You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category
இரண்டாம் உலகப்போர்ச் சூழலில் இறப்பர் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலேயே நெகிழித் திரவியக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளால் ஏற்படுத்தப்பட்டது. இது இன்று மனிதனின் அன்றாடத் தேவைகளில் இன்றியமையாத வளமாக மாறிவிட்டது. ஆனால் இதன் கட்டுப்பாடற்ற பாவனை சூழலை மிகவும் விரைவாகப் பாதித்துவிட்டது. அதில் இருந்து விடுபட ஒரு யுகம் தேவை. கோடிக் கணக்கான நெகிழிகள் பரந்துள்ளன. இந்தப் புவியில் நெகிழித்திரவியங்கள் (பிளாஸ்ரிக்) எமது பூகோளத்தில் அபரிமிதமான பாவனையால் உயிர்ச்சாகீயத்தின் சீர்த்திட நிலையினைக் காவு கொள்கின்றன. இன்று பல நூறு […]
நீரிழிவு என்பது குருதிக் குளுக்கோஸை உடலால் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும்போது குருதி மட்டத்தில் குளுக்கோஸ் சாதாரண அளவைவிட அதிகரித்த நிலையில் காணப்படும் நிலைமையாகும். உலக சுகாதார நிறுவனமானது நீரிழிவுக்கான வரையறையாக Festing Blood Sugar> 7 mmol/l (126 mg/DI) Post Prandict Blood Sugar (PPBS) (உணவு உட்கொண்ட பின் 2மணித் தியாலத்தில் குருதியில் வெல்லத்தின் அளவு) >11.1mmo1/1(200mg/dl) என குறிப்பிடுவதோடு நீரிழிவுநோய்க் கான அறிகுறிகளும் கருத்தில்கொள்ளப்படுகிறது. நீரிழிவைக் குணப்படுத்தமுடியாது. ஆனால் கட்டுப்பாட்டில்வைத்திருக்க முடியும் […]
எமது உடலிலுள்ள எலும்பு களின் உள்ளகக் கட்டமைப்பில் (Structural integrity) ஏற்ப்படும் பிரச்சினைகளால் என்பிழையத்தின் அளவு குறைவடைந்து ஏற்படுகின்ற ஒரு நோயாகும். இந்த நோயுள்ள வர்களுக்கு எலும்புஉடைந்துபோகும் தன்மை (Fracture) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகும். இவ்வாறான நோயாளருக்கு. எலும்பில் உடைவு வெடிப்பானது இடுப்பெலும்பு முள்ளந்தண்டெலும்பு அல்லது மணிக்கட்டு எலும்பு போன்றவற்றிலே பிரதானமாக ஏற்படுகின்றது. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? சாதாரணமாக மாதவிடாய் வருகின்ற பெண்ணொருவருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைவாகும். மாதவிடாய் […]
குருதி அமுக்கம் தொடர்பாக மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், நோய் நிலைமைகள் தொடர்பாகப் பல்வேறுபட்ட தகவல்கள் கேள்வி – பதில் வடிவில் இங்கு தரப்படுகின்றன. குருதி அமுக்கம் என்றால் என்ன? உங்கள் உடலிலி; குருதிக் குழாய்களில் குருதி சுற்றியோடும் போது ஏற்படும் அமுக்கமே குருதியமுக்கம் எனப்படும்.சாதாரணமாக இது எவ்வளவு இருக்கும்?சுருங்கள் அமுக்கம் – 120mmHgவிரிதல் அமுக்கம் – 80 mmHg இது இளம் பராயத்தவர்களுக்கு சற்று குறைவாகவும் முதியோருக்கு சற்று அதிகமாகவும் காணப்படும். உயர் குருதி அமுக்கம் என்றால் […]
குருதிச் சோகை என்றால் என்ன? அதற்கான காரணங்கள் எவை? அது குணமாக கூடிய நோயா? இவ்வாறான பல்வேறுபட்ட கேள்விகள் எம்முன்னர் பரந்து விரிந்து நிற்கின்றன. குருதிச்சோகை என்றால் குருதியில் காணப்படும் செங்குழியங்களில் அல்லது குருதி நிறப் பொருள் ஹீமோகுளோபினில் (Hb) ஏற்படும் குறைபாட்டு நிலையாகும். இந்த நோய் அறிகுறிகளாக, உடல் களைப்பு, சோர்வுலு அதிக வேலை செய்ய முடியாது இருத்தல், நெஞ்சுப் படபடப்பு, நெஞ்சுவலி, உடல் வெளிறுதல் ( கண் மடல் மற்றும் நாக்கு) என்பவற்றை குறிப்பிடலாம். […]
பல்வேறு தரப்புகளும் இப்பொழுது கதைக்கும் ஒரு விடயமாக குடும்ப வன்முறை விளங்குகிறது. எங்களிடையே குடும்ப வன்முறை அதிகரித்துவிட்டதா அல்லது இப்போதுதான் நாம் விழிப்படைந்து இருக்கிறோமா? இதன் ஆதிமூலம் எப்போதும் முட்டையா அல்லது கோழியா போல விடை தெரியாத கதை நிகழ்வு-1 65 வயது மதிக்கதக்க பாட்டியும்பேர்த்தியும் வைத்தியசாலைக்கு சேர்க்கபட்டார்கள். பாட்டியின் முகம் முழுக்கக் கண்டல் காயம். பேர்த்தியோ பலநாள் சாப்பிடாமல் இருந்தது போல் வாடிய சிறுபயிராக இருந்தாள். தாயில்லா பிள்ளையும் பாட்டியும் சிறுபிள்ளையின் தந்தையால் தினமும் துன்பத்துக்கு […]
31 சர்வதேசபுகைத்தலுக்கு மே எதிரானநாள். இது புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து சிந்திக்கும் நாள். மக்களைக் குறிப்பாக இளைஞர்களை சிந்திக்க வைக்கும் நாள். மக்களை விழிப்புறச் செய்யும் நாள். இளைஞர்கள் புதிதாக இப்பழக்கத்தை பழகிக் கொள்வதைத் தடுக்கும் நாள். புகைப் போரை அப்பழக்கத்தினின்றும் மீட்கும் செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிக்கச் செய்யும் நாள் புகைத்தலுக்கு எதிராக மக்களை சுயாதீனமாக எழுச்சியுறச் செய்து அவர்களையும் இதில் பங்களிக்கச் செய்யும் நாள். எனவே இந் நாளின் முக்கியத்துவம் உணர்ந்து அதனுள் பொதிந்துள்ள […]
நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படடும் பல்வேறு வகையான மருந்துகள் ஒவ்வொன்றும் குருதியில் உள்ள குளுக் கோசின் அளவைக் குறைப்பதற்கும் கட் டுப்படுத்துவதற்கும் வெவ்வேறு தன்மையில் எமது உடலில் செயற்படுகின்றன. உதாரணம் சில மருந்துகள் எமது உட லில் உள்ள கணையத்தில் பீட்டா (டீ) செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பினை அதிகமாக சுரக்கச் செய்து குருதியில் குளுக்கோசின் அளவை குறைக்க முயற் சிக்கின்றன. சில மருந்துகள் உடல் தசைகளில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு நிலையை சரி செய்வதன் மூலம் குருதியில் […]
தினமும் தவறாது நடைப்பயிற்சி செய்துவரின் உடல் எடை குறைந்திடும். இதய அடைப்புக்கள் இல்லாது போகும், தசைகள் தாமே வலுப்பெறும்,குறுதி அழுத்தம் சீராகும். சலரோகம் கட்டுப்பட்டு சாதாரண் குருதி வெல்ல நிலமை ஏற்படும். இவ்வாறாக பல நன்மைகள் எமக்கு நடைப்பயிற்சியினால் ஏற்படுகின்றன என்பது நாம் அறியயாததல்ல. உடல் இயங்கு நிலைகுறைவாகவுள்ள ஒருவரில் குருதிச் சுற்றோட்டம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக கிடைப்பதில்லை. இயங்கு நிலையில் தன் செயற்பாடுகளை உற்சாகமாக மேற்கொள்ளும் ஒருவரில் கால்களில் குருதித் தேக்கம் குறைந்து உடலின் […]
இலங்கையில் தொற்றா நோயானது பெரிய பொதுச்சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. தொற்றாநோயானது இறப்புகளுக்கான முக்கிய காரணியாக உள்ளது. பெரும் பாலானவர்கள் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களையும் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் தொற்றாநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நோய் அதிகரிப்பும் செலவீனங்களும் இந்த நோய்கள் துரிதமாக அதிகரித்து வருவதனால் சுகாதார வரவு-செலவுத் திட்டத்தின் பெருமளவு நிதியினை ஒதுக்க வேண்டியுள்ளது. தொற்றா நோய்களை ஆரம்பத்தில் கண்டறிதல் தொற்றாநோய்களுக்கான சிகிச்சை மற்றும் தொற்றா நோய்களின் சிக்கல் நிலமைகளை பராமரித்தல் போன்ற செலவினங்கள் அதிகமாக உள்ளன. […]