You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘செய்திகள்’ Category
மனித வாழ்வில் நல்ல சம்பவங்களும் தீய சம்பவங்களும் மாறிமாறி நடந்த வண்ணம் இருக்கின்றன. நடந்த முடிந்த தீயவற்றை மட்டும் மீண்டும் மீண்டும் சிந்தித்து மனம் நொந்து கொண்டு இருப்போமாயின் நாம் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பம் அதிகமாகும். நாம் அன்றாடம் நல்ல விடயங்களை சிந்திக்க கூடியளவு நேரத்தையும் பிரச்சனையான விடயங்களைச் சிந்திக்க குறைந்தளவு நேரத்தையும் ஒதுக்கி கொள்ள வேண்டும். மனித மூளையும் இதற்கு ஏற்ற வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகள் மனிதனின் நல்ல நினைவுகள் விரைவில் மங்குவதில்லை […]
உலகெங்கும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இதனைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதமே. தற்போது அறிமுகமாகி இருக்கும் ஒரு புதிய எளிய இரத்தப்பரிசோதனை மூலம் மார்பகப்புற்று நோய் ஏற்படும் ஆபத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியும் வாய்ப்பு ஏற்ப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் பல வேண்டத்தகாத விளைவுகளை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். கேன்சர் ரிசர்ச் என்கிற மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த […]
கரப்பான் பூச்சியைத் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். ஆனால் இந்த கரப்பான் பூச்சியானது மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்றாதா என்பது சிலருக்கே தெரிகின்றது. கரப்பான் பூச்சியானது தனது மலக்கழிவு உமிழ் நீரினூடாக உணவு, நீர் என்பவற்றினை மாசடையச் செய்கின்றது. இக்கழிவுகளால் வயிற்றோட்டம், உணவினை பழுதடையைச் செய்கின்ற பக்றீரியாக்கள் செறிந்து காணப்படுகின்றன. கரப்பான் பூச்சியின் மலக்கழிவு, உடற்பாகம் காற்றிலே பரம்பலடைகின்றது. இக்காற்றினை சுவாசிப்பதினால் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை ஏற்படுகின்றது. இதனால் சிறுவர்கள் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றார்கள். உணவு, நீர், என்பவற்றை தகுந்த சுகாதார […]
யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியில் புற்றுநோயாளரின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருவது அறியப்பட்டுள்ளது. இதில் மனவருத்தத்திற்குரிய விடயம் யாதெனில், இந்தப் புற்றுநோய்களில் பாதிக்கும் அதிகமானவை பொருத்தமான நடவடிக்கைகள் மூலம் தவிர்த்திருக்கக் கூடியதாக இருப்பதேயாகும். புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்ப்பது எவ்வாறு என்பது சம்பந்தமான தகவலை யாவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பது சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான புற்றுநோய் குறித்த அறிக்கையை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம், தடுக்கப்படக்கூடிய புற்றுநோய்க் காரணிகளாக: புகை பிடித்தல் கிருமித்தொற்று […]
பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்று நோயால் இறக்க நேரிடும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. எவ்வளவுக்கெவ்வளவு கொட்டைகளை சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் நாம் வாழலாம் என்று “நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை”யில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வந்துள்ளன. தினமும் ஒரு […]
எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ். மருத்துவ பீடத்தில் (கூவர் கேட்போர் கூடம்) காலை 9 மணிக்கு நீரிழிவு நோயாளர்களுக்கான பாதப் பராமரிப்பு மற்றும் பாதணிகள் உபயோகம் சம்பந்தமான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தியாவில் இருந்துவருகைதரும், பாதபராமரிப்பில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் நீரிழிவு நோயாளர்களுக்கான கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது. பாத பராமரிப்புபற்றி அறிந்து கொள்ள விருப்பமுடைய நீரிழிவுநோயாளர்களும், பாதங்களில் பாதிப்புள்ள நீரிழிவு நோயாளர்களும் இந்தக் கருத்தரங்கில் இலவசமாகப் பங்கு பற்றலாம். பாதணிகள் தேவைபற்றிய ஆய்வுகள் நீரிழிவுநோயாளர்களுக்கு இலவசமாகச் செய்து […]
பொதுவாக நம் வாழ்க்கையில், குடும்ப சுமைகளை ஆண்களா, பெண்களா சுமக்கின்றனர் எனும் கேள்வி இருந்து வருகின்றது. தற்போதைய சூழ்நிலை காரணமாக பல குடும்பச்சுமைகளை பெண்களே தனிமையாக வெற்றிகரமாகத் தாங்கி குடும்பத்தினை நல்ல முறையில் நடாத்தி வருகின்றார்கள். ஆண்கள் பொதுவாக குடும்பத்திற்கான வருமானத்தைத் தேடிக்கொள்வதில் பெரும்பங்கு ஆற்றினாலும் பெண்கள் குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டுவதற்கு மேலதிகமாக குடும்பப் பராமரிப்பு, சமையல், பிள்ளைகளின் கல்வி போன்ற பல்வேறு விடயங்களை கவனிக்க வேண்டிய நிலை இருக்கின்றது. பல வகையான வேலைகளை ஒரே நேரத்தில் கொடுக்கும் […]
பாடசாலை மாணவர்களிடையே சலரோகமும் சலரோகத்திற்கு முந்திய நிலையும் அதிகரித்து வருகின்றது. இந்நிலைமைக்கான காரணிகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். ஒடி விளையாடுவதற்கான நேரங்கள் குறைக்கப்படட்டு தொடர்ச்சியான கல்விச் செயற்பாடுகள் (மாலை நேர கற்பித்தல்) குடிப்பதற்கு அதிகளவில் மென்பானங்களை பாவித்தல் ஆரோக்கியமற்ற உணவுகளை பெருமளவில் உள்ளெடுத்தல் (உதாரணம் மிக்சர், றோல்,சொக்கலேட், ஐஸ்கிறீம் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் மதிய உணவுகளும் ஆரோக்கியமற்ற உணவாக காணப்படல்) தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் அதிகளவு நேரத்தை செலவிடல் பெற்றோர்களிடையே பிள்ளைகளின் நிறை பேணுதல் பற்றி போதிய அறிவின்மை. உடல் […]
கர்ப்பகாலங்பளில் ஒரே வகையான உணவுகளைத் தொடர்ந்து உண்பதிலும் பார்க்க பல்வேறு வகையான உணவுகளை மாறி மாறி உண்பது பல வழிகளிலும் நல்லது எடை ஆராய்ச்சிகள் நிரூபித்து வருகின்றன. இது பலவகையான ஊட்டச்சத்துக்களை கர்ப்பிணித்தாய்மாருக்கும், வளரும் சிசுவிற்கும் எதிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வாமை தொடர்பான நோய்களைக் குறைக்கும் என்று சில ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன. ஒவ்வாமை ஒரு சிலருக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும் அதை ஆரம்பக்கட்டத்திலேயே தடுக்க முடியுமா என்பது குறித்தும் மருத்துவ உலகில் நீண்ட நாட்களாகவே […]
படிக்கும் மாணவர்களுக்கு பகல் நேர குட்டித் தூக்கம் கற்கும் ஆற்றலை அதிகரிக்கும். தற்போது எமது பிரதேசத்தில் மாணவர்களுக்கு போதுமான ஓய்வோ அல்லது அவர்களின் ஏனைய செயற்பாடுகளுக்கான நேரமோ ஒதுக்கப்படாமல் அவர்களை முழு நேரக் கல்விச் செயற்பாடுகளுக்காக மட்டும் நிர்பந்திக்கப்படும் நிலமை உருவாகியுள்ளது. இது அவர்களின் கற்றலையும் ஆளுமை வளர்ச்சியையும், அவர்களின் எதிர்கால ஆற்றலையும் எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. மாணவர்களுக்கு ஓய்வும் பகல் நேர குட்டித்தூக்கமும் எவ்வளவு தூரம் கற்றல் செயற்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் […]