You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category
நீரிழிவு நோயாளர்களுக்கு காலிலும் பாதங்களிலும் ஏற்படும் காயங்கள், இலகுவில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகு கின்றன. சிலருக்கு இது மாறாப் புண் களை ஏற்படுத்துகின்றன. இன்னும் சிலருக்குசத்திர சிகிச்சை மூலம் அவயவ இழப்பு செய்யப்பட வேண்டிய பாரதூர மான நிலையையும் மற்றும் சிலருக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடிய பரிதாபநிலை யையும் ஏற்படுத்துகின்றன. நீரிழிவு நோயாளர்களுக்கு ஏன் காலில் புண்கள் ஏற்படுகின்றன? நீரிழிவு பாதிப்பினால் தசைகளில் ஏற்படும் வலிமை இழப்புக் காரணமாக, பாதங்களில் சாதாரணமாகக் காணப்படும் வளைவுத் தன்மைகள் சீரற்றுப் போகின்றன. […]
நீரிழிவு நோயானது,சதையினால் சுரக்கப்படும் இன்சுலின் ஓமோன் சுரப்பு பெருமளவில் குறைவடையும் போது அல்லது அதன் தொழிற்பாட்டில் பாதிப்பு ஏற்படம் போது குருதியில் குளுக்கோஸ் எல்லை மீறி அதிகரிப்பதால் ஏற்படுகின்றது. அதிகர்க்கும் குளுக்கோஸானது உடலின் பல அங்கங்களில் பல்வேறு பாதிப்பு ஏற்படுகின்றது.முக்கியமாக கண்,நரம்புத் தொகுதி இதயம் மற்றும் சிறுநீரகத்தை இது வெகுவாகப் பாதிக்கின்றது. கடந்த இரு தசாப்தங்களாக உலகலாவிய ரீதியில் நீரிழிவு நோயானது பெரமளவில் அதிகரித்துள்ளது. ஆண், பெண் இருபாலரையும் நீரிழிவு சரி சமனாகவே பாதிக்கின்றது. நீரிழிவு ஏற்படும் […]
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தியவசியமானது போசனையான உணவு. இயற்கையின் மூல வளங்களைப் பயன்படுத்தி அதனோடு இணைந்து செய்யும் தொழில் தான் விவசாயம். எமக்கு சிறந்த போசனையை தருவது இந்த விவசாய உற்ப்பத்தி பொருட்களே. எங்கள் வீட்டு தோட்டங்களாலும் சேதன விவசாய முறைகளாலும் நாம் போசணையான உணவப்பொருட்களை பெற்றுக் கொள்கின்றோம். இது தவிரவும் எமது நாட்டு சீதோவ்ண நிலையும் எமக்கு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. ஆகவே எமது சுற்றாடலில் இயல்பாகவே கிடைக்கும் கீரை வகைகளின் எண்ணிக்கையோ சொல்லில் அடங்காது. எமது உடல்நோய் […]
உடலில் ஊனத்தை ஏற்படுத்தி,இன்னொருவரில் சார்ந்து வாழும் நிலையை ஏற்படுத்தும் நோய்களில் தொழுநோயும் ஒன்றாகும். இது பரம்பரை நோயல்ல. இது ஒரு தொற்று நோயாகும். நோயாளி தும்மும் போதும் இருமும் போதும் சிந்தும் சிறுதுளிகளினால் ஒருவரிடமிருந்து மற்றையவருக்கு பரம்புகின்றது. இதன் நோயரும்பு காலம் 3-5 வருடங்கள் வரைநீண்டு காணப்படலாம். இது எல்லா வயதினரையும் ஆண், பெண் இரு பாலினரையும் தாக்கக் கூடியது. பெரும்பாலும் பொருளாதார வளம் குன்றிய குடும்பத்தினரே இலகுவில் பாதிப்புறுகின்றனர். தோல் மற்றும் நரம்புகளையே இந்த நோய் […]
நீங்கள் மருத்துவரைச் சந்திக்கும் பொழுது சில விடயங்களைத் தெரிந்து வைத்திருப்பீர்களாக இருந்தால் அது உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருப்பதுடன் அநாவசிய தாமதம், அலைச்சல், செலவு என்பவற்றைக் குறைத்துக் கொள்ளவும் உறுதுணையாக இருக்கும். உங்கள் மருத்துவம் சம்பந்தமான குறிப்புகள் துண்டுகள், புத்தகங்கள், சோதனை முடிவுகள் அனைத்தயும் ஒரு பைல் கவரில் அல்லது பை ஒன்றில் போட்டு பாதுகாப்பாக வைத்திருங்கள். வைத்தியரைச் சந்திக்கும் பொழுது அவை அனைத்தயும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அவை உங்களுக்குப் பொருத்தமான மருத்துவப் பராமரிப்பை தீர்மானிப்பதற்கு […]
பிறக்கும் போதே குழந்தைகளில் காணப்படும் உடல் கட்டமைப்பு அல்லது தொழிற்பாட்டுக் குறைபாடுகளை பிறவிக் குறைபாடுகள் என்பர். பிறக்கும் குழந்தைகளில் 33 பேரில் ஒருவர் பிறவிக் குறைபாடு உடையவராக பிறக்கின்றது இதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் 3.2 மில்லியன் குழந்தைகள் ஏதோவொரு அங்கவீன குறைபாடு உடையவர்களாக இவ்வுலகில் பிறக்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு வருடமும் பிறவிக்குறைபாட்டு நோய்களால், பிறந்து முதல் 28 நாட்களுள் ஏறத்தாழ 270, 000 பச்சிளங்குழந்தைகள் இறக்கின்றனர். யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருட இறுதி […]
கல்வியறிவு மருத்துவம் மற்றும் ஏனைய வசதிகள் அதிகரித்துக் காணப்படும் இன்றைய காலத்திலும் பல்வேறு சிக்கல்களின் காரணமாக புதிதாய் பிறந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை தகுந்த கவனிப்பின் மூலம் தவிர்க்கப்படக் கூடியவை. அதற்காகப் பெற்றோரும் உறவினர்களும் கவனிக்க வேண்டிய அம்சங்களாவன இயலுமானவரை தாயும் சேயும் சேர்ந்திருத்தல் வேண்டும்.தாய் குழந்தையை அரவணைப்பதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெறலாம். தாய்ப்பாலூட்டல் இலகுவாக்கப்படுகின்றது. தாய்க்கு பால் சுரப்பு அதிகரிப்பதுடன் குழந்தையும் பசியேடுக்கையில் தாய்ப்பாலை பருகமுடிகின்றது. தாய்க்கும் குழந்தைய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு […]
அநேகமான நீரிழிவு நோயாளிகளை நோக்கின் அவர்கள் தமது பிற்காலத்தில் இருதய நோயாளிகளாக இருப்பதை நாம் அவதானித்துள்ளோம். நீரிழிவு நோயாளிகள் தமது குருதியின் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாடாக வைத்திருப்பவர்களாயினும்கூட அவர்களுக்கு இருதய நோய்களுக்கான சந்தர்ப்பம் சாதாரண ஒருவரிலும் பார்க்க இரண்டு தொடக்கம் நான்கு மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது அவையாவன, குறைந்த வயதிலேயே இருதய நோய்கள் ஏற்படுதல். அதிகரித்த குருதி அழுத்தம் நரம்புகள் பாதிக்கப்படுதல். கண்கள் பாதிக்கப்படுதல். பாரிசவாதம் […]
உலக நீரிழிவு தினமானது (world Diabetes Day) ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி கொண்டாடப்பட்டுவருகின்றது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது வரலாறு காணாத விதத்தில் இன்று அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடிய தாக உள்ளது. இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலும் இதன் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. எமது நாட்டில் மிக அண்மையில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி கொழும்பு நகரில் ஏறக்குறைய 23 சதவீதமானோர் நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்திய நிலையால் (Pre dia betes) […]
டெங்கு காய்ச்சல் இன்று எம்மிடையே விரைவாக பரவிவருகின்ற காய்ச்சல் ஆகும். பல உயிர் இழப்புக்கழையும் இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுத்துகின்றது. டெங்கு காய்ச்சல் Dengue Virus எனப்படுகின்ற Flavivirus இனத்தை சேர்ந்த ஒரு வகையான வைரஸ் கிருமியால் ஏற்படுவதாகும். இந்த வைரஸில் பிரதானமாக நான்கு வகையான பிற பொருள்களைக்கொண்ட (Antigenic) வைரஸ் வகைகள் உள்ளன. இந்த நோய்ககுரிய வைரஸ், பிரதானமாக பகல் வேளைகளில் கடிக்கின்ற ( Adesacgypti என்ற ஒரு வகையான நுளம்பால் ஒரு நோயுற்ற மனிதனில் […]