You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘செய்திகள்’ Category
ஒருவர் அதிகமான நேரம் வேலை பார்ப்பதற்கும் அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாய்த் தெரிவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டியுள்ளது. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைநேர மற்றும் உடல்நலத் தரவுகளை ஆராயும்போது வாரத்திற்கு ஐம்பத்து ஐந்து மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை பார்ப்பவர்களுக்கு, வாரத்துக்கு நாற்பது மணி நேரத்துக்கும் குறைவான நேரம் வேலை பார்ப்பவர்களைக் காட்டிலும் மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து மூன்று […]
முறையான தூங்கும் வழக்கம் இல்லாதவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம் என்றும், குடும்பத்தில் மார்பகப் புற்றுநோய் உள்ள பெண்கள் ஷிஃப்ட் வேலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எலிகளில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, புற்றுநோய்க்கும் ஒழுங்கற்ற தூங்கும் வழக்கங்களுக்கும் இடையில் மறுக்க முடியாத தொடர்பு இருப்பதைக் காட்டுகிறது. ஷிஃப்ட் வேலை செய்பவர்களின் உடல்நலம் குறித்த கவலைகளை ‘கரண்ட் பயாலஜி’ என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு எழுப்புகிறது. குடும்ப வழியில் மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய […]
அல்ஸைமர்ஸ் நோயால் மூளையில் ஏற்படும் பாதிப்புகளின் வேகத்தைக் குறைக்கவல்ல ஒரு புதிய மருந்தை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். எலி லிலி என்கிற மருந்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் “சொலானெஸுமேப்” என்ற இந்த புதிய மருந்து, டிமென்ஷியா நோய் முன்னேறும் வேகத்தை சுமார் 33 சதவீதம் குறைக்கும் என்று தெரிவிக்கிறது. அதாவது இந்த குறிப்பிட்ட மருந்தை, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய்த்தாக்கத் துவங்கிய ஆரம்ப கட்டத்திலேயே கொடுத்தால் இந்த அளவுக்கு பலன்கள் கிடைக்கும் என்கிறது இந்த […]
இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ஆண்களின் விதைப்பைகள் பாதிக்கப்பட்டு, விந்தணு உற்பத்தி குறைக்கப்படுவதோடு, நெஞ்செரிச்சல் அதிகரிக்குமென்றும், தொடைத்தசைகளும் தோலும் பாதிக்கப்படுவதோடு, கால் நரம்புகளின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தசைகளும் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்ததால் அவரது கால்கள் பெருமளவு உணர்விழந்த சம்பவத்தை அடுத்து, இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் நரம்பியல் பாதிப்பு ஏற்படும் என்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது உறவினர் ஒருவர் வீடு மாற்றுவதற்கு உதவச்சென்ற பெயர் குறிப்பிடப்படாத […]
கர்ப்பகாலத்தில் தாய்மார் அதிகமான பரசிட்டமோலை உட்கொண்டால், அது அவர்களது பிறக்கப்போகும் மகனின் இனப்பெருக்க சக்தியை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வலி நிவாரணியாக பலராலும் பயன்படுத்தப்படும் பரசிட்டமோல் எலிகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராயும் விஞ்ஞானிகளே இதனை தெரிவித்துள்ளனர். எலிகளில் மனிதக் கருவின் திசுக்களை செலுத்தி, ஒரு கர்ப்பம் போன்று பாவனை செய்து பரிசோதித்தபோது, பரசிட்டமோல் 7 நாட்களுக்கு கொடுக்கப்பட்டவற்றுக்கு, அதில் டெஸ்ட்துரோனின் அளவு மிகவும் குறைவாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்களுக்கான இனப்பெருக்க உறுப்புக்களை உருவாக்குவதில் […]
கருவகப் புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான புதிய சோதனை முறை ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ovarian cancer என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருவகப் புற்றுநோய் கண்டறியும் சாத்தியங்கள் மேம்படும் என்று இந்த சோதனை முறையை பரிந்துரை செய்திருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நாற்பத்தி ஆறாயிரம் பெண்களிடம் பதினான்கு ஆண்டுகள் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, கருவகப் புற்றுநோயை கண்டறியும் தற்போதைய பரிசோதனையைவிட, ரத்தப்பரிசோதனை மூலம் இரண்டுமடங்கு துல்லியமாக கருவகப் புற்றுநோயை கண்டறியமுடியும் என்று தெரியவந்திருக்கிறது. அதேசமயம் கருவகப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் உயிரை பாதுகாக்கும் […]
இலங்கையின் பல பகுதிகளில் பரவிவரும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் மரணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்புளுயென்சா ‘ஏ’யில் எச்1 என்1 எனப்படும் வைரஸ் காய்ச்சல் என இது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் பரவியிருப்பதாக வவுனியா அரச பொது மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் சுதர்சினி விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மற்றும் […]
ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக கண்நோய்க்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து தற்போதைய சூப்பர்பக் எனப்படும் பெரும்பாலான நுண்ணுயிர் கொல்லி மருந்துக்கு கட்டுப்படாத நோய்கிருமிகளை அழிக்க உதவும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வெங்காயம், வெள்ளைப் பூண்டு மற்றும் மாட்டின் பித்தநீர் ஆகியவை உள்ளடங்கிய 9 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயர்களின் நாட்டு மருந்து ஒன்று இந்த சூப்பர்பக்ஸ்களை கொல்லும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எம்ஆர்எஸ்ஏ எனப்படுகின்ற நோய்க்கிருமிகளை இந்த மருந்து கிட்டத்தட்ட முற்றாக அழித்ததைப் பார்த்த விஞ்ஞானிகள் பெரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். பிரிட்டிஷ் […]
மூன்று பேரின் உயிர்க்கலங்களை கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கின்றது. மனித செல்கள் ஒவ்வொன்றலும் ஒரு நியூக்ளியஸீம் பல மைடோகாண்ரியாக்களும் இருக்கும். மனித சல்களில் இருக்கும் இந்த மைடோகாண்ட்ரியாக்கள் பெண்களின் கரு முட்டைகளிலும் இருக்கும். செல்களில் இருப்பதைப் போலவே ஒவ்வொரு கருமுட்டையிலும் ஒரு நியூக்ளியஸீம் பல மைடோகாண்ரியாக்களும் இருக்கும். சில பெண்களின் கரு முட்டைகளில் இருக்கும் மைடோக்காண்ரியாக்கள் பாதிப்படைந்திருக்கும். இப்படி பாதிப்படைந்த மைடோக்கான்ரியாக்கள் இருக்கும் கரு முட்டையில் இருந்து உருவாகும் […]
கைகளால் எழுதிக் கற்கும் முறை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கைகளால் எழுதுவதற்கு பதில் கணினியின் விசைப்பலகை மற்றும் தொடுதிரைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் மேலதிகமாக கல்வி கற்கும் தற்போதைய நடைமுறை அவர்களின் படிக்கும் திறனை பாதிப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகின்றது. உலக அளவில் குழந்தைகள் பேனா மற்றும் பென்சிலைப் பயன்படுத்தி காகிதத்தில் எழுதும் போக்கு படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக, தற்கால குழந்தைகள் கணினிகளின் விரல்களைப் விசைப்பலகைளின் மூலம் பயன்படுத்தியும் […]