பிள்ளையானது சிறுவர் பாடசாலைக்கு (pre school) சென்ற பின்பு தான்பாடசாலைக்கு (School) செல்வார்கள். அதேபோல இன்றுஉலகில் காணப்படும் 95% க்கு மேற்பட்டநீரிழிவு (வகைII) நோயாளிகள் நீரிழிவுக்கு முந்தைய நிலை pre Diabetic என்ற நோய் நிலையை அடைந்த பின்புதான் அவர்கள் நீரிழிவு நோயாளிகளாக மாறுகின்றனர். எனவே ஒருவரை நீரிழிவுக்கு முந்தைய நிலையில் (pre Diabetic stage) கண்டறிவதன் மூலம் அவர் ஒரு நீரிழிவு நோயாளியாக மாறுவதைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். இந்த நோய் வருவதை கண்டறிவதற்கும் இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமான ஒரு சில ஆலோசனைகள்.
- பரம்பரையாக நீரிழிவு நோய் உள்ளவர்களின் பிள்ளைகள் 35 வயதில் இருந்தேநீரிழிவுக்கான குருதிப் பரிசோதனைகளை வருடத்துக்கு இரு முறைகளாவது கிரமமாக செய்து வருவதுடன் உணவுக் கட்டுப்பாடு, தேகப்பயிற்சி, மது, புகைத் தல் தவிர்த்தல் போன்றவற்றையும் கடைப் பிடிப்பதால் நீரிழிவு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் அல்லது பிற்போடலாம்.
- பொதுவாக அனுசேபக் கோளாறு (metabolic syndrome) உள்ளவர்கள் கீழ்க்காணும் அறிகுறிகளுடன் காணப்படுவார்கள். பரும னுடன் வயிறு தொந்தி பெருத்தவர்களாக (central obesity) இரத்த அழுத்தம் உள்ளவர்கள், குருதியில் கொழுப்பு:உள்ளவர்கள், இன்சுலின்எதிர்ப்புசக்தி உள்ளவர்கள் இந்த அறிகுறிகளில் இரண்டு அறிகுறிகளுக்கு மேல் காணப்படுபவர்கள் நீரிழிவுக்கான குருதிப் பரிசோதனைகளை அடிக்கடி செய்வது மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
- உடல்நிறை அதிகரிக்காது கவனித்துக்கொள்ளு தல். கலோரி குறைந்த சாதாரண உணவுகளை அளவுடன் உண்ணுதல். மற்றும் கட்டாயமான விரைவு நடைப்பயிற்சி செய்தல் அவசியம்.
- குழந்தைகளுக்கு கூடியளவுதாய்ப்பாலை ஊட்டி வளர்த்தல்.
- கர்ப்பம் தரித்த பின்னர் நீரிழிவு கண்டறியப்பட்டவர்கள் தமது குருதியிலுள்ள குளுக்கோஸின் அளவை வைத்தி ஆலோசனைப் படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆரோக்கிய மான வாழ்க்கை முறைகளுடன் மருந் துகளையும் (இன்சுலின் அல்லது பெற்போமின்) வைத்திய ஆலோ சனைப்படி பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகும். கர்ப்ப காலத்தில் மாத் திரம் நீரிழிவு காணப்படுகின்ற (Gestational diabetes)பெண்களுக்கு பிற்காலத்தில் நீரிழிவு (Type 2 diabetes) ஏற்படுவதற்காக சாத்தியக் கூறு மிக அதிகமாகும்.
- உங்களது நிறையில் அதிகளவு நிறையை உங்களது வயிற்றுப்பகுதியில் சுமந்தால் நீங்கள் (pre diabetic stage) நீரழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பதற்கான அபாயம் அதிகமெ னக் கருதப்படுகிறது.
- ஒருவரின் குருதியில் கொலஸ்ரோலின் அளவு கூடிக் காணப்படுகின்றபோது அதிலும் bad cholesterol கூடாத கொலஸ்ரோல் LDL கூடிக் காணப்படுதல், நல்ல கொலஸ்ரோலின் அளவு HDL குறைந்து காணப்படுதல் அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறானது அதிகரிக்கின்றது.
- ஒருவரின் HbA1C என்ற குருதிப் பரிசோதனை முடிவானது 5.7-6.4%க்குள் இருக்குமாயின் அவர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருக்கிறார் எனக் கருதப்படுகிறது. 6.5% அல் லது அதற்கு மேல் இருந்தால் அவருக்குநீரிழிவு நோய் இருக்கிறது எனக் கணிக்கப்படுகிறது. இந்தக் குருதிப்பரிசோதனையானது ஒருவருக்கு எந்த நேரத்திலும் செய்யப்படக் கூடிய தொன்றாகும்.
- நீரிழிவை நோக்கிச் செல்பவர்கள் குறைந்த கொழுப்புள்ள உணவுகள் (Low fat die) மற் றும் மரக்கறி, தானியங்கள் ஆகியவற்றுடன் இனிப்புமற்றும் கலோரி குறைந்த உணவுகளை எடுத்தல் அவசியமாகும். உணவுகளை உண் ணும் போது மிகவும் திருப்திப்படும் அளவுக்கு உணவு உண்பதையும் தவிர்க்க வேண்டும்.
- நீரிழிவு இல்லாத ஒருவருக்கு நாள் முழுவதும் அவரது குளுக்கோசின் அளவு 7o 16omg/dl (3.9 8.9m.mool/) வரை கூடிக் குறைந்து கொண்டே இருக்கும். அத்துடன் இரவு உணவுக்கு பின் மன உளைச்சல் இல்லாத ஓய் வுக்கு பின் காலையில் அவரது குருதிமட்டம் FBS-6100mg/ dl (3.9 d. 8.9 m. mool/)க்கு உட்பட்டும்.உணவுஅருந்தியபின்பு ,இரண்டு மணித்தியாலங்களின்பின்பு:குருதியில் குளுக்கோசின் அளவு160mg/ dl 8.9m.mool/l க்கு மேல் இருக்க கூடாது. இதைவிட கூடி இருப்பின் அவர் நீரிழிவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார். ஒருவருக்கு இரு சந்தர்ப்பங்களில் PPBSd 200mg/dl.11.1m.mool/lக்கு மேல் கூடி இருப்பின் அவருக்கு நீரிழிவுநோய் இருப்பதாக கணிக்கப்படுகிறது.
- நீரிழிவு நோய்க்கான கண்டறியும் பரிசோதனை (screening test) FBS d8 அல்லது 10 மணித்தியாலங்கள் உணவு உண்ணாது இருக்கும்போது 125mg kllக்கு மேல் (6.9mmol/l)இருத்தல் PPBS உணவு உள்ளெடுத்து2மணித்தியாலங் களின் பின்னர் 200mg/dl க்கு மேல் (19mmol/l) இருத்தல். நீரிழிவு நோய்க்கான குணங்குறியுடைய ஒருவருக்கு ஓர் அதிகரித்த பரீட்சைப் பெறுபேறும் குணங்குறியற்ற ஒருவருக்கு இரண்டு அதிகரித்த பரீட்சைப் பெறுபேறுகளும் நீரிழிவை உறுதிப் படுத்த அவசியமாகும்.
- நீரிழிவுக்கு முந்திய நிலை (pre diabetes stage) FBS 100 126 mg க்கு இடைப்பட்ட பெறுபேறு மற்றும் PPBS 140 200mg/d க்கு இடைப்பட்ட பேறு என்பனநீரிழிவுக்கு முந்தையநிலையாகக் கருதப்படுகின்றன.
- நீரிழிவு நோக்கி நகர்பவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பின்அதனைகைவிடுவதுமேலான செயலாகும். ஏனெனில் புகையிலையில் இருக்கும் Nicotin நிக்கொட்டின் என்ற இர சாயன பதார்த்தம் குருதியில் சேர்ந்து குருதியின் குளுக்கோசின் அளவைச் சீராகப் பேணவிடாது. அத்துடன் எமது தோலின் கீழ்ப்பகுதியில் குருதி யோட்டத்தை சீராக பேணமுடியாது தடுக்கிறது. அத்துடன் இன்சுலினை உறிஞ்சுவதையும் குறைக்கிறது.
ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.