You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘செய்திகள்’ Category
இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இரத்த குழாய்கள் கொழுப்பால் அடைபடுதலை, தினமும் 3 முதல் 5 காப்பிகள் வரை அருந்துவதன் மூலம் தவிர்க்க முடியும் என்று தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான ஆட்களை ஸ்கான் செய்து பார்த்த போது தினமும் மிதமான அளவு காப்பியை அருந்தி வருபவர்களுக்கு இரத்த குழாய்களில் கொழுப்பு பொருட்கள் படிவதற்கான ஆரம்பமான, ”கல்சியம் படிதல்” குறைவாகக் காணப்பட்டதாக கூறியுள்ளனர். காப்பி அருந்துவதற்கும் இதய நோய்களுக்குமான தொடர்பு குறித்து ஆய்வு நடந்து […]
சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும்.ஆனால் எது “போதிய அளவு தூக்கம்” ? இதற்கு விடை, “உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது”, என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், அலாரம் கடிகாரங்கள் […]
குளுக்கோமா எனப்படுவது கண்ணில் உள்ள பார்வை நரம்பு பாதிக்கப்படும் ஒரு நிலையாகும். கண்ணினுள் உள்ள அழுத்தம் (Eye pressure) அதிகரிப்பது இந்நரம்பு பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணமாகும். பிரதானமாக இரண்டுவகையான குளுக்கோமா உள்ளது சடுதியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா. (Closed angle glaucoma) படிப்படியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா. (Open angle glaucoma) சடுதியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா கூடுதலாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்படுகின்றது. இது ஒரு அவசர […]
உலகளாவிய ரீதியில் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக பெப்ரவரி 4ம் திகதி முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. புற்றுநோயானது உலகளாவிய ரீதியில் முன்னிலையில் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்திற்குகிணங்க 84 மில்லியன் மக்கள் இந்த நோயால் 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சாவடைவார்கள் என்ற கருத்து உள்ளது. உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் போது புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் போது புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தலும், எப்படியெல்லாம் புற்றுநோயை கண்டு பிடிக்கலாம், குறைக்கலாம். தடுக்கலாம் […]
உலகின் மிகப்பெரிய மருந்துக் கம்பனிகளில் ஒன்றான அஸ்ட்ரா ஸெனெகா புதிய தலைமுறை மருந்துகளை உருவாக்குவதற்கான ஆய்வுத் திட்டம் ஒன்றைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. உடலை வலுவிழக்கச் செய்யும் மரபணு ரீதியான பரம்பரை நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை உருவாக்குவதே இந்த ஆய்வின் நோக்கம். கிறிஸ்பெர் எனப்படும் முன்னேறிவரும் தொழில்நுட்பம் இந்த ஆய்வுக்காக முதற்தடவையாக பயன்படுத்தப்படவுள்ளது. குறிப்பிட்ட ஒரு நோய்க்கான மரபணுவை குணப்படுத்தும் தொழிநுட்பமே கிறிஸ்பெர் எனப்படுகின்றது. குறித்த நோயை ஏற்படுத்துகின்ற மரபணுவுவை குணப்படுத்த எந்த மருந்து மிகச் சிறந்த வகையில் […]
சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலையை குறைக்குமாறு தயாரித்து விற்கும் முறையில் மறுசீர் செய்யுமாறும் எம்.எஸ்.எஃப் எனும் எல்லைகளற்ற மருந்துவர்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. சிறுவர்களுக்கான மருந்துகளின் விலை 2001ம் ஆண்டு இருந்ததை விட 68 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்று விடுத்துள்ளது. வளரும் நாடுகளில் நிமோனியா தடுப்பு மருந்துகளுக்கு வளர்ச்சியடைந்த நாடான பிரான்ஸை விட ஏனைய நாடுகள் அதிகமான விலையை கொடுக்க நேரிடுவதாக கூறப்படுகின்றது. இந்த அமைப்பின் அறிக்கை பெருமளவு சரியானதே என்கிறார் […]
இலங்கையில் தாதிய பயிற்சிக் கல்லூரியில் கற்கும் சகல மாணவர்களுக்கும் தொழில் உத்தரவாதத்துடன் பயிற்சிக் காலத்தில் மாதாந்த கொடுப்பனவாக 16000 ரூபாய்க்கு மேற்பட்ட தெகை சம்பளமாகவும் கிடைக்கின்றது. இது கா. பொ. த உயர்தரத்தில் விஞ்ஞான பாடத்தில் ஆகக் குறைந்த அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்ததும், கா. பொ. த சாதாரண தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், தாய்மொழி மற்றும் ஆங்கிலப் பாடத்தில் திறமைச் சித்தியும் பெற்ற மாணவர்களுக்கான சரியான தொழித் தேர்வாகும். ஒவ்வொரு வருடமும் தாதிய பயிற்சிக் கல்லூரிகளுக் […]
முகத்தின் அழகைக் கெடுப்பதில் முகப்பருக்களும் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. இளம் வயதினரிடையே இது ஒரு முக்கிய பிரச்சினையாகவும் இருக்கிறது. சிலருக்கு மாறாத வடுக்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. பொதுவாக முகப்பருக்கள் எமது தோலின் கீழ் காணப்படும் நெய்சுரப்பிகளால் சுரக்கப்படும் Sebum எனும் திரவப்பொருள் அதிகமாக சுரக்கும்போது முகப்பருக்கள் தோன்றும் வாயப்பு உண்டு. சுரக்கப்படும் அளவை பொறுத்து பருக்களின் அளவும் வேறுபடும். இலிங்க ஓமோன்கள் இளம் பருவத்தில் அதிகமாகச் சுரப்பதாலும் பருக்கள் இப்பருவத்தில் அதிகமாக தோன்றும். எமது தோலில் காணப்படும் […]
விபத்து நடந்தவுடன் அதைச் சூழ்நின்று வேடிக்கை பார்ப்பதையும், அல்லது அதிலிருந்து விலகி ஒடுவதையும் விடுத்து, காயப்பட்டவரை எவ்வளவு விரைவாக வைத்தியசாலைக்கு சிக்கல்கள் ஏற்படாமல் அனுப்பும் மனிதாபிமான செயல்களில் ஈடுபடுவோம். இதனால் காயப்பட்டவர் இறப்பதிலிருந்து, மேலும் அங்கவீனமடைவதிலிருந்தும் காப்பாற்ற முடியும். முதலாவதாக விபத்து நடந்த இடத்தில் காயம் பட்டவர் சுவாசத்தை அவதானிக்க வேண்டும். சுவாசம் இருக்கின்றதா அல்லது கஷ்டப்பட்டு சுவாசிக்கின்றாரா என்பதை அவதானிக்க வேண்டும். இதை அவதானித்து அவரது மூக்கு, வாய் பகுதிகளில் மண், கல் போன்றவற்றால் சுவாசப்பாதை […]
அதீத தொழில்நுட்பங்களும் நவீன வாழ்க்கை முறைகளும் எம் அன்றாட வாழ்க்கையை இலகுபடுத்திருக்கின்ற போதிலும் எம்மிடையே காணப்பட்ட நாம் அன்றாட வாழ்வில் செய்து வந்த பல இலகுவான உடல் அப்பியாசங்களை இல்லாதொழிக்க காரணமாகியுள்ளன. இதுவே நாம் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டதற்கான அடிப்படைக் காரணியாகும். உடற்பயிற்சியில் ஈடுபடுகயைில் உடற்தசை இழையங்கள் குளுக்கோசின் முழு வினைத்திறனுடன் பயன்படுத்த வாய்ப்பளிக்கப்படுகிறது. அத்தோடு இவ்வினைவானது 1 – 2 நாள்கள்வரை நீடிக்கிறது. எனவே நாளாந்தம் உடற் பயிற்சியில் ஈடுபடுவதானது குருதியில் குளுக்கோசின் […]