You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category
நோயாளியைத் தட்டி எழுப்புதல் வீட்டில் குளுக்கோ மீற்றர் (Glucometer) இருக்குமாயின் குருதியில் குளுக்கோசின் அளவை அறிந்துகொள்ள வேண்டும். குருதியில் குளுக்கோசின் அளவு குறைந்த நிலையில் காணப்படுமாயின், நோயாளி குடிக்கக்கூடிய நிலையில் இருப்பின் நோயாளிக்கு பானம் அல்லது குளுக்கோசை கரைத்து மெதுவாக பருகக் கொடுக்கலாம். உட்சொண்டு, நாக்கின் அடிப்பகுதி போன்றவை அதிக உறிஞ்சும் தன்மை உடையவை என்பதால், இனிப்பு அதிகம் உள்ள உணவைப் பாணியாகப் பசை போல் செய்து அப்பகுதிகளில் தடவுதல் வேண்டும். நோயாளியின் நிலைமை சரியாக அமையாதவிடத்து […]
நீரிழிவு நோயாளி ஒருவரின் குருதி அழுத்தம் 130/80 mmHG இலும் குறைவாக இருத்தல் நன்று நீரிழிவு நோயாளி ஒருவரில் சராசரி குளுக்கோசின் அளவு நல்ல நிலையில் தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு நீரிழிவால் ஏற்படும் பாதிப்புக்கள் குறைவாகவே இருக்கும். நீரிழிவு நோய் இல்லாத ஒருவரின் குருதியில் குளுக்கோசின் அளவு 70 தொடக்கம் 160MG/DL ஆகக்காணப்படும். அதாவது ஒருநாளில் 3.9 – 8.9 MMOL வரை மாறிமாறி இருக்கும். நீரிழிவு நோய் இருப்பதை உறுதிப்படுத்திய ஒருவர், அதற்குரிய சிகிச்சையை […]
கேள்வி:- 27 வயதான எனது மகளின் நிறையானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்கின்றது. அவரது தற்போதைய நிறை 92Kg ஆகும். அவரது உயரம் 5அடி 4அங்குலம் ஆகும். அவரது மாத சுகவீனமும் ஒழுங்கற்று இருக்கின்றது. இவர் மிக விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றார். எமது குடும்ப வைத்தியரின் ஆலோசனைப்படி சில குருதிப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம். அப்பரிசோதனைகளின் படி சலரோகநோய் ஏற்படும் ஆரம்ப நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தார். எனது மகளின் உடல் நிலை பற்றி விளக்கிக் கூறவும். இதனால் […]
நோய்த்தடுப்புக்கும் நோய் குணமாக்கலுக்கும் உரிய சாதனமாக இயற்கை விளங்குகிறது காற்று ஐம்பூதங்களுள் இயற்கையின் தனித்துவக் கூறாக நித்தமும் உயிர்நிலை வருடுகின்ற சுத்தமான காற்று பலவிதநோய்களையும் குணப்படுத்துகிறது. நுரையீரலைப் பாதுகாத்துக்கொள்கிறது. ஆம், பருவ காலத்துக்கு ஏற்ப காற்றுப் பலமாக வீசத் தொடங்கும் சந்தர்ப்பங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் ளின் எண்ணிக்கை குறைவடைகின்றமை இதற்குத் தக்க சான்றாக அமைந்துள்ளது. இயற்கையான காற்றை நாம் நிறைவாக சுவாத்தியம் செய்ய வேண்டும். அவற்றைத் தடுத்து நிறுத்தி கதவடைப்புச் செய்து விடக்கூடாது. உண்மையில் நாங்கள் […]
அடிக்கடி சிறுநீர் கழித்தல், தண்ணீ ர் குடித்தல், தேகம் மெலிந்தும் சோர்ந்தும் காணப்படுதல் போன்ற அறிகுறி களைகிரேக்க மொழியில் ‘டயபிற்றீஸ்’ என அழைக்கின் றனர். அதன் தொடர்நிலையாக அனைத்து மொழிப் பயன்பாடுகளிலும் இதேவிதமாகவே நீரிழிவை பெயர் குறிப்பிடுகின்றனர். சதையியில் உள்ள ‘ஐலட்கலன் (லன்கர் கான்ஸ்) இல் இருந்து இன்சுலின் என்ற ஓமோன் சுரப்பு வெளிவருகி றது. இவைகுருதியில் உள்ள குளுக்கோசை உடலில் உள்ள கலங்களுக்கு உட்செலுத்துவதில் உதவிபுரிகின்றன. உடல் உறுப்புக்களுக்கு சக்தியை உருவாக்க குளுக் கோஸ் அவசியமானது. […]
ஆலயங்களும் விருந்தோம்பல் பண்பும் ஆலயங்களில் திருவிழாக்கள் ஆரம்பித்துவிட்டாலே இறைத்துவம் எங்கும் தழைத்தோங்கும். பக்தியின் திருப்பொலிவு அவ்வூர் எங்கும் அமைதியை செந்தளிக்கும். மனம், வாக்கு, காயத்தால் அடியவர்கள் அனைவரும் இறையருளின் சித்தமாய் அருள் மணம் கமழ்வர். சாந்த சொரூபமாய் திருத்தொண்டுகள் பல செய்வர். ஆம், ‘அன்னதானம் வழங்கல், தாகசாந்தி செய்தல்’ என விருந்தோம்பல் பண்பு ஆலய சுற்றுப் புறச் சுழலில் தனித்துவப் பேறு தரும்.அடியவர்களை அன்பால் அரவணைப்பது ஆங்கு சுற்றம் பேணலாய் திருநிலைபெறும். ஆலயச் சூழலில் நிலைப்படுத்தப்படுகின்ற மேற்படி […]
பன்னாட்டு ரீதியில் நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் பல்கிப் பெருகி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இலங்கை போன்ற வளர்முக நாடு களிலும் சிறிது சிறிதாக இவற்றின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது. மிக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி கொழும்புநகரப் பகுதியில் ஏறக்குறைய23 சதவீதத்தினர் நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலையால் (prediabetes) பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இனங்களை ஒப்பிடுகையில் இலங்கைத் தமிழரிடையே நீரிழிவு ஏற்படும் சதவீதம் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. சீனி மற்றும் மாச்சத்துப் பொருள்களின் பாவனை தமிழ் மக்களிடையே சீனி […]
புகைத்தல் நாகரீகத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனாலும் அந்த நிலமைகள் தற்போது மாற்றம் கண்டுள்ளது. புகைப்பிடிப்பவர்களை தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கின்ற காலம் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் புகைப்பிடிக்கும் பழக்கம் என்பது புகைப் பிடிப்போரை மட்டுமே பாதிப்பதில்லை, அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் பாதித்து நோயாளி ஆக்கிவிடும் தன்மையை கொண்டுள்ளது. இத்தகு காரண காரியம் கொண்டே பொது இடங்களில் புகைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டவிதி நடைமுறைக்கு வந்திருக்கின்றது. புகைப்பிடிப்பதால் ‘பாரிசவாதம், மாரடைப்பு, புற்றுநோய், சுவாசம் சம்பந்தமான […]
நீரிழிவு நோய் குறித்த வகைப்படுத்தலை மருத்துவர்கள் இருவாறாகப் பெயர்குறிப்பிடுகின்றனர் அவை வகை1, வைகை2, என அமையும். வகை ஒன்றில் 5 தொடக்கம்10 வீதமும் வகை இரண்டில் 80 தொடக்கம் 90 வீதமும் காணப்படுகின்றன. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் 01. உணவுக் கட்டுப்பாடு 02. குருதிப் பரிசோதனை 03. உடற்பயிற்சி 04. மருந்து (குளிசை) ஊசிமருந்து நோயின் குணங்குறிகள் உடல்மெலிவு அதிகரித்த தண்ணிர்த்தாகம், அதிகமான பசி, அடிக்கடி சிறுநீர் வெளியேறல் உடற் சோர்வு மங்கலானபார்வை, காயங்கள் எளிதில் மாறாமை, […]
தேக ஆரோக்கியத்தில் பல்வேறுபட்ட ஆபத்தின் அறிகுறிகள் ஏற்படுவதற்கு உடற்பருமன் அதிகரிப்பு காரணமாக அமைகிறது. அந்தவகையிலே அதிக கவனத்துக்குரிய உறுப்புக்கள் வரிசையில் மூளை, இதயம், சதையி, நாளங்கள் மற்றும் கால் மூட்டு என்பன இடம்பிடித்துள்ளன. இவை முறையே பக்கவாதம் ஏற்படும் சந்தர்ப்பங்களை தவிர்த்தல், இதய நோய்களில் இருந்து தப்பித்தல், நீரிழிவிலிருந்து ஈரல் சிறுநீரகங்களை பாதுகாத்தல், நாளப்புடைப்பு மற்றும் மூட்டுவாத நோய்களில் இருந்து மீள்தல் என்ற அடிப்படைகளின் வழி அதிக அவதானம் கொள்ளப்படும்கின்றன. உயரத்துக்கு ஏற்ப உடற்பருமன் இருக்கவேண்டும். அதுவே […]