ஒரு பாடசாலையானது அறிவானதும் ஆரோக்கியமானதுமான மாணவ இலக்கை அடையவேண்டுமானால் ஆரோக்கியமான பாடசாலை உணவகத்தை ஆரம்பித்தல் வேண்டும்.
இதன் மூலமே மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தையும் பாடசாலை இலக்கையும் அடைய முடியும். இவ்வாறான ஆரோக்கிய மான பாடசாலை உணவகத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பல.
போஷாக்கான சுத்தமான உணவு கிடைக்க வழியேற்பட ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துதல், ஆரோக்கியமான போஷாக்கு நிலையிலுள்ளமாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தொற்றா நோய்களின்தாக்கத்தைக்குறைத்தல், ஆரோக் கியமான உணவுப்பழக்கங்கள் தொடர் பான தகவல்களை வீட்டுக்கும் சமூகத்துக்கும்பரம்பலுறச்செய்தல்.கல்வி இலக்கு அடைவு மட்டத்தை உயர்த்துதல் போன் றவை ஆரோக்கியமான உணவகத்தால் கிடைக்கும்நன்மைகளில் சிலவாகும்.
ஆரோக்கியமான உணவு வழங்கல் மூலம் சரியான உணவுப்பழக்கத்தை மாணவர் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலம் அறிவுள்ள சிறந்த ஆரோக்கியமான எதிர்காலச் சந்ததியை ஏற்படுத்தி பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் காத்திரமான பங்களிப்பை ஒவ்வொரு பாடசாலைகளும் பெற்றுக்கொடுக்க முடியும். தவறான உணவுப் பழக்கங்கள் எதிர்கால சந்ததியின்உடல் உள விருத்தியில் பல பாதக விளைவுகளையே ஏற்படுத்தும்.
ஓர் ஆரோக்கியமான பாடசாலை உணவகத்தால் வழங் கப்பட வேண்டிய சேவைகளாக எதிர்பார்க்கப்படுபவை யாதெனில்,
- சரியான போசணைப் பழக்கத்தை ஏற்படுத்துதல்
- அறிவுட்டுதல்-ஆரோக்கியமற்ற உணவுகளை உள்ளெ டுப்பதால் ஏற்படும் பாதிப்புக்களை காட்சிப்படுத்தல்
- ஆரோக்கியமான உணவுகளை தாராளமாகப் பெற்றுத் தருதல்
- உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல்.
- உணவு வழங்கலை ஏற்படுத்துதல்
மாணவர்கள் எதிர்காலச் செல்வங்கள். அவர்களின் நோயற்ற நிலையை பாதுகாப்பதோடு எப்போதும் அவர் களின் ஆரோக்கியமான வளர்ச்சி பற்றி கருத்திலெடுத்து. உணவகத்தை நடத்திச் செல்லும் வழிகாட்டல் அவசியம். சரியான முகாமைத்துவம் மூலம் ஆரோக்கிய உணவுச் சூழலை ஏற்படுத்தி, ஆரோக்கியமான உணவைத் தெரிவு செய்யும் வாய்ப்பை எற்படுத்துதல் அவசியம். வாழ்க்கைக் கான ஆரோக்கிய உணவுத் தகவல்களை வழங்கும் நிலையமாக பாடசாலை உணவகத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
இவற்றை நிறைவேற்றிக்கொள்ள பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDS) சிறந்த பங்களிப்பை வழங்க முடியும். இதற்கென பாட சாலை உணவுக்குழு எனும் உபகுழுவைபாடசாலை அபி விருத்திச் சங்கம் உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். உணவகம் தொடர்பான மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளுதலே இதன் பிரதான பணியாகும். இதில் அதிபர், சுகாதார மேம்பாட்டுப் பொறுப்பதிகாரி, ஆசிரியர் ஒருவர், பொதுச்சுகாதார பரிசோதகர், சிறுவர்சுகாதாரகழக அங்கத்தவர்கள், சுற்றாடல் கழக உறுப்பினர் ஒருவர். பழைய மாணவ சங்க உறுப்பினர் ஒருவர், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர், மாணவ தலைவன், தலைவி, பாடசாலை நுகர்வோர் வட்டத்தின் உறுப்பினர் என ஆறுபேர் அல்லது பன்னிரண்டு பேர் கொண்ட குழுவாக இது அமையலாம்.
பாடசாலை உணவுக்குழு மாதாந்தம் ஒன்றுகூடி தவ ணைக்கொரு முறை பாடசாலை உணவகம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை தயாரித்து கோட்டக்கல்வி, உதவிக் கல்விப் பணிப்பாளருக்கும் வலயக் கல்வி அலுவலக சுகாதாரமேம்பாட்டுக்குழுவுக்கும் அனுப்பிவைத்தல் நன்று.
இதனைக் கண்காணிக்க வேண்டியது வலயக் கல்விப் பணிப்பாளரின் பொறுப்பாகும். அது தொடர்பான பின் தொடராய்வு அறிக்கையை பாடசாலை உணவுக்குழுவுக்கு வழங்குதல் வேண்டும். அவசியமான நடவடிக்கைகளை பாடசாலை உணவுக் குழுவே எடுக்கும். உணவுப் பொருள்களின் விலை தீர்மானித்தலும் விலை மாற்றங்களும் பாடசாலை உணவுக் குழுவின் அனுமதியுடன் மாத்திரம் மேற்கொள்ளப்படுவதுடன் விலைப்பட்டியலும் உணவகத்தில் காட்சிப்படுத்தல் நன்று.
மாணவர்களின் ஆரோக்கியம், போசாக்கு என்பவற்றை மேம்படுத்தும் வகையில் பாடசாலை உணவுக்குழுவால் திட்டமிடப்படல் வேண்டும். பாடசாலை அபிவிருத்திச்சங் கத்துக்கு கிடைக்கும் வருமானத்தைக் காட்டிலும் மாணவர்களின் நலனே முன்னுரிமைப்படுத்தப்படல் வேண்டும். இதனை ஒரு நலன்புரி சேவையாகக் கருதி, மேற்பார்வை செய்து,உணவுவழங்கலை உறுதிசெய்தல் வேண்டும்.
வலயக் கல்விப் பணிப்பாளருடன் இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றைச் செய்து அதன் பிரதியை உணவகத்தில் காட்சிப்படுத்தலாம். இந்த உணவகத்தில் அதிக சீனி, அதிக உப்பு, அதிக எண்ணெய் சேர்ந்த உணவு வகைகளை விற்பனை செய்யாதிருத்தல்,உடன்உணவு(Fast Food), காபனேற்றப்பட்டபானங்கள், சோடாக்கள் என்பவற்றை விற்பனை செய்யாது விலக்குதல் வேண்டும். இதன்மூலம் ஒரு நாளில் ஆறு மணித்தியாலங்கள் வரை பாடசாலைகளிலேயே செலவிடும் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் பேணப்படும்.
உணவகத்தை நடத்துவோரைத் தெரிவு செய்யும்போது சில நிபந்தனைகளுக்கு அமைவாக தெரிவு செய்திடலாம். அதாவது எதிர்காலச் சமுதாய நலனை பிரதானப்படுத்தி எமது பாரம்பரிய, இயற்கையாகக் கிடைக்கின்ற உள்ளூர் உற்பத்திப்பொருள்களைக் கொண்டு உணவு தயாரித்தல், மாணவர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ற வகை யில்பலவிதமான, பலவகையான உணவைத்தயாரித்தல். இதற்கு அவர்களுக்கு ஆரோக்கிய உணவு சம்பந்தமான தேடல் இருத்தல் வேண்டும். அல்லாதுவிடின் ஆரோக்கிய உணவு சம்பந்தமான விழிப்பூட்டல் மற்றும் தெளிவுபடுத் தப்படல் வழங்கப்படல் வேண்டும். இதற்காக கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவத்துறையின் உணவு சம்பந்தமான அலகின் உதவியை பெற்றுக்கொள்ளலாம்.
எனவே ஆரோக்கிய உணவகத்தின் தேவை உணர்ந்து ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இந்த முயற்சியில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துக்கு ஆலோசனைகள் வழங்கி நேர் வழிநோக்கி பயணிக்க உதவிடலாம்.
மருத்துவர். பொ.ஜெசிதரன்
சுகாதார வைத்திய அதிகாரி
மாநகரசபை.
யாழ்ப்பாணம்