குடிக்கு அடிமையான ஒருவர் அந்த அடிமை நிலையிலிருந்து மருத்துவ உதவியுடன் முழமை யாக வெளிவரலாம்.
ஒருவர் குடியை நிறுத்துவதென முடிவு செய் வாராயின் அவரிற்கு மருத்துவரின் ஆலோசனையும், மருத்துவச் சிகிச்சையும் தேவைப்படும். அத்துடன் அவர் சிறிதுகாலம் தனது வழமையான சூழலில் இருந்து வெளியே வந்து ஒரு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கி யிருக்க வேண்டி வரும்.
அவ்வாறானதொரு நிலையத்தில் அவருக்கு சரியான ஆலோசனைகளும், பரிவுடன் கூடிய சிகிச்சையும், தொடரச்சியான ஆதரவும், வழி காட்டல்களும் வழங்கப்படும்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014