You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘செய்திகள்’ Category
யாழ் நகரில் சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு சுகாதாரப் பிரச்சனையாகவும், சமூகப்பிரச்சனையாகவும் உருவெடுத்து வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பல் வேறுபட்ட உடல், உள சமூகப் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந் நிலை அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணிகளாக விளங்குவது சிறுவர், பெரியோருக்கு இது சம்பந்தமான போதிய அறிவூட்டல் இல்லாமை. பொருளாதார நெருக்கடியால் தாய், தந்தை, உழைக்கச் செல்கின்றமையால் தம் பிள்ளைகள் மீதான கவனமின்மை. பெருகி வரும் சமூகச் சீர்கேட்டு நடவடிக்கைகள். பொருளாதார நெருக்கடிகள். கட்டுப் பாடற்ற தொலைபேசி […]
யாழ் நகரில் அண்மைக் காலமாக மரங்கள் வெட்டப்படும் வீதம் அதிகரித்து வருகின்றது. வீதியகலிப்பு, புதிதாக நடைபெறும் கட்டட வேலைகள் போன்றவற்றாலும், தற்போது நடைபெற்று வரும் புகையிர பாதை அமைப்பு நடவடிக்கையாலும் மக்களுக்கு தாவரங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு போதாமையாலும், மற்றும் பல்வேறு காரணங்களாலும் பல பயன்தரு மரங்கள் வெட்டியழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் சூழல் தாக்கங்களைக் குறைப்பதற்கும், தடுப்பற்கும் பல்வேறு மட்டங்களிலும் மரம் நாட்டும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இம் மரம் நாட்டும் நடவடிக்கைகள் இன்னும் […]
“குழலினிது யாழினிது என்பர் தம் மழலைச்சொல் கேளாதவர்” என்பதை யாமறிவோம். இவ்வாறான பெறுதற்கரிய குழந்தைச் செல்வங்களின் வாழ்க்கை முளையிலேயே கருவதற்கு யார் காரணம்?? எழுத்தறிவு வீதம் மிகவும் உயர்வாக உள்ள யாழ்மாவட்டத்தில் தவறுதலாக நச்சுப்பதார்த்தங்களை உட்கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. சராசரியாக 4 குழந்தைகள் இவ்வாறாக யாழ் வைத்தியசாலைகளில் மாதந்தோறும் அனுமதிக்கப்படுகின்றார்கள். பெற்றோரிடம் அல்லது குழந்தையைப் பராமரிப்பவரிடம் இது பற்றி வினவினால் “சோடா என்று நினைத்து மண்ணெண்ணையைக் குடிச்சிட்டான்”, “ஆச்சிக்கு மனநோய் இருக்கு […]
உலக சுகாதார தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களிடையே நடத்தும் கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகள். கட்டுரை தலைப்பு: ஆரோக்கியமான வாழ்வு, உள்ளடக்கம்: ஆரோக்கியமான வாழ்வின் அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் கட்டுரையானது அமைவதோடு, ஏ4 தாளில் 3-4 பக்கங்களுக்குள் இருத்தல் அவசியமாகும். வயதுப்பிரிவு: கீழ்ப்பிரிவு தரம்1முதல் 5 வரை. மத்திய பிரிவு: தரம் 6 முதல் 10 வரை. மேற்பிரிவு: தரம் 11 க்கு மேற்பட்டோர். சித்திரம் தலைப்பு: ஆரோக்கியமான வாழ்வு. உள்ளடக்கம் ஆரோக்கியமான வாழ்வின் அவ சியத்தை வலியுறுத்தும் […]
முதிய தந்தையருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலப் பிரச்சினைகள் 45 வயதுக்கு மேற்பட்ட தந்தையருக்கு பிறக்கும் குழந்தைகள் மனநலப்பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ளும் ஆபத்து இருப்பதாகக் காட்டும் ஆதாரங்களை தாங்கள் கண்டறிந்திருப்பதாக ஸ்வீடன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 1993 இலிருந்து 2001ம் ஆண்டு வரை ஸ்வீடணில் பிறந்த 26 இலட்சம் குழந்தைகள் குறித்த தரவுகளில் பரிசீலித்த ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் 20 இலிருந்து 24 வயதான தந்தைகளுக்கு பிறக்கும் குழந்தைகளைக் காட்டிலும் முதிய தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு […]
எல்லோருக்கும் இறந்த பின்புதான் கொள்ளிக்கட்டை வைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தமக்கும், தம்மைச்சுற்றி இருப்பவர்களுக்குமாகச் சேர்த்து தம் வாயிலேயே மரண சாம்பலை மங்களமாக வைத்து மகிழும் மனிதர்கள் புகைப்பிடிப்பவர்களே! புகைத்தலினால் உடலின் அத்தனை அங்கங்களும் பாதிப்படைவது நாம் அறிந்ததே. புகைத்தலினால் நுரையீரல் புற்றுநோய், நீண்டகால நுரையீரல் நோய்கள், மாரடைப்பு, உயர்குருதி அமுக்கம், நீரிழிவு, அங்க இழப்பு, சிறுநீரக நோய்கள்…. என அடுக்கிக் கொண்டே போகலாம். புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாற்பது வயதுக்கு முன்பாக அப்பழக்கத்தைக் கைவிடுகிறார்கள் என்றால் […]
அண்மைக் காலமாக வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்களும், பாதிப்புக்களும் அதிகரித்து வருகின்றது. வீதி அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருவதாலும் பல வீதிகள் திருத்தப்பட்டுள்ளதாலும் பாதுகாப்பு முறைகளை கவனத்தில் எடுக்காது வாகனம் செலுத்துவதால் இந்நிலமை பெருமளவில் அதிகரித்து காணப்படுகிறது. இளைஞருக்கு பெற்றோர்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ நவீன உந்துருளிகளை (motor bike) வாங்கிக் கொடுப்பதாலும், பொத்தமான பயிற்சிகள் இன்றி வேகமாக ஒடத்தலைப்படுவதாலும், விபத்துக்களுக்குள்ளாகி பாதிப்பினை இளம் சமூகம் எதிர் நோக்குகின்றது. வாகன அனுமதிப் பத்திரமின்றி வாகனம் ஓடுபவர்களினதும் எண்ணிக்கை […]
யாழ்ப்பாணத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெறும் தகவல்களும் இந் நிலையை உறுதி செய்கின்றன.
உலகில் புகைப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 கோடி என்ற அளவுக்கு உயர்ந்து விட்டதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் உலக மக்கள் தொகையில் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால், புகைப்போரின் விகிதம் குறைந்து வருவதாக அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துருக்கிறார்கள். உலக மக்கள் தொகை கடந்த 50 ஆண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மற்றும் இந்தோனேஷியா போன்ற சில நாடுகளில் ஏறக்குறைய பாதிக்கும் அதிகமான ஆண்கள் […]
காரைநகர் வட மத்தி முதியோர் பகல் பராமரிப்பு இல்லத்தில் நீரிழிவு சிகிச்சை நிலையத்தால் Dr.M அரவிந்தன் (அகஞ்சுரக்கும் தொகுதியியல் நிபுணர்) தலைமையில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.