமாகும் பெற்றோரும் வீட்டிலுள்ளோரும் கவனம் இல்லாது இருந்தால் குழந்தைகள் விபத்துக்களில் சிக்கிக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது. குழந்தைகள் இறப்பு வீதம் ஒவ்வொருவருடமும் எம் நாட்டில் 600 சிறுவர்கள் இறக்கிறார்கள். அதே போல, கிட்டத்தட்ட 27,0000 சிறுவர்கள் வைத்திய சாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள். காயங்கள் காரணமாக அதிகமாகக் காப்பாற்றப்படும் சிறுவர்கள் அங்க வீனங்களுடன் வாழ்கின்றார்கள். விபத்துக்களைத் தவிர்த்துவளரும் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அவைபற்றிய அடிப்படை அறிவு அவசியமாகும். குழந்தைகள் […]
நீடிவு நோய் உலகையே அச்சுறுத்தும் வகையில் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து நிற்பது யாவரும் அறிந்ததே. உலகளாவிய அளவில் ஏறத் தாழ 400 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்கள். இன்னும் 15 ஆண்டு கள் செல்ல இத் தொகை 600 மில்லியன்களைத் தாண்டும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. இந்த நிலையில் நீரிழிவு நோயை வராமல் தடுக்கலாமா? இது நடைமுறைச் சாத்தியமா? அல்லது வெறும் கனவு தானா? இதனை எவ்வாறு நடைமுறைப் படுத்தலாம்? போன்ற வினாக்கள் எம்முன்னே எழுந்து […]
வைத்தியர் – பிள்ளைக்கு எப்படி சாப்பாடு கொடுக்கிறீர்கள்? தாய் – அதில் பிரச்சினை இல்லை .. காலையில் நூடில்ஸ், மத்தியானம் சோறும் பருப்பும், இரவில் இடியப்பம் சொதியுடன் கொடுக்கிறேன். வைத்தியர் – இடைநேரத்தில் தாய் – ஏதாவது கடைத்தீன் கொடுக்க வேணும்.. பிஸ்கட், சொக்கிலேட் சாப்பிடுவான். வைத்தியர்– சாப்பாட்டின் அளவு எப்படி? தாய் – ஒரளவு சாப்பிடுவான்… 3- 4 வாய் சாப்பிடுவான். உங்கள் பிள்ளையின் உணவூட்டல் பற்றிய உங்கள் எண்ணக்கருக்கள் வேறுபடலாம், மிகத் திருப்திகரமாகவோ / […]
அதிக சுவையின் காரணமாக ஆரோக்கியமற்ற துரித உணவுகள் இன்று பிரபல்யம் பெற்று வருகின்றன. உணவுகளின் பெயருக்குமாறாக இந்த உணவுகளின் சந்தைப் பெறுமதி அதிகமாக இருப்பதோடு இவற்றின் சுவையானது ஆரோக்கியத்துக்குக்கேடான அதிக சீனி, அதிக உப்பு எண்ணெய் போன்றவற்றின் சேர்க்கை காரணமாகவே ஏற்படுத் தப்படுகின்றது. அதிக அளவிலான சீனி மற்றும் கொழுப்புக்கள் உள் ளடக்கப்பட்டிருப்பதனால், இவை அதிக கலோரிகளைக் கொண்டுள்ளதுடன் குறைவான நுண்ணுரட்டச் சத்துக்களையே கொண்டுள்ளன. வெற்றுக்கலோரி உணவுகள் என்றும் இவற்றை அழைப்பு துண்டு. இவை போசணைக்கூறுகளான புரதம், […]
நேகமான நீரிழிவு நோயாளிகளை நோக்கின் அவர்கள் தமது பிற்காலத்தில் இருதயநோயாளிகளாக இருப்பதை நாம் அவதானித்துள்ளோம். நீரிழிவு நோயாளிகள் தமது குருதியில் குளுக்கோசின் அளவைக்கட்டுப்பாடாக வைத்திருப்பவர்களாயினும் கூட அவர்ளுக்கு இருதயநோய்களுக்கான சந்தர்ப்பம் சாதாரண ஒருவரிலும் பார்க்க இரண்டு தொடக்கம் நான்கு மடங்கு அதிகம் உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. விளைவுகள் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயானது பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியன. அவையாவன, குறைந்த வயதிலிலேயே இருதய நோய்கள் ஏற்படுதல் அதிகரித்த குருதி அழுத்தம் நரம்புகள் பாதிக்கப்படுதல் கண்கள் பாதிக்கப்படுதல் […]
ஆரோக்கியம் சார்ந்தபிரச்சினைகளை நோக்கும்போது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரேமாதிரியான பிரச்சினைகளே ஏற்படுகின்றபோதிலும் அவை பெண்களை வித்தியாசமான முறையில் பாதிக்கின்றன. சில நோய் நிலைமைகள் உதாரணமாக மூட்டுவாதம், அதிகரித்த உடற்பருமன் மற்றும் மனஅழுத்தம் போன்றன பெண்களை அதிகளவில் பாதிக்கின்ற போதிலும் சிலநோய்நிலைமைகள் பெண்களுக்கே தனித்துவமானவை. பெண்கள் எப்பொழுதும்தங்களைச் சார்ந்தவர்களுடைய நலனில் செலுத்தும் கவனத்தைச் சிறிதளவேனும் தமக்காகவும் செலுத்தவேண்டும். பெண்களுடைய நலன் பற்றிக்கருதும்போது அவர்களுடைய உடல்நலம்பற்றிமட்டும் சிந்திக்காது உளமனநல ஆரோக்கியம்பற்றியும் சிந்தித்தல் அவசியமானதாகும். பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் ஒவ்வொரு வாழ்க்கைப்படிநிலைகளிலும் அவர்கள் […]
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” இற்றைக்கு பலநூறு வருடங்களுக்கு முன்பே மூத்த தமிழ்க் கவி ஒளவையார் இவ்வாறு பாடியுள்ளமையானது மனித உயிரின் உயர்வு மற்றும் மகத்துவம் பற்றிப் பறைசாற்றுகிறது. இன்று எமது நாட்டில் “தற்கொலை” செய்து அருமருந்தன்ன வாழ்வைத் தானாக முடித்துக்கொள்ளும் தன்மை தொற்றுநோய் போன்று பரவிவருகிறது. குறிப்பாக முப்பதாண்டுகாலப் போர் காரணமாக இனத்தின் இருப்பு ஆட்டம் கண்டுள்ள எமது தமிழ்ப் பிரதேசமெங்கும் நாளாந்த நிகழ்வாகப் பரவிவரும் தற்கொலைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் […]
குழந்தைகளுக்கு ஏதாவது உடல் நிலை சரியில்லை என்றால் பெற்றோர் பயப்பட்டு வைத்தியரிடம் குழந்தையை உடனடியாக கொண்டு செல்வது இயல்பானதே. அதிலும் மிகப்பொது வான உடல்நிலைக் குறைபாடு காய்ச்சல் என் பதேயாகும். சில சமயங்களில் காய்ச்சல் தொடங்கியவுடனேயே பெற்றோர்குழந்தையை வைத்தியரிடம் கொண்டு செல்வதை அவதானிக்கலாம். அது நல்லது தான். ஏனெனில் காய்ச்சலுக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை கண்டறிய வேண்டும், ஆனால் எல் லாச்சந்தர்ப்பங்களிலும்பிள்ளைக்குகாய்ச்சல் நிவாரணி மருந்தைத் தவிர (பரசிற்றமோல்) வேறுமருந்துகள் தேவைப்படுவதில்லை. முதலில் காய்ச்சல் என்பதை மருத்துவ […]