You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘செய்திகள்’ Category
சிறுவர்களுக்கான ஊட்டச்சத்துள்ள புதிய உணவு வகைகளைக் கண்டறிவதற்காக நடாத்ப்பட்ட சமையல் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சைவ உணவு வகை தயாரிப்பு- முதலாவது இடம்– பாவற்காய் சத்துக் கூழினைத் தயாரித்த திருமதி. எம். மகேஸ்வரி இரண்டாம் இடம்– பாசிப்பயறு, உழுந்து பயற்றம்மாவடை, உழுந்து உப்புமா ஆகியவற்றினைத் தயாரித்த திருமதி.கிருபனா பிறேம்குமார் மூன்றாம் இடம்– பலாக்காய்ப் பிரட்டல் தயாரித்த திருமதி.வ.வேல்சிவானாதன், பயிற்றம் தாளிசக் கலவை தயாரித்த திருமதி. எஸ். கீதநந்தினி ஆறுதல் பரிசு பெறுவோர்– புரதக் குண்டுத் தோசை – […]
09.02.2014 அன்று யாழ் போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிப் பாடசாலையில் சமையல் போட்டி நடைபெற்றது. இதில் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான ஆரோக்கிய உணவை மேம்படுத்தும் முகமாக தேர்ந்து எடுக்கப்பட்ட 26 போட்டியாளர்கள் தாங்கள் புதிதாகக் கண்டுபிடித்த உணவை அறிமுகப்படுத்தினார்கள். பல் துறைசார் வல்லுனர்கள் 10 பேரும், 15 பாடசாலை மாணவர்களும் மத்தியஸ்தர்களாகப் பங்குபற்றினார்கள். சுவை, தரம், போசணைப் பெறுமானம், செலவு குறைந்த உணவு வகை, சமைக்கக் கூடிய நேரம், மூலப் பொருட்களுக்கான கிடைக்கும் தன்மை போன்றன கருத்தில் […]
கடந்த பல வருடங்களாக, யாழ் போதனா வைத்தியசாலையில், குழந்தைகள் பராமரிப்புப் பிரிவானது, ஒரு சிறிய இடத்திலேயே, இடவசதிக் குறைவுடன் இயங்கி வந்தது. கடந்த வருடங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் பலனாக, பல்வேறு உபகரணங்கள் பெறப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவாக இயங்குவற்கு வாய்ப்பு உண்டாகியது. எனினும் இடவசதிப் பற்றாக்குறையினால் அதன் முழுப் பலனையும் அடைய முடியவில்லை. அண்மையில் யாழ்போதனாவைத்திய சாலையின் முன்னைய மகப்பேற்று அறுவைச் சிகிச்சை கூடப் பகுதியானது புனரமைக்கப்பட்டு 16.01.2014 அன்று Dr. முருகையா தம்பதிகளால் திறந்து வைக்கப்பட்டது. […]
யாழ் மருத்துவ பீட மாணவர்களும், யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையமும் இணைந்து சுகதேகியா வாழ்வதற்கு சிறுபராயத்திலிருந்து சுகாதார நேர்த்தியான உணவுவகைகளை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் பங்கு பற்றி சுவையாக பாதுகாப்பான உணவுவகைகளை யாழ்ப்பாண சிறார்களுக்கு அறிமுகப்படுத்த சமயற்கலை நிபுணர்களுக்கும், புதிய உணவுகளை சமைப்பதில் ஆர்வமுடையவர்களுக்கும் இதில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கண்டறியும் புதிய உணவு வகைகளை நடாத்தப்படவுள்ள மாபெரும் சமையல் போட்டியில் செய்து காண்பிக்க வேண்டும். […]
யாழ்ப்பாணத்தில் தற்போது போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. இலங்கையில் போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தல் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு 2013ம் ஆண்டிலேயே கூடுதலாககாணப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ள நிலையில் யாழிலும் முன்னைய காலங்களிலும் பார்க்க இச்சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது அண்மையில் யாழிலும் சட்டவிரோத போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அண்மைய நாட்களில் கைப்பற்றப்பட்ட இரண்டு ஹெராயின் கொள்கலன்கள் உட்பட இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக சுமார் […]
சுற்றாடல் குளிர்ச்சி பெறவும், ஆரோக்கியமான ஜம்பு பழ பாவனையை அறிமுகப்படுத்தவும் யாழ் போதனா வைத்திய சாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையம் யாழ் குடாநாடு முழுவதும் 1ம் கட்ட நடவடிக்கையாக 5000 ஜம்பு மரக்கன்றுகளை நாட்டும் திட்டத்தை நிறைவு செய்திருக்கின்றது. இத் திட்டத்தின் மூலம் 16 பாடசாலைகள், 55 வைத்தியசாலைகள், முதியோர், சிறுவர் இல்லங்கள், உட்பட 13 சமூக அமைப்புகளுக்கும் பொது நூலகங்கள், நீதிமன்றம் மற்றும் வங்கிகள் உட்பட்ட பல்வேறு இடங்களில் ஜம்பு மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. இதற்க்காக நிதி […]
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, என 5 மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாணத்திலே யாழ் போதனாவைத்தியசாலை மட்டுமே உயர் மட்ட வைத்திய வசதிகளைக் கொண்ட (Tertiary) வைத்திய சாலையாக காணப்படுகின்றது. இங்கு வைத்தியத் தேவையை எதிர் நோக்கியுள்ள மொத்த சனத்தொகை 1.2 மில்லியன் எனினும் இத் தொகை மேலும் அதிகரித்துச் செல்வதையே காணக்கூடியதாக இருக்கின்றது. அதற்க்கான பிரதான காரணங்களாவன. அயல் நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தம் தாய் மண்ணிற்குத் திரும்பி வரும் நிலை தற்போது […]