You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category
‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ உடலில் உள்ள மூலப்பொருள்களில் எப்பொருள் மிகுந்தாலும் அல்லது எப்பொருள் குறைந்தாலும் உடலுக்கு ஊறு ஏற்படும் என்பதனை வள்ளுரவர் அழகாகக் கூறியுள்ளார். எனவே, உடலுக்குத் தேவையான சத்தான சரிவிகிதமான உணவுகளை எந்த அளவுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வேளாவேளைக்குச் சரியான இடைவெளியில் சாப்பிடுதல் முக்கியம். உங்களை உயிர்ப்புடையவராக வைத்திருப்பதற்கும், உங்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதற்கும், உங்களுக்கும் இவ்வுலகுக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்கும் உணவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பாரம்பரிய […]
பெண் கர்ப்பமானது முதற்கொண்டு தனது குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும் என்ற உணர்வும் முனைப்படையைத் தொடங்குகிறது. இதற்கேற்ப அந்தப் பெண் தனது உடலையும் தயார் செய்து கொள்கிறாள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதில் காணப்படும் உத்வேகமும் அவசரமும் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்ட வேண்டும் என்பதில் காணப்படுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம், அவற்றில் மிகவும் முக்கியமானது அனேகமான தாய்மார்கள் தமக்குப் பால் சுரப்பதில்லை. அல்லது அதன் சுரப்புக் குறைவாகக் காணப்படுகிறது எனக் காரணம் கூறுகின்றார்கள். இது […]
உயர்குருதியமுக்கம் என்றால் என்ன? உயர் குருதியமுக்கம் ஏற்படும் போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்? ஆரம்பத்தில் அறிகுறி எதுவும் தென்படாது. ஆனால் நீண்ட காலமாகக் கவனிக்கப்படாவிடின் பின்வரும் அறிகுறிகள் ஏற்படும், உயர் குருதியமுக்கமானது ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உயர் குருதியமுக்கத்தால் எப்படிப்பட்ட பாதகமான விளைவுகள் ஏற்படும்? உயர் குருதியமுக்கத்தை எவ்வாறு தடுக்கலாம்? ‘இரத்த உறவுகளிடையே உயர் குருதியமுக்க நோய் உள்ளவர்கள் தமது குருதியமுக்கத்தை இரு வருடங்களுக்கு ஒரு முறை சோதித்துக் கொள்ளுதல் சிறந்தது’ இ.கோகுல்நாத்,யாழ்.மருத்துவ பீட 30 ஆம் அணி […]
தற்போதைய கால கட்டத்திலே மனித உரிமைகள் பற்றியும், மனித உரிமை மீறல்கள் பற்றியும் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. மேலைத்தேச நாடுகளில் விலங்கு உரிமை பற்றிக் கூட அதிக கரிசனை காட்டப்பட்டு வருகின்றது. ஆனால், எமது நாட்டிலே பொதுமக்களுக்கு மருத்துவ துறையிலே தமக்கு இருக்கின்ற அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவு போதாமல் இருப்பது ஒரு வேதனையான விடயமாகும். பொதுமக்களிடமும், மருத்துவத்துறை சார்ந்தவர்களிடமும் இது சம்பந்தமான அறிவு மேம்படும் பொழுது அந்தப் பிரதேசத்தின் சுகாதார நிலை பல வழிகளிலும் மேம்படும். […]
நீரிழிவு நோயின் போது குருதியில் சீனியின் அளவு அதிகரித்துக் காணப்படும். இது இன்சுலின் என்னும் ஓமோன் பற்றாக்குறையினாலோ அல்லது இன்சுலின் ஓமோனை உடற்கலங்கள் எதிர்ப்பதனாலோ உண்டாகும். இந் நோயைப் பின்வரும் முறைகளினால் கட்டுப்படுத்தலாம். இம் மூன்று முறையினாலும் நீரிழிவு நோயைத் திறமையான முறையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். நீரிழிவு நோய்க்கான உணவு முறைகள் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் போதிய அளவில் உட்கொள்ள வேண்டிய உணவுகள் அளவாக உண்ண வேண்டிய உணவுகள் பொதுவாகப் பாவிக்கக்கூடிய மரக்கறிகள் பழங்கள் ஒரு நாளிற்கு […]
கர்ப்பகால நீரிழிவு நோய் என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய் ஆகும். இது பொதுவாக கர்ப்பத்தின் 24ஆம் மற்றும் 28ஆம் கிழமைகளிலே ஏற்படுகின்றது. எனவே கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான பரிசோதனை 24ஆம் மற்றும் 28ஆம் கிழமைகளுக்கிடையே மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பத்தின் போது (சூழ்வித்தகத்தினால்) (Placenta) சுரக்கப்படும் சில ஹோமோன்கள் தாயின் இன்சுலினை சரியாக தொழிற்படவிடாமல் தடுக்கின்றன. இதனால் இன்சுலினுக்கான தடை (Insulin Resistence) அதிகரிக்கப்படுகின்றது. இதனால் ஒரு கர்ப்பிணித் தாயிற்கு சாதாரண நிலையிலும் பார்க்க இரண்டு அல்லது […]
இது நீரிழிவு நோயாளிகளில் எவ்வாறு ஏற்படுகின்றது என்று பார்ப்போம்? இனி இதை எவ்வாறு இனங்காண்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்? இவ்வாறு இனங்கண்டபின் உடனடியான அடுத்த கட்ட நடவடிக்கையாக நீரிழிவு நோயாளி ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்? குறிப்பு: ‘வருமுன் காப்போம்’ என்பதற்கிணங்க எவ்வாறு கைப்போகிளைசிமிக் (Hypoglycemic) தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாப்பது என்பது பற்றி நீரிழிவு நோயாளி ஒருவர் தெரிந்து வைத்திருத்தல் நல்லது. ச.ஞானக்குமரன்
எம்மை பொறுத்தவரையில் மக்களின் வாழ்க்கை முறை பெரிதும் மாற்றமடைந்துள்ளது. வாழ்க்கை முறை இயந்திரமயமானதாக இருப்பதால் தற்கால மனிதன் போதியளவு உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இன்றி வாழ்வதுடன் உடற்தேவைக்கு அதிகமானளவு உணவுகளையும் உட்கொள்கின்றான். இதனால் உயர்குருதியமுக்கம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றான். ஓவ்வொரு நாளும் நாம் மேற்கொள்ளும் அன்றாட உடற்தொழிற்பாடுகளும் முறையான உடற்பயிற்சியும் எமக்கு புத்துணர்வை ஏற்படுத்துவதுடன் உடலின் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கின்றது. மேலும் இவை உடற்தசைக் கலங்களின் தொழிற்பாடுகளையும் அதிகரிக்கின்றது. தசைக்கலங்களின் தொழிற்பாடு அதிகரிப்பதனால் […]
உலகில் நீரிழிவு நோய்நீரிழிவு நோய், சலரோகம், டயபிடிஸ் (Diabetes) என பலராலும் கூறப்படும் இந் நோயானது உலகளாவிய ரீதியில் மிக அதிகளவான மக்களை பாதித்துள்ளது. ஆரம்பத்தில் இது பணக்காரர்களின் நோய் என வர்ணிக்கப்பட்ட போதிலும் தற்போது ஏழை பணக்காரர் எனும் எனும் வித்தியாசம் பாராமல் எல்லோரையும் பாதிக்கும் நோயாக உருவெடுத்துள்ளது. 180 மில்லியனிலும் அதிகமான நடுத்தர வயதுடையோர் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 194 மில்லியன் மக்களை நீரிழிவு நோய் பாதித்துள்ளது. 2030 ம் ஆண்டளவில் மொத்த […]
நீரிழிவு என்னும் நிலை ஏற்ப்படுவதற்கு காரணமாக அமைவது உடலில் காணப்படும் இன்சுலின் எனும் ஹோர்மோனின் உற்ப்பத்தி குறைவடைதல் அல்லது அதன் செயற்ப்பாட்டில் ஏற்படும் குறைபாட்டின் காரணத்திலாகும். குருதியில் காணப்படும் குளுக்கோஸானது உடற்கலங்களுக்குள் ஊடுறுவுவதற்கு இன்சுலின் அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இன்சுலின் இன்றி உங்குளுக்குத் தேவையான சக்தியை பெற்றுக்கொள்ள முடிவதில்லை. உடலில் இன்சுலின் அளவு குறையும்போது உடற்கலங்களுக்குள் குளுக்கோஸ் உட்புக முடியாத நிலையில் குருதியில் குளுக்கோஸின் அளவு மிகவும் அதிகரிப்பதன் மூலம் நீரிழிவு நோய் நிலை ஏற்படுகிறது. […]