செய்முறை
பயறை அவித்து பின்னர் அதனை இறக்கிவிட்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயினை சிறு சிறு துண்டுகளாக்கி அதனுள் மிளகு, சீரகம், கடுகு மற்றும் வெந்தயம் என்பவற்றுடன் சிறிதளவு தூளும் இட்டு நன்றாக எண்ணெயில் வதக்க வேண்டும் பின் அதற்குள் அவித்த பயற்றினை இட்டு நன்றாக பிரட்ட வேண்டும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக அதனைப் பிடித்துக் கொள்ள வேண்டும் பின் பயற்றம் மாவினை தண்ணீர் விட்டு குழைத்து பின்னர் பிடிக்கப்பட்ட உருண்டைகளை அதனுள் தோய்த்து இறுதியாக Oven இல் வைத்து வெப்பமேற்ற வேண்டும்.
தேவையான பொருட்கள்
பயற்றம்மா | 500 கிராம் |
பயறு | 750 கிராம் |
மிளகாய்த் தூள் | சிறிதளவு |
கடுகு | சிறிதளவு |
சீரகம் | சிறிதளவு |
மிளகு | சிறிதளவு |
உள்ளி | சிறிதளவு |
உப்பு | தேவையானளவு |
வெந்தயம் | சிறிதளவு |
வெங்காயம் | 100 கிராம் |
பச்சைமிளகாய் | 50 கிராம் |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி. துவாரகா சிவனேசன்