You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘செய்திகள்’ Category
இ-ரீடர்ஸ் (E-Readers) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்படிகளை உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கத்தால் ஒருவரின் தூக்கம் கெடுவதாகவும், அதனால் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர். காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் இருந்தன. தற்போது அந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் இந்த மின்படிகள் கிடைக்கின்றன. எனவே புத்தகங்களுக்கு மாற்றாக இந்த மின்படிகள் உலக அளவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. ஒருவர் படுத்து […]
சில பறவைகள் பேரழிவுகளை முன்கூட்டியே அறியும் வல்லமை கொண்டமை. அவ் சந்தர்ப்பங்களில் அவை தம் இருப்பிடங்களை விட்டுச் சென்று எமக்கு முன்கூட்டியே அறியத்தருகின்றது. சுனாமி ஏற்படும் நாளுக்கு முன்பே சில பறவைகள் தமது இருப்பிடத்தை விட்டு பறந்து சென்று பேரழிவு ஏற்படப் போவதை எமக்கு அறியத்தந்துள்ளது. தொலைதூரம் பறந்து செல்லும் பறவைகளான பாடும் பறவையினங்களில் ஒன்றான பொன்னிறப் பறவைகள் இந்த இயற்கை அழிவுகளை வெகு சீக்கிரம் அறிந்துவிடும். இப்பறவைகள் இந்த ஏப்ரல் மாதம் தென்னளி பிரதேசத்தைப் புரட்டிப்போட்ட […]
பூச்சி இனங்கள் பல தாமாகவே ஒளிரும் தன்மை கொண்டவை. அதில் மின்மினிப் பூச்சியும் ஒன்றாகும். மின்மினிப் பூச்சிகளை பற்றி நிறையவே கேள்விப்பட்டிருப்போம், நிறைய பேர் பார்த்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. அது எப்படி இந்த பூச்சி மட்டும் பிரகாசமாக ஒளிர்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது உண்டு. மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்று அழைக்கிறார்கள், Coleopteran என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பூச்சி ஒளிர்வதற்கு காரணம் லூசிஃபெரின் (luciferin என்ற இரசாயன கூட்டுப் பொருள் ஆகும். இது […]
ஒருவரின் வாழ்விற்கான அடிப்படைத்தேவை எதுவென எவரையேனும் வினவும் போது கிடைக்கும் விடையானது உணவு, உடை, உறையுள் என்பதாகும் ஆனால் ஒரு மனிதன் உணவு இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியும் தண்ணீர் இல்லாமல் ஒருவாரம் கூட வாழ முடியாது. இதற்கு மூலகாரணம் எமது உடம்பானது கிட்டத்தட்ட 70 வீதமானது நீரால் ஆனது. நீரானது உடல் முழுவதும் உணவு, ஒட்சிசன் வாயு மற்றும் உடலின் பலபாகங்களிலுள்ள கலங்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய பதார்த்தங்களை கொண்டு செல்பதுடன் அவ்வாறான […]
மூளை எவ்வாறு சுவையை உணர்கிறது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த ஓரு விவாதத்திற்கு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர். உப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு உரைப்பான உமாமி சுவை ஆகிய ஐந்து வகையான சுவைகளுக்கும் என தனித்தனியான விசேட நியூரான்கள் (உணர்வு உயிரணுக்கள்) மூளையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வெவ்வேறு சுவைகொண்ட உணவுகளை சுண்டெலிகளுக்கு கொடுக்கும்போது அவற்றின் மூளையில் ஒவ்வொரு நியூரானிலும் ஏற்படுகின்ற மாற்றத்தை அவதானித்து கொலம்பியா பல்கலைக்கழக […]
சுன்னாகம் மண்ணிலும் அதன் நிலத்தடி நீரிலும் கலந்துபோயிருக்கும் பெருமளவிலான எண்ணெய்ப் படிவுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்கும் இந்த மண்ணைத் தூய்மைப் படுத்துவதற்கும் இனி என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திப்பது பயனுடையதாக இருக்கும். முதலாவதாக எண்ணெய்க்கலப்பு நடந்திருக்கும் பகுதிகள் தெளிவாக இனம் காணப்பட்டு அந்தப்பகுதி மக்களுக்கு மாற்று குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படுவது நல்லது. அத்துடன் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் நிலத்தடி நீரை குடிப்பதற்கோ சமையலுக்குப் பாவிப்பதைத் தவிர்த்துவிடவேண்டும். இதற்கு மேலதிகமாக புதிதாக சுற்றாடலிலோ அல்லது […]
பொன்கொழிக்கும் பூமியாக பரந்த விவசாய நிலங்களையும் மக்கள் செறிந்துவாழும் குடியிருப்புப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்ட சுன்னாகம் மண்ணின் நிலத்தடி நீரை மாசுபடுத்திக் கொண்டிருக்கும் பல்லாயிரம் லீற்றர் கழிவு எண்ணெயை எவ்வாறு அகற்றப் போகிறோம்? நிலத்துக்கடியில் பரம்பிச் செல்லும் இதன் பரம்பலை எவ்வாறு அகற்றப்போகிறோம்? நிலத்துக்கடியில் பரம்பிச் செல்லும் இதன் பரம்பலை எவ்வாறு கட்டுப்படுத்தப்போகின்றோம். இதனால் மனிதனில் ஏற்படக்கூடிய பெரிய சுகாதாரப் பிரச்சினைகளை எவ்வாறு தடுக்க முடியும் அல்லது குறைக்க முடியும்? இந்தப் பகுதிகளில் விளையும் பயிர்களிலும் தாவரங்களிலும் […]
சுன்னாகத்திலே பல கிணறுகளில் எண்ணெய்ப் படவங்கள் மிதப்பது தற்பொழுது ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. நிலத்தடி நீரில் கலந்திருக்கும் இந்த எண்ணெய்ப்படிவுகளால் பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் தோன்றி இருக்கின்றன. இதனால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள நிலத்தடி நீருடன் கழிவு எண்ணெய் எவ்வாறு கலந்தது? 1958 ஆம் ஆண்டிலிருந்தே சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் அகற்றப்படும் […]
ஆறு வயதிற்கும் குறைவான பிள்ளைகள் முப்பரிமாண 3டி படங்களை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பிரான்சின் மக்கள் ஆரோக்கிய கண்காணிப்பு அமைப்பான அன்செஸ் பரிந்துரைத்துள்ளது. வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது. ஒரு முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக புரிந்துகொள்ளும். இவ்வாறாகத்தான் முப்பரிமாண படங்களை […]
மருத்துவத்துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, மூன்று நரம்பியல் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜான் ஒ கீஃப், மே-பிரிட் மோசர் மற்றும் எட்வர்ட் மோசர் ஆகியோர், தனிநபர்களின் இருப்பிடத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நகர்வுகளைச் செய்யக் காரணமான மூளைச் செல்களின் கட்டமைப்பைக் கண்டறிந்துள்ளதற்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதாகப் பரிசுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு தனிநபரும் தமது இருப்பிடத்தை புரிந்துகொண்டு, சிக்கலான ஒரு சூழலில் எவ்வாறு நகர்வுகளை மேற்கொள்கிறார்கள் என்பதை மூளையிலுள்ள அந்த செல்களே முடிவு செய்கின்றன என்று […]