You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category
இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் ஒன்றாக சிறுநீரகப் பாதிப்பு விளங்குகிறது. குறிப்பாக, வடமத்திய மாகாணத்திலுள்ள அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களும் இவற்றின் அருகாகவுள்ள புத்தளம், வவுனியா, குருநாகல் ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களும் உள்ளடங்கலாக நாட்டின் ஏனைய சில பிரதேசங்களுக்கும் இப்பாதிப்பு பரம்பலடைந்துள்ளது. சிறுநீரக நோய் உயிராபத்து மிக்க சிறுநீரக நோய்ப் பாதிப்பு முன்னொரு போதுமே ஏற்படாத அளவுக்கு ஏற்பட்டிருப்பது பல்வேறு தரப்பினரதும் அவதானத்தைப் பெற்றுள்ளது. இந்த நோய்ப்பாதிப்புக்கான காரணம் என்ன..? […]
இவ்வருடம் உளநலம்சார்ந்து உலக சுகாதார அமைப்பு முன்மொழிந்த தொனிப்பொருளை நோக்கின் அது “வேலைசெய்யும் இடத்தில் ஒருவரது உளநலத்தைப் பற்றி கவனம் செலுத்தல்” என்பதாக அமைந்துள்ளது. வாழ்நாளின் பெரும்பகுதி வேலை செய்யும் இடங்களிலேயே கழிந்துவிடுகிறது. இந்த நிலையிலே வேலையற்றவராக இருப்பதால் தான் ஒருவரது உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்னும் உண்மை ஒருபுறம் இருக்க நாம் வேலை செய்வது எம் உள சுகாதாரத்துக்கு நன்மையைத் தந்துவிடும் போதும் பாதகமான சூழற் காரணிகளான மதுபான பாவனை, ஆளணிப் பற்றாக் குறை மற்றும் […]
நாளாந்தம் மருத்துவமனைக்குவருகை நோயாளிகளில் கடற்றொழில் செய்யும் சாதாரண பொதுமக்கள் பின்வரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவர்களுள் சிலர் ஆபத்தான நிலையை அடைவதையும் அவதானிக்க முடிகிறது. 1.சுனையடிப்பு (சுனைநீர் Jelly Fish) 2.மின்னல் தாக்கம் 3.குருதியில் குளுக்கோஸின் அளவு குறைந்த நிலை. 4.உயர்குருதி அமுக்கம் 5.அதிகரித்த மதுப்பாவனை சுனைநீர் மீனவர்கள்,ஆழ்கடல் நீச்சல் செய்பவர்கள்,கடற் கரைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் இதன் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். ஜெலிமீன்களின் அமைப்பும் செயற்பாடும் ஜெலிமீன்கள் கடல் வாழ்விலங்கினத்தைச் சேர்ந்தவை. இவை சில மில்லி […]
எமக்கிருக்கும் மன அழுத்த நிலையை அடையாளம் கண்டு, பொருத்தமான நடவடிக்கை எடுப்பதன் மூலம் வேண்டாத தகாதவற்றை தவிர்த்துக் கொள்ளலாம். மன அழுத்தத்தினால் ஏற்படும் அறிகுறிகள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மயக்கம், தலைச்சுற்றல் காதில் தொடர்ந்து ரீங்கார ஒலி கேட்டல் உடல் நடுக்கம் மார்பில் எரிச்சல் உலைச்சல் பேதியாதல் அல்லது மலச்சிக்கல் மனம் அல்லது உணர்ச்சி அறிகுறிகள் உறக்கம் வராமை கவலை அல்லது அச்சம் சோர்வு அல்லது தாழ்வு மனப்பான்மை ஒவென அழ வேண்டுமென்ற உணர்வு முன்கோபம் சிக்கல்களுக்கிடையே […]
மனிதனுக்கு அடிப்பமைத்தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் எவ்வளவு முக்கியமோ அதேபோல நல்ல தூக்கமும் மிகவும் முக்கியம். தூக்கத்தின் செயல் நாள்தோறும் உடலாலும் மனதாலும் உழைக்கும் மனிதனுக்கு நித்திரை என்ற ஒய்வு கண்டிப்பாக வேண்டும். தூக்கம் என்பது தானாக வரவேண்டிய ஒன்று நாமாக தேடிப் போனால் வராது. ஆதவாக வரும்போது மறுக்கமுடியாது. நம்மில் சிலர் படுத்தவுடன் தூங்கி விடுவர். ஆனால் சிலரோ எப்படிப் படுத்தாலும் தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப்படுவர். பெரும்பாலும் வயதானவர்களைப் பாதிக்கும் […]
வயதுடன் ஏற்படும் பார்வைக்குறைவின் பின்னாகவோ அல்லது பார்வைக்குறைபாடு உடைய விருந்தினர்ங்கள் எங்களுடைய வீடுகளுக்கு வருகை தரும் போதோ வீடுகள் அவர்களுக்கு நட்பானதாகவும், ஏற்ற விதத்திலும் பெரும்பாலும் அமைந்திருப்பதில்லை. அவ்வாறு அமையாததன் காரணமாக பல உள அசெளகரியங்களுக்கும், உடல் காயங்களுக்கும் உள்ளாக நேரிடுகின்றது. மிகுந்த விருப்போடு கட்டிய வீடு பார்வைக்குறைவின் பின்னர் வாழ்வதற்கு அசெளகரிய மானதாகத் தோன்றுவது எதனால் என்ற கேள்விகளுக்கு பதில் கண்டுகொள்வது நன்று. அழகியலுக்கு முன்னுரிமை கொடுத்து அமைக்கப்படும் வீடுகளில் பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் வாழ்வதற்கு ஏற்றவகையில் […]
இருதயமும் தொழிற்பாடு இதயம் நான்கு அறைகளைக் கொண்ட உடலுக்கும் நுரையீரலுக்கும் குருதியை வழங்குகின்ற பம்பியாகும். மேலே உள்ள வலது மற்றும் இடது சோணை அறைகளைப் பிரிக்கும் சுவர் சோணை அறை பிரிசுவர் எனப்படும். கீழே உள்ள வலது மற்றும் இடது இதய வறைகளைப் பிரிக்கும் சுவர் இதயவறைப் பிரிசவர் எனப்படும். உடல் உறுப்புகளில் இருந்து ஒட்சிசன் (O2) குறைந்த குருதி மேற்பெருநாளம், கீழ் பெருநாளங்களினூடாக வலது சோணை அறையை அடைந்து முக்கூர் வால் பினூடாக வலது இதய […]
புதிதாய் பிறந்த குழந்தையானது, பொதுவாக இளஞ்சிவப்பு நிறமாகக் காணப்படும். ஆனால் சில காரணங்களால் அவர்களின் தோல் சாதாரண இளஞ்சிவப்பு நிறத்தைவிட வேறு நிறங்களாக மாற்றமடையலாம். அதிகளவு மெலனின் (Melanin) எனப்படும் நிறப்பொருள் தோலில் இயற்கையாகவே காணப்படின் ( உதாரணம் ஆபிரிக்க குழந்தைகள்) அவர்கள் கடும் நிறம் ( Dark complexion) உள்ளவர்களாக இருப்பார்கள் தோலில் பிளிறூபின் (Bilirubin) எனப்படும் மஞ்சள் பதார்த்தம் படியுமானால் தோல் மஞ்சள் நிறமடையும். இந்த நிலையைப் பற்றி கீழ் வரும் பந்திகளில் விளக்கப்பட்டுள்ளது. […]
சிறுவர்களில் காணப்படும் மிகப் பொதுவான நாள்பட்ட நோயாக இழுப்பு வருத்தம் (அஸ்மா) காணப்படுகிறது. அநேகமான பெற்றோருடைய கவலை ‘ஏன் அடிக்கடி எம் பிள்ளைக்கு இழுப்பு வருகிறது எப்படி இதை வராமல்தடுக்கலாம்? இழுப்பை முற்றாக மாற்ற முடியுமா?” என்பனவாகும். உலகில் சிறுவர்களைப் பொறுத்தவரையில் பதினொரு பேரில் ஒருவருக்கு இழுப்பு வருத்தம் காணப்படுவதுடன் நீண்டநாள்களுக்கு மருந்தும் தேவைப்படுகிறது. லண்டனில் சாதாரண வகுப்பு ஒன்றில் மூன்றில் ஒரு சிறுவருக்கு இழுப்பு வருத்தம் காணப்படுகிறது. இலங்கையில் 5 தொடக்கம் 1 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் […]
நீரிழிவு எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒரு நீண்டகால நோயாகும்.அந்த வகையிலே இந்தக்கட்டுரையானது கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளர்களிடையே ஏற்படும் வாய்க்குழி சம்பந்தமான பிரச்சினைகள்(Complication) பற்றிபேசுகின்றது. சாதாரணமானவர்களை விடவும் கட்டுப்பாடற்ற நிரிழிவு நோயாளர்களிடையே வாய்க்குழி சம்பந்தமான நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன. பாதிக்கப்படும் வீதமும் அதிகரிக்கின்றது. பொதுவாக வாய்க்குழி மென்சவ்வே அதிகம் பாதிப்படைகிறது. பற்களைத்தாங்கும் முரசு என்பு நாரிழையங்களில் ஏற்படும் அழற்சி (Periodontitis), உமிழ்நீர் சுரப்பு சுரத்தலின் பாதிப்பு (Gingivitis), உமிழ்நீர் சுரக்கும் அளவும் தன்மையும் மாறுதல்சுவையில் மாற்றம் ஏற்படுதல், பக்ரிறியா […]