You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category
“அரிது அரிது மானிட ராய் பிறத்தல் அரிது” என்பது ஆன்றோர் வாக்கு. இத்தகைய பெறுதற்கரிய பிறவியிலே கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு காலப்பகுதியும் சுவாரசியமானது. அதிலும் முதுமைக் காலம் மிகவும் சுவாரசியமானது. பட்டாம்பூச்சியாய்சிற கடித்த பள்ளிப்பருவம், சுற்றித்திரிந்த கட்டிளமைப் பருவம், ஓடி ஓடி உழைத்த இளமைப்பருவம் ஆகியவற்றின் வரிசையில் உழைத்து இளைத்துப் போய் ஓய்வெடுக்கும் காலமே இந்தமுதுமைக்காலம் ஆகும். நோய்களின் இருப்பிடமாகும் முதுமை மனிதன் முதுமை அடையும் போது என்புகள் தசைகள் வலு இழத்தல், நரம்புகளின் […]
நீரிழிவு நோயாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் என்பன தொடர்பில் மருத்துவருக்கும் நோயாளர்களுக்கும் இடையில் நடைபெறும் கதையாடல்போன்று இந்தக் கட்டுரை நகர்கிறது. மெற்போமின் மருத்து தொடர்பில் மருத்துவ ஆலோசனை அவசியம் கேள்வி: எனது வயது 56 ஆகும். நான் மெற்போமின் மருந்தை (500மி.கி.) நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த கடந்த 5 வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றேன். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குருதிப் பரிசோதனைகளின் படி எனது நீரிழிவு நோய்க் கட்டுப்பாடானது சிறந்த முறையில் உள்ளதாக மருத்துவர் கூறியிருந்தார். எனது உறவினர்கள் […]
விந்தை மிகு விஞ்ஞானம் விண்ணைத் தொடும் தொழில்நுட்பம் என மிக வேகமாக முன்னேறி வரும் உலகில் மனிதனை ஆட்டிப்படைக்கும் தீவிரமான நோய்களும் பற்பல வடிவங்களில் மிக வீரியம் கொண்டு உருவெடுக்கின்றன. இருப்பினும் மருத்துவத் துறையானது புதிய பல கண்டுபிடிப்புக்களின் மூலம் இந்த நோய்களை வெற்றிகொள்ளும் வழிகளை வகுத்து மனிதனது ஆயுட் காலத்தை நீடித்து ஆரோக்கியமாக வாழ அளப்பரிய சேவை ஆற்றுகின்றது. இருப்பினும் இன்று எம்மில் சிலர் பல உயிர்கொல்லி நோய்களுக்கு ஆளாகி அதனை வென்று மீண்டெழுவது எவ்வாறு […]
தரம் 8 வகுப்பறை. காலை 8.00 மணி. ஏனைய மாணவர்கள் எல்லோரும் உடற்பயிற்சிக்காக மைதானம் சென்று விட்டார்கள். றொசானும், சுரேசும் வகுப்பறையில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். றொசான் தான் அந்த வகுப்பில் மிகவும் குண்டான பையன். தசைகள் தொங்கும்படியும் கழுத்து, கை மடிப்புக்களில் தோல்தடித்து கறுத்தும் எப்பொழுதும் மனச்சோர்வுடனும் காணப்படுவான். வகுப்பறையில் கடைசி மூலை தான் அவனது இடம். மற்றவர்களால் “குண்டா“ எனஅழைக்கப்படும் அவனை, முன்வரிசையில் இருந்தால் கரும்பலகை மறைக்கிறது என சக மாணவர்கள் சண்டைக்கு இழுப்பார்கள். இதை […]
இன்றைய காலகட்டத்தில் வீதி விபத்துக்களினால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடிய தாக உள்ளது. ஒவ்வொருநாளும் பத்திரிகைகளை வாசிக்கும் போது விதிவிபத்து தொடர்பான ஒரு செய்தியையாவது காணக் கூடியதாக உள்ளது. பச்சிளம் பாலகனிலிருந்து தள்ளாத வயது வயோதிபர் வரை வீதி விபத்துக்களில் சிக்குவதைக் காணமுடிகின்றது. முப்பதாண்டுகாலப் போரினால் மடிந்து போன உயிர்களை விட விதி விபத்துக்களினால் உயிரிழந்தோரின் எண்ணிைக்கையானது அதிகமானதென அண்மைய புள்ளி விவரமொன்று எடுத்துக்காட்டுகின்றது. அதிகரித்த வாகனங்களின் பயன்பாடு விதி ஒழுங்குகளை மதியாது நடக்கின்ற […]
தைரொயிட்தொடர்பான பிரச்சினையுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் . தரிக்க விரும்பினால் அவருக்கு எவ்வாறான ஆலோசனைகளை வழங்க விரும்புகிறீர்கள்? பெண்ணொருவருக்குள்ளதைரொயிட் பிரச்சினை என்பது தைரொயிட் சுரப்பு குறைவாக இருக்கும் நிலையாகவோ அல்லது தைரொயிட் சுரப்பு அதி களவில் சுரப்பதால் ஏற்படும்பிரச்சினையாகவோ இருக்கலாம்.தைரொயிட்சுரப்புகுறைவாகவுள்ளேர்சோம்பல், அதிகநித்திரை, உடற்பருமன் அதிகரித்தல், மலச் சிக்கல், மாதவிடாயின்போது அதிகளவு வெளி யேறுதல் மற்றும் குளிர்தாங்க முடியாதிருத்தல் போன்ற குணங்குறிகளைக் கொண்டிருப்பர். இவர்களுக்கு கழுத்துப் பகுதியில் கழலையோ, விக்கமோ இருக்கலாம் அல்லது இல்லாதிருக் கலாம். இவ்வாறான குணங்குறிகளைக் கொண்டிருப்போர் […]
அகஞ்சுரக்கும் தொகுதியியல் வரையறை எமது உடலில் பல வகையான ஓமோன்களைச் சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. அந்த வகையிலே இவை அனைத்தையும் ஒருசேர இணைத்து ஒட்டு மொத்தமாக அகஞ்சுரக்கும் தொகுதியென வரவிலக்கணப்படுத்துகிறோம். இந்த அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் நோய்கள் தொடர்பில் ஆராயும் பிரிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல் (Endocrnology) என அழைக்கப்படுகிறது. இது பொது மருத்துவத்தின் (General medicine) முதன்மைப்பிரிவாக கருதப்படுகின்றது. தவிர, இன்றைய காலச்சுழற்சியின் வேகத்தில் பொது மருத்துவத்துறையானது மேலும் பல உப பிரிவுகளைக் கொண்டு சிறந்த முறையில் […]
கர்ப்பகாலத்தில் பெண்கள் இருவேறு நோய் நிலமைகளை எதிர்நோக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.அவை நீரிழிவுநோய் மற்றும் உயர் குருதி அழுத்தம் என்ற விதமாக அமைந்துள்ளன. பெரும்பாலான கர்ப்பிணித்தாய்மார்கள் தாங்கள் கர்ப்பம் தரித்து 24 வாரத்திற்கும் 28 வாரத்திற்குமிடையிலேயே குளுக்கோஸ் அளவு மட்டத்தினை குருதியில் அளவிட வேண்டும் இதனூடே இந்த நோய் நிலமைகளைக் கண்டறிந்து கொள்ளமுடியும். இவ்வகையில் கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிப்படையும் பெண்களின் சதவீதம் அதிகரித்துவருகிறது. கர்ப்பகால நீரிழிவு நோய்க்குரிய காரணங்கள் அளவுக்கதிகமான உடல்நிறை. பெற்றோருக்கு வகை-2 (Type 2)நீரிழிவுநோய் […]
இன்றைய காலகட்டத்தில் வயது மற்றும் பால் வேறுபாடின்றி அநேகமானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக வயிற்றுப்புண் அல்லது இரைப்பை புண் அமைந்துள்ளது. இரைப்பையில் ஏற்படும் உறுத்தல் சரியான நேர கால அளவிடையில் உணவருந்தா விடின் இரப்பைச் சாற்றிலுள்ள அமிலத்தன்மை இரப் பைச்சுவரை உறுத்துவதால்புண்ஏற்படுகிறது. இதுவே வயிற்றுப் புண் ஏற்படுவதற்கான பொதுவான காரணமாகக்கொள்ளப்படுகிறது. நாம் உட்கொள்ளும் உணவு சமிபாடு அடைவதற்கு இரைப்பையில் ஹைறோகுளோரிக் அமிலம் சுரக்கப்படுகிறது. இந்த நேரங்களில் உணவு உள்ளெடுக்காவிடின் வயிற்றுப்புண் ஏற்படுகிறது. மேலும் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும்போதும், மூளையின் தூண்டுதலால் […]
“லிவோத்றொக்ஸின்” Levothyroxine பயன் தைரொயிட் ஓமோன் சுரப்பைக் கூட்டுவதற்கு இந்த மருந்தைப் பாவிக்கலாம். பாவனை இந்த மருந்தை தினமும் வெறு வயிற்றில் உள்ளெடுத்தல் வேண்டும். குறிப்பாக காலை உணவு அல்லது தேநீர்வேளைக்கு அரை அல்லது ஒருமணத்தியாலங்களுக்கு முன்பாக உள்ளெடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவும். ஒரு குவளை தண்ணிருடன் மருந்தை உள்ளெடுக்கவும். இந்த மருந்தை உள்ளெடுக்கும் 2 மணத்தியாலகாலப் பகுதிக்கு வேறெந்த மருந்துகளையும் உள்ளெடுக்கக்கூடாது. குறிப்பாக, கல்சியம், இரும்பு அலுமினியம் கொண்டுள்ள அமிலநீக்கிகள், விற்றமின்குளிசைகளை உள்ளெடுப்பதைத் தவிர்க்கவும். […]