முத்தமிர்தம்
செய்முறை
முட்டையை நன்கு அடிக்கவும். பால், அடித்த முட்டை, றஸ்க் தூள் என்பவற்றை நன்கு கலக்கவும். கடைசியில் 1 தே.கரண்டி இனிப்பூட்டி சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் கலவையை ஊற்றி அதன் வாய்ப் பகுதியை ஈயக்கடதாசியால் மூடிக் கட்டவும். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அப் பாத்திரத்தில் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து அவித்து எடுக்கவும்.
தேவையான பொருட்கள்
பசுப்பால் | 200ml |
முட்டை | 1 |
றஸ்க்தூள் | சிறிதளவு |
செர்ரிப்பழம் | சிறிதளவு |
இனிப்பூட்டி | தேவையானளவு |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி.சிவானந்தராணி துரைசிங்கம்
Posted in சிந்தனைக்கு