யமகா
செய்முறை
கரட், மிளகாய்,வெங்காயம் என்பவற்றை சிறு துண்டுகளாக வெட்டவும். உளுத்தம்மாவுடன் இவற்றைச் சேர்த்து முளை விட்ட வெந்தயம், மல்லி, பயறு, தேங்காய்ப்பூ என்பவற்றை சேர்த்து குழைக்கவும். உப்பு தேவையானளவு சேர்க்கலாம். ரொட்டி பதத்திற்கு குழைத்து ரொட்டி போல் தட்டி தோசைக்கல்லில் சூடாக்கி வெந்ததும் மறுபக்கம் திருப்பி எடுக்கவும்.
தேவையான பொருட்கள்
உளுத்தம்மா | 100 கிராம் |
பயறு | 25 கிராம் |
கரட் | 25 கிராம் |
வெந்தயம் (முளை) | 25 கிராம் |
வெங்காயம் | 25 கிராம் |
மல்லி (முளை) | 25 கிராம் |
மிளகாய் | 25 கிராம் |
தேங்காய்ப்பூ | சிறிதளவு |
நல்லெண்ணெய் | 1. மே. கரண்டி |
உப்பு | தேவையானளவு |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திரு.சிற்றம்பலம் சிவஞானராஜா
Posted in சிந்தனைக்கு